Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 69

இருள் மறைத்த நிழல் (தேனு) - 69

கனவில் மிதப்பவள் போல மிதுனாவின் பார்வை இலக்கற்று நிலவில் நிலைத்தது. விரித்து விட்டிருந்த ஈர கூந்தல் மயில் தோகை போல அவள் முதுகை மறைத்தது. வெள்ளியில் வார்த்த சிலை போல நிலவொளி குளிப்பாட்ட நிஜம் நிழல் உணராது நிலை மறந்து நின்றாள் மிதுனா.

எத்தனை நேரம் அப்படி நின்றாளோ.. அல்லது நளந்தன் தான் எத்தனை நேரம் தென்னைமரத்தில் சாய்ந்து நின்று உணர்ச்சிபிளம்பை சமன் படுத்தி கொண்டு இருந்தானோ.. இருவருக்கும் தெரியாது.

ஒருவாறு மனம் கட்டுக்குள் இருப்பதாக நம்பி கொண்டு வெளித்தாளை  திறந்து உள்ளே வந்து கதவை உள்புறம் தாளிட்ட  நளந்தன் மிதுனாவின் மோனம் கண்டு திகைத்தான்.

'இது தான் பூலோகமா?!' என்பது போல கனவு கலைந்து அவனை விழித்து நோக்கிய மிதுனாவை கண்டதும் மறுபடியும் தன்னிலை இழந்தான். அவளுள்ளும் அதே தாக்கமா?!

நகராது ஜன்னலையே பிடித்து கொண்டு விழி தாழ்த்திய மிதுனா அவனை விரல் நகம் கூட அசைக்காது ஆட்டி படைத்தாள்.

பட்டு போர்வை போல அவள் முதுகை தொட்டு போர்த்தியிருந்த ஈர கூந்தலை ஒரு கரம் கொண்டு மெதுவாக விலக்கினான்.  ஜன்னலில் வீசிய சிலுசிலுவென்ற காற்றால் ஜில்லிட்ட அவளது வெற்று முதுகுக்கு நெருப்பென கொதித்த நளந்தனின் சுவாசம் கதகதப்பூட்டியது. சீரற்ற அவன் மூச்சு தீயேற்ற, பின்னங்கழுத்தெல்லாம் சுட்டது. பின்னிருந்தபடியே மெல்ல குனிந்து அவள் கழுத்தோரம் இதழ் பதித்தான் நளந்தன். கூசி சிலிர்த்த அவளது பட்டு சருமத்தை மென்மையாக வருடிய அவன் கைகள் மெல்ல தோளில் இறங்கி அவள் கைகளை சிறைப்பிடித்தன.

அவன் கைப்பிடியில் அவள் விரல் நடுக்கம் குறைந்ததா,  மிகைப்பட்டதா என்று மிதுனாவுக்கு விளங்கவில்லை. முதலில் அது அவன் கைதானா அல்லது நெருப்பா என்றே அவளுக்கு விளங்கவில்லை! சிறைபிடித்த கைகளை கொண்டே அவளை வயிற்றோடு அணைத்து கொண்டான் நளந்தன். அவள் கூந்தலின் ஈரம் அவன் நெஞ்சை நனைத்தது.

ஒரு விரலால் அவள் முகத்தை தன் புறம் வாகாக திருப்பினான். அவனது மார்பு ரோமங்கள் ஒவ்வொன்றும் சிறு சிறு தீப்பந்தங்களாய்  அவள் கன்னத்தில் உரசி எரிந்தன.

நெருப்பை நெருப்பால் அணைப்பார்களாமே?!  நளந்தனும் நெருப்பென கொதித்த தன் உதட்டால் வாகாக திரும்பிய முகத்தில் தீ வைத்தான். கழுத்து, காது மடல், கன்னம் என்று அவன் முன்னேற, இருவர் இதயமும் ஏதோ பாஷையில் உரக்க பேசிக்கொண்டன.

