Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 74

இருள் மறைத்த நிழல் (தேனு) - 74

நளந்தன் வாழ்ந்த கோணல் வாழ்க்கை முறை அப்படி! அதை கொண்டு,  அவனது ஒவ்வொரு சொல்லுக்கும் மிதுனா தவறான அர்த்தம் கண்டுபிடித்து விடுவாளோ என்று அவன் தவிப்பது புரிந்தது. அவன் ராவணனேயானாலும் என்றென்றும் அவள் உள்ளம் கொண்ட ராமன் அவன் தான் என்று அவனுக்கு எப்படி புரிய வைப்பது? எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்ட மிதுனா, "உங்கள் வாழ்க்கை முறை தெரிந்த போது கூட ஒரு நாளும் உங்களை வெறுக்க என்னால் முடியவில்லை." என்றாள்.

"ஆனால் விலக மட்டும் நினைத்தாயாக்கும்?" என்று தாங்கலாக வினவியவன், விட்ட இடத்தில் தொடர்ந்தான்.

"நீ அன்று 'நளந்தன்' என்று என்னை அழைத்து  கண் கலங்கிய போது உன்னை கட்டியணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருந்தது. உன்னிடம் உண்டான ஈர்ப்பு  கண்டிப்பாக வெறும் கவர்ச்சி அல்ல என்று தோன்றியது.

பிற பெண்களிடம் லயிப்பு உண்டாக மறுத்தது. உண்மை, மது.. உன்னை கண்ட நாள் முதலாய் என் கண்களுக்கு நீ மட்டும் தான் பெண்ணாக தெரிகிறாய்.

அன்றொரு நாள் லைப்ரரி சென்று நீ வர தாமதமானதும் என் உடல் அப்படி பதறியது. அப்போதே எனக்கு இது காமம், கவர்ச்சி என்ற கட்டுக்குள் மட்டும் அடங்கிவிடக்கூடிய உணர்வு அல்ல என்று புரிந்தது.

அப்புறம் சுகிர்தன் வந்த போது தான் உன் மேல் எனகிருப்பது காதல் என்று தெளிவாக தெரிந்தது" என்று சொல்லி அசடு வழிந்தான்.

"சுகிர்தனா? " என்று மிதுனா ஆச்சர்யப்பட, "ஆமாம், அன்று டைனிங் டேபிளில் அவனருகில் போய் உட்கார்ந்தாயே, அன்று எனக்கு எப்படி காந்தியது தெரியுமா?" என்று சொல்லி சிரித்தான்.

அவளுக்கும் சிரிப்பு வந்தது. "ஆமாம் ஏதோ பெண்டுலம் போல.. என்று சொல்லி கடுகடுத்தீர்களே" என்று கிளுக்கி சிரித்தாள்.

அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டி, "பின்னே, நீ சுகிர்தன் அம்மாவை அத்தை என்றால் எனக்கு கோபம் வராதா?" என்றான்.

"ஐயோ.. நான் அந்த எண்ணத்தில் அவர்களை அப்படி கூப்பிடவில்லை" என்று மிதுனா பதறினாள். அவள் கையை ஆமோதிப்பாக தட்டி, "தெரியும். சுகிர்தனை வீட்டில் தங்க விடாது நான் இழுத்து சென்ற போதெல்லாம் நீ அவன் வீட்டில் இல்லாததை கண்டு கொள்ளவே இல்லையே. அதிலேயே கொஞ்சம் நிம்மதிதான். பின்னர் அவன் ஊருக்கு கிளம்பும் போது கூட அத்தையின் குறிப்பை நீ புரிந்து கொள்ளாமல் அவனுக்கு சிரித்த முகமாய் விடை கொடுத்தாயே, . உன் மனம் அவனிடம் படரவில்லை என்று அப்போது இன்னமும் தெளிவு." என்று புன்னகைத்தான்.

இரவு உணவுக்கு கூட வீடு தங்காது சுகிர்தனும் அவனும் சுற்றியது நினைவு வந்து அவளும் புன்னகைத்தாள். கில்லாடி தான்!

"திருவிழா சமயத்தில் எப்படியும் உன்னிடம் மனம் விட்டு பேசுவது என்று ஒரு முடிவோடு இருந்தேன்" என்றவன் அதன் பின் நிகழ்ந்த சம்பவங்கள் சங்கடபடுத்த பேச்சை நிறுத்தினான்.

