இருள் மறைத்த நிழல் (தேனு) - 60
கிராம திருவிழாவிற்கு செல்லும் வரை , விஜ்ஜி, பஜ்ஜி என்று நளந்தன் தோளை தொற்றி கொண்டு சுற்றிய சுபலா இந்த இரு நாட்களாக அத்தான் பொத்தான் என பிதற்றுவது மிதுனாவுக்கு கொஞ்சமும் ரசிக்கவில்லை. சகிக்கவில்லை.
சுபலா வேறு மிதுனாவை ஓரக்கண்ணால் பார்த்து, "உங்களிடம் தனியே பேச வேண்டும் அத்தான்" என்று சொல்லவும் சட்டென எழுந்து விட்டாள் மிதுனா.
"நீ உட்கார் மிதுனா" என்று அதிகாரமாக சொன்ன நளந்தன் அந்த இரு பெண்களின் முக சுளிப்பையும் பொருட்படுத்தாது, "விளம்பர டிசைன்கள் இப்போது வந்துவிடும்." என்று பொதுவாக சொல்லி, "பரவாயில்லை சொல்லு சுபலா. மிதுனா தானே." என்றான்.
வேறு வழியின்றி சொல்ல ஆரம்பித்தாள் சுபலா. 'சுபா'வை அதற்குள் மறந்து போனானே என்று வேறு திகைப்பு.
"எல்லாம் ரிசார்ட் பெயர் பற்றியது தான் விஜியத்தான். பிறகு பார்க்கலாம் என்று சொன்னீர்களே.. இப்போதானால் டிசைன் கூட இன்று வரும் என்கிறீர்கள். பெயர் விஷயம் என்ன முடிவு செய்தீர்கள் என்று கேட்டு போகலாம் என்று.." என இழுத்தாள்.
பேசி கொண்டே இயல்பாக செய்வது போல நளந்தனின் நாற்காலி கையின் மீது அமர்ந்தாள் சுபலா. முன்பிருந்த விஜி என்றால் நாற்காலி கையோடு அவள் நிறுத்தியிருக்க மாட்டாள்.. ஆனால் என்னவோ அவனிடம் இப்போதெல்லாம் ஒரு கடினம், 'தூர நில்' என்று சொல்லாமல் சொல்வது போல காணப்பட எட்ட நின்று பேசுவதை பழகியறியாத சுபலாவிற்கு கூட அவனை நெருங்க தயக்கம் உண்டானது!
அவனிடம் ஏதும் மறுப்பு தெரியாதது போல தோன்றவும் அவன் தோளை சுற்றி தன் கையை போட்டு, "பெயரை மாற்றுவதாக தானே முடிவு செய்தீர்கள்?" என்று குழைந்தாள்.
அவளை நாசூக்காக விலக்கிவிட்டு விட்டு எழுந்து ஜன்னலருகே நின்று கொண்ட நளந்தன், "அதே பெயர் தான். ஏன் மாற்ற வேண்டும்?" என்றான்.
"என்ன விஜ்ஜி? இவ்வளவுக்கு பின்.. " என்று மிதுனாவை ஒரு பார்வை பார்த்து விட்டு , " எனக்காக மாற்ற கூடாதா? கூட்டு தொழில் எனும் போது, விட்டு கொடுத்து போவது சகஜம் தானே..நாம் முன்பு பழகியதை வைத்து " என்று அவள் பேசி கொண்டே போக நளந்தனின் காரியதரிசிபோனில் குறுக்கிட்டார்.
"எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லி நளந்தன் செல்போனோடு வெளியே சென்றான்.
அந்த இடைப்பட்ட நேரத்தில் சுபலா தன் வேலையை காட்டினாள். தனக்கு தானே பேசி கொள்பவள் போல மிதுனாவின் காது பட புலம்பினாள்.
"இத்தனை நடந்த பின்னும், நாங்கள் பழகிய பழக்கத்தை மறக்க முடியாமல் 'சுபா ஸ்தலா ரிசார்ட்ஸ்' என 'என்' பெயரில் ஆரம்பிக்கிறார். என்ன சொல்லியும் பெயரை மாற்ற மாட்டேன் என்று இப்படி பிடிவாதம் பிடித்தால் எப்படி?! பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்? கைபிடிப்பது ஒருத்தி, மனதில் ஒருத்தி என்று அவருக்கு தானே இந்த அவமானம்.."
மிதுனாவுக்கு இதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அப்படியும் இருக்குமா? சுபலா அப்படி அவள் பெயரை போட வேண்டாம் என்று கூட சொல்வாளா? அவளறிந்த சுபலா சுயநலத்தின் தாய்நாடு. அவளா வேண்டாம் என்பாள்?
அவளை ரொம்ப நேரம் சுபலாவின் சுடுநாக்கிற்கு பலியாக்காமல் நளந்தன் விரைவில் பேச்சை முடித்து உள்ளே வந்தான். வந்தவன் விட்ட இடத்தில் சிரமமின்றி தொடர்ந்தான்.
