இருள் மறைத்த நிழல் (தேனு) - 11
தாத்தாவிடம் பேசியதில் பொதுவாக வேலையாட்கள் எல்லாரும் எழுவது ஐந்தரை , ஆறு மணி போல என்றும், தாத்தா மெதுவே ஏழரை போல விழிப்பார் என்றும் மிதுனா தெரிந்து வைத்திருந்தாள். அவள் எப்போதும் ஐந்தரைக்கு எழுந்து விடுபவள். புது இடம் என்பதாலோ என்னவோ முந்திய இரவு வெகு நேரம் உறக்கம் பிடிக்கவில்லை. அதனால் காலை சற்று தாமதமாகத்தான் அவளுக்கு விழிப்பு தட்டியது. மணி ஏழு! அவசரமாக எழுந்து, பல் துலக்கி, குளித்து முடித்து கீழே செல்ல தயாராக ஒரு அரை மணி நேரம் பிடித்தது.
அறைக் கதவைத் திறந்தால் அங்கே முத்து கையில் ஒரு காபி, டிபன் டிரேவுடன் நின்றிருந்தான். "அதுக்குள்ளே குளிச்சிட்டீங்களாம்மா? இதை மேஜை மேல வச்சிரட்டுங்களா? " என்ற கேள்வியோடு! அவற்றை தானே வாங்கி வைத்துவிட்டு, " நானே இறங்கி வந்திருப்பேனே முத்து..தாத்தா.."என்று அவள் தொடங்க, "இல்லம்மா, அய்யாக்கு அசதியா இருக்குன்னு இன்னும் தூங்கறாருங்க..உங்களுக்கு மேல எடுத்துட்டு வர சொல்லி நேத்தே சொல்லிட்டாருங்க.."என்றான். மேலும் மறுக்க தோன்றவில்லை அவளுக்கு. அந்த நளந்தனையும் தவிர்க்கலாமே!
"வரேனுங்க" என்றபடி திரும்பிய முத்து ஏதோ நினைவிற்கு வர நின்று, "சொல்ல மறந்துட்டேனுங்களே.. கதவு தாழை சரி செய்ய ஆளுக்கு சொல்லிட்டேனுங்க..இன்னிக்குன்னு பாத்து அவன் வேற வேலையா வெளியூர்
போறானுங்களாம்..வர 2-3 நாளுஆகுமின்னு சொல்லிட்டானுங்க..சின்னையா போன் பண்ணா மறக்காம சொல்லிடுங்கம்மா..இன்னும் செய்யலையான்னு என்னை தான் கோவிச்சுப்பாரு.." என்று கெஞ்சலாகக் கூறினான்.
கதவு தாழ் பற்றி நளந்தனுக்கு எப்படி தெரியும்?! பொறுப்பாய் அதை சரி செய்ய வழியும் செய்து..ஆவல் மிக, "உன்னிடம் எப்போது சொன்னார் முத்து?" என்று மிதுனா கேட்டாள். "சின்னய்யாவ கேக்கறீங்களாம்மா ? அது..ராத்திரி சொன்னாருங்க. உங்க ரூம்பு தாண்டிதானுங்களே அவரு ரூம்பு. படி ஏறறச்சே இந்த கதவு லேசா திறந்துக்கிட்டிருந்ததுங்க.. ஐயா வெளிய இருந்து இழுத்து சாத்த பாத்தப்பத்தான் கதவு கீல் சரியா பொருந்தலைன்னு தெரிஞ்சது. இதெல்லாம் கவனிக்க மாட்டியான்னு எனக்கு ஒரே வசவுங்க! நாளைக்கே சரி பண்ணனும்னு கோவமா சொன்னாருங்க..நீங்க கொஞ்சம் சமாதானமா சொல்லிடறீங்களாம்மா?" என்று காரியத்தில் கண்ணாய் முடித்தான்.
"நீயே சாயந்திரம் உங்க சின்ன ஐயா வந்ததும் சொல்லிடேன் முத்து?" என்று நளந்தனிடம் பேசுவதைத் தவிர்க்கப் பார்த்தாள் மிதுனா.
"ஐயோ! விஷயம் தெரியாதுங்களா? ஐயா சொல்லிட்டு போவலீங்களா? நீங்க தூங்கிட்டு இருந்ததால தொந்தரவு செய்ய வேணாமின்னு சொல்லலை போல.." என்று விஷயத்தை முழுதும் சொல்லாமல் குழப்பினான் முத்து.
இழுத்ததுப் பிடித்த பொறுமையோடு, "அப்படிதான் இருக்கும். என்ன விஷயம் முத்து? " என்றவளிடம், "ஐயா காலம்பறவே வேலை விஷயமா வெளியூருக்கு போயிட்டாருங்களே! வர ரெண்டு மூணு வாரம்கூட ஆவலாம்னு பெரிய ஐயாகிட்ட சொன்னாருங்க..சரி வரேனுங்க" என்றபடி நடையைக் கட்டினான் அவன்.
மிதுனாவுக்கு அந்த செய்தி வியத்தகு வகையில் திருப்தியையும் திருப்தியின்மையையும் ஒருசேர தந்தது! நளந்தனை உடனடியாக நேருக்கு நேர் பார்க்க வேண்டியது இல்லை. அத்தோடு, கதவு தாள் விவரம் தெரிந்ததும் தன்னைப் பற்றி ஏதும் தவறான எண்ணமிருந்தால் அதையும் மாற்றிக் கொண்டிருப்பானே.. அது ஒரு திருப்தி. ஆனால்..அவனில்லாத வீடு விநோதமாக அவள் திருப்தியை கேள்விக்குறியாக்கியது. சுத்த பைத்தியக்காரத்தனம்! ஏற்கெனவே அறிமுகமில்லாத இடம். அதில் கொஞ்சமே அறிமுகமான ஒரே சக வயதினனை மனம் தேடுகிறது. அவ்வளவே என்று கற்பித்துக்கொண்டாள் மிதுனா.
ஒரு நல்ல எழுத்தாளர் அல்லது எழுத்தாளியின் வெற்றி படிப்பவர்களை ஆளுமை படுத்த முடிவதில் தான் இருக்கிறது என்று சொல்வார்கள் ...........
ReplyDeleteