இருள் மறைத்த நிழல் (தேனு) - 71
நளந்தனின் பைக் ராட்சஸ வேகத்தில் பறந்து வெகு நேரமான போதும் அது விட்டு சென்ற ஒலி மிதுனாவின் காதில் பேரிரைச்சலாய் ஒலித்து கொண்டுதான் இருந்தது. அதற்கு சற்றும் இளைக்காமல் அவள் உள்ளம் பொருமியது.
என்ன ஒரு இறுமாப்புடன் சொல்லி விட்டு போகிறான்! அவனை விட்டு அவளால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாதாமே?! அதற்காக ஆயிரத்தில் ஒருத்தியாக அந்தபுரத்தில் அவனோடு அளவளாவ வேண்டுமா?!
போ! போ! என்று அவன் சொன்ன பின்னும் அங்கிருக்க அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்த அந்தி வேளையில் ஆத்திரப்பட்டு போகவும் இடமில்லை. ஆண் பிள்ளைகளுக்கு அது ஒரு வசதி. ஆத்திரம் மிகுந்தால், பாதி பேச்சில் வெளியே கிளம்பிவிடலாம். பெண் பிள்ளை மிஞ்சி போனால் மூக்கை சிந்தலாம். காலகாலமாக நிலவி வந்த உலக நியதி - ஆணாதிக்க உலக நியதி!
உள்ளிருக்க மூச்சு முட்ட, மிதுனா கவ்வி வந்த இருளையும் பொருட்படுத்தாது குடிலை விட்டு வெளியே வந்தாள். நளந்தனின் பைக் தடம் தாறுமாறாய் வளைந்து சென்றது தெரிந்தது. அதை வெறித்து கொண்டு அவள் நின்றிருக்க, "ஐயையோ! மோசம் போனாயே!" என்ற கூக்குரல் அவள் சிந்தையை கிழித்தது.
பெரியவர் வீட்டில் இருந்து வேளாவேளைக்கு சாப்பாடு எடுத்து வரும் பொன்னம்மாவின் கூப்பாடு தான்.
"சித்த முன்ன கூட முழுசா பார்த்தேனே.. அதுக்குள்ளே இப்படி உருகுளஞ்சு போனீயே! இப்படி பாதியிலேயே எங்கள எல்லாம் விட்டுட்டு போகவா அந்த நாசமா போற பைக்கில அத்தன வேகமா போன!" என்று ஒப்பாரி வைத்து வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு ஓடி வந்தாள்.
ஈரக்குலை அறுந்து விழுந்தது போல அதிர்ந்தாள் மிதுனா.ஓடி சென்று பொன்னம்மாவை பற்றி, "என்ன சொல்கிறாய்? பொன்னம்மா?" என்று அவள் பதற,
"நான் என்னான்னு சொல்லட்டும்மா.. பைக்கில போறப்போ அய்யாவுக்கு ஆக்சிடன்ட் ஆகி ஆசுபத்திரிக்கி எடுத்துட்டு போற வழியிலேயே உசிரு போச்சே.. சாகற வயசா அது.. பாரு உன் கண்ணுலயும் தண்ணி வருதே.. அழாத தாயி.. ஆண்டாண்டு காலமும் அலுது பொரண்டாலும் மாண்டவங்க திரும்பி வாரவா முடியும்?" என்று அவளறிந்த வகையில் ஆறுதல் சொல்லி மூக்கை சேலை தலைப்பால் உறிஞ்சி கொண்டாள்.
"ஐயோ பொன்னம்மா!" என்று வீறிட்டாள் மிதுனா.
இடி விழுந்தது போல அதிர்ந்து நின்ற மிதுனாவை பரிதாபமாக பார்த்த பொன்னம்மா, "சின்ன புள்ள நீ.. ரொம்பவும் பயந்து போயிட்டே கண்ணு, தனியே இங்க இருக்காத தாயி.. என்கூட வா, பெரியவர் வீட்டு ஆம்பளைங்களுக்கு தகவல் சொல்லிபிடலாம். பொம்பளைங்க நாம ஒண்டியா என்னத்த செய்ய.. அவுக போய் தான் மார்ச்சுவரில இருந்து பாடிய கொண்டாரணும்" என்று மிதுனாவின் கையை பிடித்து கொண்டு ஓட்டமும் நடையுமாக வேகத்தை குறைக்காமல் செல்ல முனைந்தாள்.
'பாடி' என்று பொன்னம்மா சொன்ன சொல்லில் முழுவதும் உடைந்தாள் மிதுனா. பொன்னம்மாவின் கையை ஆவேசத்துடன் உதறி விட்டு, "நான் வரமாட்டேன்" என்று கதறி கொண்டு குடிலுக்குள் ஓடினாள்.
என்ன செய்வதென்று தெரியாத பொன்னம்மா நிற்க நேரமில்லை என்பதை உணர்ந்து தன் பாட்டில் புலம்பி கொண்டே தகவல் சொல்ல சென்றுவிட்டாள்.
குடிலுக்குள் வந்து விழுந்த மிதுனாவிற்கு உலகம் தட்டாமாலை சுற்றியது. எப்படி முடியும்? எத்தனை துடிப்பான இளைஞன். அத்தனை துடிப்பும் மண்ணுக்கு இரையா? அவள் நந்தனா? அவளை விட்டு போனானா? நளந்தன் இன்றி அவளால் ஒரு கணமும் இருக்க முடியாதே. ஐயோ! அதை தானே அவனும் சொன்னான்! தலைப்பாடாய் சொன்னானே! காலம் கடந்து விடப் போகிறது என்று சொன்னானே! பாவி மகள், இப்படி என்று நினைக்கவில்லையே! மிதுனா தலையில் அடித்து கொண்டு அழுதாள்.
ஆயிரத்தில் ஒருத்தியாக நானா என்று அத்தனை அகங்காரமாக சொல்லி அவனை அடிக்காத குறையாக விரட்டினாளே.. இதோ இப்போது ஆயிரம் என்ன, ஆயிரத்தாயிரம் என்றாலும் அதில் ஒருத்தியாக இருக்க அவளின் அத்தனை அணுவும் துடிக்கிறதே.. புரிந்து கொள்ள அவள் நளந்தன் இல்லை. அவள் நந்தன் இல்லையே..
'நந்தன்', 'நந்தன்' என்று அவன் அணிவித்த செயினை பிடித்து கொண்டு மணிகணக்கில் கதறி கதறி அழுதாள். குடிலை சுற்றி ஆட்களின் நடமாட்டம் கூட கூடியது. அந்த செயினையே பற்றி கொண்டு இன்னமும் அழுதாள் மிதுனா. இது ஒன்று தான் அவளின் ஆதாரமா? அன்றும் இன்றும் என்றென்றும்?
"பாடி வந்துருச்சு" என்று ஒரு ஆண் குரல் கேட்க, அவள் மேல் கொதிநீரை வாரி கொட்டியது போல துடித்தாள்.
"குடிலுக்கு உள்ளயே பாடிய கொண்டு போயிடலாமா?" என்று யாரோ கேட்டார்கள்.
"உள்ளார அந்த பொண்ணு பாவம் தனியா அழுதுகிட்டு இருக்குதே. இரு நான் போயி பேசறேன் " என்றாள் பொன்னம்மா.
உள்ளே நுழைந்த பொன்னம்மா அறை மூலையில் சுருட்டி கொண்டு முழங்காலில் முகம் புதைத்து தன் தங்க சங்கிலியை இறுக பிடித்து கொண்டு குலுங்கி குலுங்கி அழும் மிதுனாவிடம் வந்தாள்.
"தாயீ, பாடிய கொண்டாந்துட்டாங்க. இங்க வைக்க" என்று சொல்லி அவளை எழுப்ப, தலையை நிமிர்த்தாமலேயே திமிறினாள் மிதுனா.
"பாடி, பாடி-னு அவரை அப்படி சொல்லாதே பொன்னம்மா.. என்னால தாங்க முடியலையே!" என்று அழுதாள்.
அவளை எழுப்ப எடுத்த முயற்சிகள் தோற்க,
"நான் சொல்லல, அய்யாவுக்கு பைக் ஆக்சிடென்டுன்னு சொன்னப்ப இருந்து இப்பிடி தான் பைத்தியம் புடிச்ச மாதிரி அழுதுகிட்டு இருக்குதுங்க, ஐயா." என்று யாரிடமோ முறையிட்டாள் பொன்னம்மா.
அதற்குள், "குடில்ல இடமும் சிறுசா இருக்கும். பெரிய வீட்டு முற்றத்துல போடலாம்னு கவுண்டரம்மா சொல்லுது" என்றது ஒரு குரல்.

ஆண் பிள்ளைகளுக்கு அது ஒரு வசதி. ஆத்திரம் மிகுந்தால், பாதி பேச்சில் வெளியே கிளம்பிவிடலாம். பெண் பிள்ளை மிஞ்சி போனால் மூக்கை சிந்தலாம். காலகாலமாக நிலவி வந்த உலக நியதி - ஆணாதிக்க உலக நியதி! correct! they have all privileges. When v can also ?
ReplyDelete