"என்ன சொன்னாய்? ம்.. கூட்டு தொழில்! பத்ரியின் பங்கு ரிசார்ட்ஸ் ஏஜன்ட்சை கை காட்டி விட்டதோடு முடிகிறது. தெரியுமல்லவா? மற்ற நிர்வாக கட்டு திட்டம் எல்லாம் என் கையில் தான். இது கூட்டு தொழில் என்று கூட சொல்ல முடியாது. அதனால் என் முடிவு தான் இறுதி முடிவு. பெயர் என் இஷ்டம் தான். உனக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ.. எனக்கு பிடித்திருக்கிறது. அதற்கு காரணமும் இருக்கிறது. " என்று குரலை உயர்த்தாமல் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி நிதானமாக சொன்னான்.
மிதுனாவை கோபமாக பார்த்துவிட்டு, "விஜியத்தான்.. பத்ரி பற்றி இல்லாததையும் பொல்லாததையும் யாரோ உங்களிடம்.." என்று அவள் மேற்கொண்டு ஏதோ சொல்ல தொடங்க, "தனியே பேச வேண்டும் என்று கூட சொன்னாய் அல்லவா.. எனக்கும் கீழே போக வேண்டும், வாயேன் லிஃப்டில் பேசி கொண்டே போகலாம்" என்று அவளை
கூட்டி கொண்டு மிதுனாவின் கனன்ற முகத்தையும் பொருட்படுத்தாது சென்றான் நளந்தன்.
சற்று பொறுத்து நளந்தன் மட்டும் தனியே திரும்பி வந்தான். தலையை கைகளால் தாங்கி கொண்டு அமர்ந்திருந்த மிதுனாவின் அருகில் வந்து அவள் தோள் தொட்டு , "இன்னமும் தலை வலிக்கிறதா? என் மேல் கோபமா? " என்றான் கரிசனமாக.
அவள் தடுமாற, "சுபலாவை தனியே அழைத்து போய் பேசியதால் கோபமா? அவள் எதற்கு வந்தாள் என்றால்.. " என்று ஆரம்பித்தான்.
எண்ணையிலிட்ட அப்பளம் போல மிதுனா துள்ளி எழுந்து, "அதை பற்றி எனக்கு ஒன்றுமில்லை" என்றாள்.
உதட்டோரம் சிரிப்பில் துடிக்க நளந்தன் அவள் முகத்தை கூர்ந்து நோக்கி, "ஒன்றுமில்லாததற்கு இங்கே எள்ளும் கொள்ளும் வெடிப்பானேன்?" என்றான்.
"பின்னே என் மேல் பழி போட்டவளை கண்டதும் எள்ளும் கொள்ளும் வெடிக்காமல், பாலும் தேனுமா வடியும்?! மற்றபடி நீங்களிருவரும் ஒட்டி கொண்டு இங்கு பேசினாலும் எங்கு பேசினாலும் அதை பற்றி எனக்கென்ன? " என்று வெடித்தாள் மிதுனா.
"அவளை நானாக தொட்டு பேசவில்லை. அவள் தான் ஒட்டி உட்கார்ந்தாள்" என்று பொறுமையாகவே சொன்னான்.
"அவள் உங்கள் மடியிலேயே வந்து உட்கார்ந்தாலும் அதை பற்றி எனக்கு ஒன்றுமில்லை" என்று தலையை சிலுப்பினாள் மிதுனா.
"மடியிலா?!" என்றவன் அவளை அடி முதல் நுனி வரை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு, பின்பும் சொல்ல வந்த எதையோ கண்டிப்பாக சொல்ல விரும்பி, "நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், அங்கே தனியே சுபலாவிடம் " என்று அவன் தொடங்க, விருட்டென்று திரும்பிய மிதுனா ,
"சுபலாவிடம் நீங்கள் தனியே எப்படி, என்ன, எங்கே பேசினீர்கள் என்று நான் கேட்டேனா? நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லையா? " என்று கோபமாக கேட்டாள்.
"எது? சற்று முன் 'என் அப்பா குதிருக்குள் இல்லை' என்பது போல ஏதோ 'இல்லை' இல்லை' என்றாயே அதுவா? ஓ.. புரிந்ததே!" என்றான் பாதி எரிச்சலும் பாதி சிரிப்புமாக.
பின்னர் அவள் படும் அவஸ்தை பொறுக்காமல், "சரி விடு. அவள் தான் உன் தலைவலியோ என்று நினைத்தேன்! ஒருவேளை உனக்கு நிஜமாகவே தலைவலி தானோ என்னவோ!
இன்று நான் என்ன சொன்னாலும் நீ எதிர்மறையாக தான் பேசுவாய். டிசைன் எல்லாம் வீட்டுக்கே எடுத்து வருகிறேன் நாளன்னைக்கு தேர்வு செய்தால் போதும். நீ வீட்டிற்கு சென்று ஓயவெடுப்பதானால் எடு. டிரைவரிடம் வீட்டில் விட சொல்கிறேன் "என்று கூறி சென்றான்.

All dialogs are superb....
ReplyDeleteThanks, Nithya! :)
ReplyDelete