அவன் வருந்துவது அவளுக்கு பிடிக்கவில்லை. என்று தான் பிடித்திருந்தது?! அவன் தோளில் சலுகையாக சாய்ந்து கொண்டு,  "நான் அந்த சம்பவத்தை இப்போதெல்லாம் பெரிதாக நினைப்பதில்லை. நீங்களும் விட்டு விடுங்கள்." என்றாள் அவன் மன வருத்தம் குறைப்பவளாக.

அவளது முன்னுச்சியில் அழுந்த முத்தமிட்டு, "அன்றும் உன்னை தவறாக நினைப்பது அத்தனை எளிதாக இல்லை, மது. ஆனால் என் பெற்றோர் பற்றி தாத்தா சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்.. அது.. ஒரு மனகசப்பு என்னுள் எப்போதும் பெண்களை பற்றி இருக்குமா.. பொய் சொல்லி என் தந்தை வாழ்க்கையை என் தாயார் கெடுத்துவிட்டார் என்று என் மனதில் ஆழமாக பதிந்து விட்டிருந்தது. நீயும் அதே போல பொய் சொல்கிறாயோ என்று எனக்கு ஆத்திரம்.. அது கண்ணை மறைக்க.. என்னவெல்லாமோ சொல்லி உன்னை காயம் படுத்திவிட்டேன்.." அவன் குரல் கம்மியது.

"இப்போது நினைத்தால் என் தாயார் கூட என் தந்தையை இழக்க பிடிக்காமல், அவர் மேல் கொண்ட அன்பு காரணமாக கூட, அப்படி ஒரு பொய்யை சொல்லி அவரை மணந்து கொண்டிருப்பாரோ என்று தோன்றுகிறது..." நிறுத்தி ஒரு நீள்மூச்சு எடுத்த நளந்தன் தொடர்ந்தான்.

"நீ என் நிழல் மது. உன் நேசம் என் நிழல். அதை மடையன் போல இருளில் நின்று கொண்டு தேடினேன். காணவில்லை என்று மனம் நொந்தேன்." என்று அவன் கழிவிரக்கம் பொங்க பேச மனம் பொறுக்காத மிதுனா ஒரு விரலை அவன்  இதழ் மேல் வைத்து அவனை பேசாது தடுத்து தவறில் பங்கெடுத்துக் கொண்டாள்.

 "சுபலா.. மற்றும் சந்தேகம் என்ற இருள் என்னையும் கவ்வி கொள்ள, என் பங்குக்கு நானும் அந்த இருளில் மறைந்து கொண்டேன்.." என்று அவள் மனம் வருந்த, தன் உதட்டின் மேல் இருந்த அவள் விரலை முத்தமிட்டு தொடர்ந்தான் நளந்தன்.

"உன்னை காயப்படுத்தி விட்டேனே தவிர,  உன் களங்கமற்ற முகம் என்னை பாடாய் படுத்தியது. உன் தாத்தாவை பார்க்க பெங்களூரு செல்லுகையில் நீ உன் கைப்பையை கூட மறந்து விட்டு வந்தாயே. அப்போது உன் மனதில் உன் தாத்தா தவிர வேறு ஒரு நினைவும் இல்லை. அன்றைக்கு உன் தோற்றம் என் மனதை பிசைந்தது.

யோசித்து பார்த்தேன், சுபலா சதி செய்த அன்று, அந்த கிராம வீட்டில் நான் நுழைந்த போதும், உன்னிடம் அதே வெறிச்சோடிய முகம், அதே பார்வை தான் .. அப்படி எதையோ இழந்தது போல இருந்த அந்த முகம் சுபலா சொன்னபடி திட்டம் தீட்ட திராணியற்றது என்று தோன்றியது.

பின்னர் உன் தாத்தா உன்னை கை பற்றி என்னிடம் கொடுத்தபோது, நீ குற்றமே செய்திருந்தாலும் என்னால் உன்னை ஒரு நாளும் விட முடியாது என்பது புரிந்தது.  அவருக்கு கொடுத்த வாக்கிற்காக அல்ல. உன் மேல் நான் கொண்ட நேசத்தினால்."

முகம்  விகசித்து  விசும்பினாள் மிதுனா. அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டான் நளந்தன்.