இனம், மொழி, இடம், பொருள்,  விதி முறை ஏதும் பிடிபடாமல், உணர்ந்திராத மயக்கமும், திடமிலாத தயக்கமும், இடையறாத ஏக்கமும் கொண்ட மிதுனா,  'வேண்டும்' என்றும், 'வேண்டாம்' என்றும் ஒரே மனம் இருவேடமிட்டு இன்புறும் அவளை துன்புறுத்த, 'ஆதிமூலமே!' என்று அவள் வரையில்  ஆதியும் அந்தமுமான அவளின் நந்தனிடமே சரண் புகுந்தாள்.

நெருப்பும் நெருப்பும் அணைய, அணைக்க போராட,
நளந்தன் ஆழ்குரலில், "மதூ.. தாத்தாவிடம் நாள் குறிக்க சொல்வோமா?" என்று மென்குரலில் உணர்ச்சி பொங்க வினவினான்.

அவளின் கழுத்து சங்கிலியில் அவனின் விரல்கள் சரசமாய் விளையாட, கன்னிமையின் கூச்சத்தில் அவள் விலக, அவள் சங்கிலியில் சிக்கி கொண்ட நளந்தனின் சந்திரகாந்த கல் மோதிரம் நிலவொளியில் ஒளிர்ந்தது.

கொதி நீரை காலில் கொட்டிக் கொண்டது போல உணர்ந்தாள்  மிதுனா. மறந்திருந்த சுபலாவை இரக்கமின்றி நினைவுபடுத்திய அந்த கல் ஒளிர்ந்ததா.. அல்லது தீச்சுடராய் தான்  மாறியதா?! மனமும் உடலும் அதில் சிக்கி எரிய, அந்த நெருப்பில் அந்தி மயக்கமும் கூட சேர்ந்து எரிந்து மடிந்தது. நளந்தன் மென்மையாய் மோதிரத்தையும், சங்கிலியையும் பிரித்தெடுத்தான். மோதிரத்திடமிருந்து சங்கிலி விடுபட்ட  அதே நேரம் மோகத்திடம்  இருந்து மிதுனா  விடுபட்டாள்.

மிதுனாவை கட்டியிருந்த மோகவலை மோதிரம் பட்டு அறுந்ததை அறியாத நளந்தன், விலகியவளை தன் புறம் இழுத்து, "இனியும் தாங்காது, மது.. நீ என்னை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறாய் தெரியுமா? உனக்கும் அப்படிதான் என்று எனக்கு தெரியும். " என்றான் சரசமாக.

Comments

  1. unarthiratha maiyakamum, dhidamillatha thiyakkamum,idaiyaratha aakamum

    sema wordings pa mudiyala.....

    ReplyDelete
  2. Solla mudiyatha feel very nice...

    ReplyDelete
    Replies
    1. nijamave solla mudiyatha feeltha super romantic very sweet

      Delete
  3. Good romantic story

    ReplyDelete
  4. Good romantic story

    ReplyDelete
  5. wow excellent, superb romantic story

    ReplyDelete
  6. karpanai kadhaiya irunthalum kannu kulla real ha nadantha mariye iruku wow super romantic nijamave solla mudiyatha feeltha very sweet

    ReplyDelete
  7. nijamave solla mudiyatha feeltha super romantic very sweet

    ReplyDelete
  8. sema feeling and romance loverce confirm itha padikannum

    ReplyDelete
  9. Really awesome feel

    ReplyDelete
  10. AnonymousMay 23, 2014

    ennai middum muddum padikka thunddum arputta variggal ........ very nice n romantic too ........

    ReplyDelete
  11. why this page alone so many comments.

    ReplyDelete
  12. AnonymousJune 29, 2017

    Oru oru variyum manasukkule irruku. I am reading this for the fourth time. Unga ezhuthu valamai excellent

    ReplyDelete
  13. I like this story very much

    ReplyDelete

Post a Comment