இருள் மறைத்த நிழல் (தேனு) - 65
நிச்சலனமாய் உறங்கும் நளந்தனை பார்க்க மிதுனாவுக்கு மிக ஆச்சர்யமாய் இருந்தது. படுத்தவுடன் தூக்கம் தழுவுவது ஒரு வரம். இப்படி நிமிடத்தில் நிச்சலனமாய் துயில் கொள்ள முடியுமானால் அவன் மனம் எத்தனை நிச்சிந்தையாய் இருக்க வேண்டும்!
இவனா வாரம் ஒரு கிளப், வேலைக்கு ஒரு பப் என்று இருந்தவன்?! காரில் இருந்து கடை வரை நடக்கும் காலம் கூட பொறுக்காமல் எவளோ ஒருத்தியின் இடையை இடையறாது வருடியவனும் இவன் தானா?! இன்று தடையற்ற தனிமையில், கையருகில் கன்னியிருந்தும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து கண நேரத்தில் கண் துயின்றவனும் அவன் தானா? எப்படி முடிகிறது இவனால்? இதை தான் 'என் லிமிட் எனக்கு தெரியும்' என்று அன்று தோட்டத்தில் உரைத்தானா?
நளந்தனை அரவணைத்த நித்திரா தேவி மிதுனாவை மறந்து போனாள் போலும்! மிதுனா மெல்ல எழுந்தாள். ஓசையிட்ட கொலுசை மெதுவே கழற்றி தலையணைக்கடியில் வைத்தவள் ஜன்னலோரம் சென்று நின்றாள். முழுநிலா!
நிலவொளி நளந்தன் மேல் போர்வை போல படர்ந்திருந்தது. சீரிய மூச்சில் அவன் மார்பு கூடு ஏறி இறங்கியது. புரண்டு படுத்ததில் கேசம் கலைந்து, புருவம் தொட்ட சுருள் முடி, ஆழ்ந்த உறக்கத்தில் சற்றே பிரிந்த உதடு அவனது வழக்கமான ஆண்தனத்தின் இறுக்கம் தளர்த்தி காட்ட ஒரு வளர்ந்த சிறுவன் போல வசீகரித்தான். திருஷ்டி பொட்டு போல அவனது வலது உள்ளங்காலில் மிளகளவு மச்சம், அது ஒரு தனி அழகோடு நிலவொளியில் மிளிர்ந்தது.
காரணமின்றி எழுந்த நெடுமூச்சை ஓசையின்றி வெளியேற்றிய மிதுனா அடி மேல் அடி வைத்து நளந்தனின் உறக்கம் கெடாதவண்ணம் மீண்டும் வந்து தன் கட்டிலில் படுத்து கொண்டாள்.
இரவின் நிசப்தத்தை தாண்டி ஒரு ரிதத்தில் ஒலித்த நளந்தனின் ஆழ்ந்த சுவாசம் தாலாட்ட தன்னையறியாது துயிலும் கொண்டாள்.
முத்துசாமி கவுண்டர் வீட்டில் அன்றும் கடாவெட்டு. மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு செய்யும் மரியாதையாம். குழுமியிருந்த கூட்டத்தில் குத்தகை விஷயம் பேச யாரை அணுக போகிறான் நளந்தன் என்று மிதுனா யோசித்தாள். முதலில் இந்த கல்யாண கலாட்டாவில் நில விஷயம் பேச எவருக்கேனும் நேரமும் கிடைக்குமா? ஒரு வேளை இந்த கலாட்ட எல்லாம் அடங்கியபின் வந்திருக்க வேண்டுமா?
நளந்தனை கேட்டால், "என்ன அவசரம்? நான் தான் அங்கே நம் தொழில் கவனிக்க மாற்று ஏற்பாடு செய்துவிட்டேனே?! இவர்களின் விருந்து முறை எல்லாம் இன்னும் ஓரிரு நாளில் முடிந்து விடும், பிறகு நிதானமாக பேசி கொள்ளலாம்" என்றான்.
'நம் தொழில்' என்று அவன் சொன்னதை கவனியாதவள் போல ஒதுக்கி, "அதுவரை.." என்று அவள் இழுக்க, "அதுவரை ஊர் சுற்றி பார்ப்போம்" என்று சாதாரணமாக சொல்லி முடித்தான்.
முதலில் யோசியாது சரி என்றவள் உடனே ஏதோ தோன்ற உதட்டை கடித்து கொண்டு நின்றாள்.
"நாம் இப்படி சேர்ந்து சுற்றினால்.. கிராமத்தில்.. அதிலும் கட்டுதிட்டம் மிகுந்த கிராமத்தில் தவறாக பேச மாட்டார்களா? " என்று கேட்கும் போதே அவள் பேச்சின் அபத்தம் அவளுக்கே புரிந்தது.. அவனது கேலி பார்வையை கவனிப்பதற்கு முன்பே.
