இருள் மறைத்த நிழல் (தேனு) - 10
பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இரவு உணவு வேலையும் வந்தது. ஆனால் நளந்தன் வரவில்லை. முகம் வாடிய பெரியவர், "அவன் ஏதாவது பார்ட்டி, கீர்ட்டி என்று போயிருப்பானம்மா. அவனுக்காகக் காத்திருந்தால் உடம்பை கெடுத்துக் கொள்கிறேன் என்று அதற்கும் குதியாய் குதிப்பான். யாருக்காக உடம்பைப் பார்த்துக்கொள்ளவேண்டும்? ச்சு..என்னவோ இன்றைக்கு நீ இருக்கிறாய்.. நாம் சாப்பிடலாம் வா " என்று மனம் நோக சொன்னவர், அவளை டைனிங் டேபிளுக்கு அழைத்து போய் 'இதை சாப்பிடு, இன்னும் சாப்பிடு, இதைக் குடி, அதை குடி' என்று பார்த்து பார்த்து அவளை உண்ண வைத்தார். புது இடத்தில், சங்கோஜத்தில் அவள் ஒழுங்காக சாப்பிடுவாளோ மாட்டாளோ என்ற கனிவு..பால்ய சிநேகிதர் பேத்தியிடம் இத்தனை ஈடுபாடா? பாசத்திற்கு ஏங்குகிறார் மனிதர்! நெகிழ்ந்து போனாள் மிதுனா.
இரவு தன்னறைக்குச் சென்று கதவடைக்க போனபோது தான், 'இந்த கதவு சரியாக சாத்தாதே' என்று நினைவிற்கு வந்தது. இந்த ராத்திரியில் தாத்தாவிடமோ, வேலை ஆட்களிடமோ தொந்தரவு செய்வதும் சரியாகாது..சரி..முடிந்தவரை கதவை சாத்திவிட்டு படுத்துக் கொள்ள வேண்டியதுதான். எப்படியும் இவள இந்த அறையில் தங்குவது அந்த நளந்தனுக்குத் தெரியும். காலை போல தன்னிச்சையாக கதவை அவன் திறக்க மாட்டான். கோபக்காரன் என்றாலும் கண்ணியமானவன்..அவள் நிலை கண்டு, அப்படி நொடியில் திரும்பி நின்றுகொண்டானே !. வேலை ஆட்களும் அனுமதி கேட்டு தான் உள்ளே வருவார்கள்.. எனவே பாதுகாப்புப்பற்றி கவலை இல்லை என்றே தோன்றியது அவளுக்கு. உடை மாற்றுவதை மட்டும் இனி குளியல் அறையிலேயே முடித்துவிட வேண்டும்..குறைந்தபட்சம் தாத்தாவிடம் சொல்லி தாழ்ப்பாளை சரி செய்யும்வரை.
குளியலறையும் ரொம்பப் பெரியதுதான்.உள்ளே தனி வார்ட்ரோபு கூட இருந்தது. ஆளுயர கண்ணாடி பொருத்தப்பட்ட sliding door-உடன். Shover-கு ஒரு சதுரம், அதை அடுத்து ஒரு பாத் டப், சின்ன அரைகதவுக்கு அப்பால் ஒரு toilet. தாராளமாக உள்ளேயே உடை மாற்றலாம்.
முடிவு செய்தது போன்றே கதவை நெட்டித் தள்ளி இயன்றவரை அடைத்துவிட்டு ஒரு நைட்டியை எடுத்து கொண்டு குளியலறையில் மாற்றிக்கொண்டாள். அந்த டபிள் குஷன் கட்டிலில் அமர்ந்து ஒரு நிமிடம் இறைவனை தியானித்து அங்கிருந்த Comforter-ஐ கழுத்துவரை இழுத்து போர்த்திக் கொண்டு சுந்தரம் தாத்தாவிடம் பேசியவற்றை அசைபோட்டவாறு உறங்கியும் போனாள்.
In episode 6-10,a nice prelude to Mithuna's inevitable love towards Nalandan. I am thinking that the time given to Nalandan's thatta's thoughts/talks with Mithuna are needed later to develop critical parts of the story.
ReplyDeleteIt is so nice to hear your thoughts after each set of episodes you finish reading! You are right in your thinking.. that was my idea too while developing the story. Eager to hear from you as and when you feel like thinking ouit aloud.
ReplyDeletePls feel free pour in raw criticisms too if any. I take that positively and gracefully. :-)
பதிவுக்கு நன்றி தேனு
ReplyDeleteஉங்களிடம் முதலில் ஒன்று சொல்ல வேண்டும் !
தன்னை நிழல் போல் தொடரும் நேசத்தை இருளில் தேடும் ஒரு இளைஞனின் மென்மையான காதல் கதை என்பதை படித்து விட்டு
சரி ! ஒரு ஆண் சொல்லும் கதையாக தான் இருக்க போகிறது என்று தவறாக எண்ணி கதையை படிக்காமல் போய் விட்டேன்
அப்புறம் திரும்பவும் படிக்க வந்த போது தான் தெரிந்தது
இது மிதுனா சொல்லும் மனம் கவர்ந்த கதை என்று .......
//அவளை டைனிங் டேபிளுக்கு அழைத்து போய் 'இதை சாப்பிடு, இன்னும் சாப்பிடு, இதைக் குடி, அதை குடி' என்று பார்த்து பார்த்து அவளை உண்ண வைத்தார். புது இடத்தில், சங்கோஜத்தில் அவள் ஒழுங்காக சாப்பிடுவாளோ மாட்டாளோ என்ற கனிவு..பால்ய சிநேகிதர் பேத்தியிடம் இத்தனை ஈடுபாடா? பாசத்திற்கு ஏங்குகிறார் மனிதர்! நெகிழ்ந்து போனாள் மிதுனா. //
பெரியவரின் அக்கறையையும் அதனை உணர்ந்த மிதுனாவும் பாராட்டுரியவர்கள் .......
வளரட்டும் அவர்களின் பாச பிணைப்பு என்று நானும் வாழ்த்துகிறேன் ......
neenga solrathum correct-thaan. ithu oru "azhagana" pen (nambala mathiri oru pen.. right-a priya? ;) ) sollum kathai-nu sonna thaan poruththamaa irukkum.
ReplyDeleteana parunga, aan sollum kathainu potta kooda, rasanaiyatra aan thilagangal (jenmangal-nu kooda padikalam.. anaa naan appidi sollalai-pa) ithai padikathu. ROFL!
ஹ ஹா ! நீங்களும் என்னோட தோழி (சிட்னி யில் வசிக்கும் ஜானு .. http //tiraikadal .wordpress .com // )
ReplyDeleteபோலவே சொல்லறீங்க ............
ஜானு கதை ,கவிதை ,கட்டுரை என்று பிரமாத படுத்தி இருக்கா
என்ன இப்போ ஆன்மிகத்தில் ரொம்ப நாட்டமா இருக்கா
நேரம் கிடைக்கும் போது ஜானு வோட ப்ளாக் போய் பாருங்க தேனு
அப்பாவி தங்கமணி (புவனா ) விடம் உங்களை பற்றி சொல்லி இருக்கேன் .,விரைவில் அவர் வருகையை நீங்க எதிர்பார்க்கலாம்
ஏதோ யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் !
kandippa parkaren, priya. appavi thangamani.. avangalai munnadiye intha pakkam partha nyabagam.. varatum.. partha nyabagam illaiyo-nu padaren (ketkaren.. naan padinaa athu pesara mathiri.. *sad* )
ReplyDelete