"அன்று சாலை விபத்தில் நீ 'நந்தன்' என்று பதறினாயே, அது இன்னொரு அதிர்ச்சி எனக்கு. உன் அன்பை ஏற்கவும் முடியாமல், என் அன்பை கொல்லவும் முடியாமல் நான் தவித்த தவிப்பு.. உன்னிடம் கூட எரிந்து எரிந்து விழுந்தேன். ஆனால் அப்படி எல்லாம் உன்னிடம் காய்ந்தாலும், அன்றிரவு என்னால் உன்னை தனியே உன் அறையில் விட கூட பயமாக இருந்தது தெரியுமா? ஏதேனும் விரக்தியில் ஏதாவது செய்து கொள்வாயோ என்று அந்த இணைப்பு கதவை திறந்து வைத்து கொண்டு நான் பட்ட பாடு" என்று லேசாக சிரித்தான்.

"தற்கொலையா? நானா? " என்று அவள் மறுக்க, கண்கள் கனிவுற அவளை பார்த்தவன், "பெரிய வீராங்கனை தான். ஆனால் சில நாட்கள் முன், நானும் உங்களோடு வந்து விடுகிறேன் நந்தன். இப்படியே செத்து போகிறேன் என்று அரற்றியது.. அது நீதானே?! அது என்ன பேச்சு, மது?" என்று செல்லமாக கடிந்தான்.

உண்மை தான். ஒப்பு கொண்டு சொன்னாள், "அது..  நீங்கள் இருக்கும் உலகில் உங்கள் வெறுப்பை தாங்கி கூட நான் இருப்பேன், ஆனால்... நீங்களே இல்லாமல்.." என்று வாக்கியத்தை முடிக்க கூட மாட்டாமல் கண் கலங்கினாள் மிதுனா.

Comments

  1. i liked the story..i find it even better than RC`s. u have used many words which are common in kalki`s books. its good to see such pure tamil words.. all the very best Thenu!

    ReplyDelete
  2. hi..unga story enaku romba pidichu iruku... sila stories padikum pothu thaan close panni vaikave thonathu and athula rombaa onri poi padika mudiyum..intha kathai athu pola thaan...such a sweet story...ithu pola innum niraya padaipugal thara vazhthukal..

    ReplyDelete
  3. Hi,

    It is really an Wonderful Novel.

    I s it good to have an excellent writer in IT Field.

    Lovely novel..Congrats ..

    Divya

    ReplyDelete
  4. Excellent Novel..Totally enjoyed reading. Seriously you should publish this as a book; All the best for your future novels too!

    ReplyDelete
  5. nice story I enjoyed reading this novel after a lonng time(my college days we used to circulate rc's book and do combine study). All the best for ur future novels. keep writing and enjoy.

    ReplyDelete
  6. super story..enala maraka mutiyatha story..pls ethe pola eaasya read panura page epiti open panurathunu knjam idea thanka

    ReplyDelete
    Replies
    1. AnonymousJune 14, 2016

      hi very nice novel. ecpect more from u. hv a nice kourney as a novelist.

      Delete
  7. வேறு கதைகள் எழுதவில்லையா. ஏன்? என்னுளே இந்த கதையின் தாக்கத்தை வார்தைகளால் வடிக்க நினைக்கிறேன். முடியவில்லை.வார்த்தைகளை புனைய தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Athey karanam thaan. Kathaiyin thaakkathil irunthu vidupattal thaan aduthathil ithan sayal iraathu endra ennam. Athan pin different priorities , hectic work athu ithu endru ayiram karanam. But I am getting there..

      Delete
    2. கதையின் நாயகர்களை போலவே எழுத்தாளரும் பல வருடங்களாக இருளில் தன்னை [தன் எழுத்தை] மறைத்து வைத்துக்கொண்டிருக்கிறார் ஆனால் அவருக்க உரிய சிரமம் வாசகர்கள் அறியமாட்டோம்

      Delete
    3. Thank you Rajan S. :)

      Delete
  8. நீங்கள் இருக்கும் உலகில் உங்கள் வெறுப்பை தாங்கி கூட நான் இருப்பேன், ஆனால்... நீங்களே இல்லாமல்.."
    Beautiful words...a measure of true love...enjoyed travelling with this novel

    ReplyDelete
  9. நீங்கள் இருக்கும் உலகில் உங்கள் வெறுப்பை தாங்கி கூட நான் இருப்பேன், ஆனால்... நீங்களே இல்லாமல்.."
    Beautifully said..a word that measures her love...enjoyed travelling with this novel

    ReplyDelete
  10. Such a beautiful romantic novel!Incomparable! Thank you Madam!

    ReplyDelete
  11. Superp story innum konjam updates podungapa pls

    ReplyDelete

Post a Comment