பின்னே? இரவெல்லாம் அவனோடு ஓர் அறையில் தங்கி விட்டு இப்போது பட்ட பகலில் அவனோடு உலா செல்ல இந்த தயக்கம் தயங்கினால்.. அவள் பேச்சில் ஒலிப்பது அபத்தம் அன்றி வேறென்ன்ன? அவன் கண்களில் துலங்க வேண்டியது கேலியன்றி வேறென்ன?
அந்த ஞானோதயம் வந்த போதே ஒரு மகத்தான கேள்வியும் - அது நேற்றிரவே எழுந்திருக்க வேண்டியது - இன்றேனும் எழுந்தது.
ஒரு கிராமத்தில் - அதிலும் அவன் சொல்படி ரொம்பவுமே கட்டுக்கோப்பான கிராமத்தில் அவளை போல ஒரு வயது பெண்ணை ஒரு வயது பையனோடு எப்படி ஓர் அறையில் தங்க வைத்தனர்?
முதலில் பதில் சொல்ல தயங்கினான் நளந்தன். வீட்டில் நிறைய விருந்தாளிகள் என்பதால் தங்க வைக்க வேறு இடம் வசதி பட்டிருக்காது என்று சொல்லி முடித்து விட பார்த்தான். ஆனால் அவள் சமாதானமடையாததை பார்த்தவன் அவளை ஆழ நோக்கி,
"நீ என் முறை பெண். வரும் மாதம் நம் திருமணம். பரிசம் கூட போட்டாகிவிட்டது. பெரியவர்கள் சம்மதத்தின் பேரில் தான் சேர்ந்து வந்தோம் என்று சொன்னதால் இருக்கலாம்" என்று சாதாரணமாக சொன்னான்.
பொய்யை கூட அத்தனை உறுதியாக சொல்ல முடியுமா?! நளந்தனின் அழுத்தமான வார்த்தைகள் அவளை சில்லிட வைத்தன.
"பொய்" என்று அவள் முகம் சுளிக்க, நளந்தன் பார்வை மாறாமல் "அப்படி ஒன்றும் முழுக்க பொய்யில்லை" என்றான்.
அவளது திடுக்கிடலை அலட்சியப்படுத்தி, "பெரியவர் சம்மதத்தோடு தானே இங்கு வந்தோம் " என்று சொன்னவன், "உன் அதியமான் ஔவையார் கதையெல்லாம் இங்கே எடுபடாதம்மா. நட்பு, அதன் மேன்மை பற்றியெல்லாம் இவர்களுக்கு பாடமெடுக்க நான் ஆளில்லை! " என்று குறுஞ்சிரிப்பு சிரித்தான்.
மேலும் பொய்மையும் வாய்மையிடத்து என்று சொன்ன வள்ளுவரை வேறு அவன் வக்காலத்துக்கு இழுக்க, மிதுனா மனம் லேசானது.
"நான் ஒன்றும் ஔவையார் அல்ல. நீங்கள் மட்டும் ராஜா, நான் குடுகுடு பாட்டியா? " என்றாள் பொய் கோபத்தோடு.
"யப்பா! எத்தனை முக்கியமான வாதம் என்றாலும் வயதை மட்டும் விட்டு தர மாட்டீர்களே! யப்பா.. இந்த பெண்கள்!" கைகளை விரித்து பாவனையோடு அவன் பேசிய விதத்தில் மிதுனாவுக்கு சிரிப்பு வந்தது.
அவள் சிரிப்பை ஒரு திருப்தியோடு ரசித்தான் நளந்தன்.

நளந்தனை அரவணைத்த நித்திரா தேவி மிதுனாவை மறந்து போனாள் போலும்! cha semma lines
ReplyDeleteWow...thoroughly enjoyed the whole novel. Too good. I'm a biggest fan of RC novels. Now I'm a biggest fan of your novel too. Awaiting for more such novels from you.
ReplyDeletenan padichathu varaikum heroin thungarthu than varnichurukanga bt ipo than hero thungartha ivlo azhaga soldratha parthuruken... sema really nice.... rc novels ah avlo interest ah enaye maranthu padipen apadiye..... this novel ramani's collection mathriye iruku semaya..... super pa...
ReplyDeletehero va alaga varnichurukenga nice.........
ReplyDeleteRamanichandran ammavin novel polave dialogs,etc.....
ReplyDeleteHey thenu.. Wen ll yu write the next novel.. I can't wait... :)
ReplyDeleteSema novel...Ydy mrng I started n finished it by evening... Sema sema...waiting fr ur next novel...
ReplyDeleteYou may feel that I am exaggerating. But honestly I wish to say that I have greater satisfaction in reading your novel than many of RC ma'am's novels, though I love to read her novels.
ReplyDeleteThank You!!
DeleteHero varnippa I read many times. Lovely lines.. amazing thenu..
ReplyDelete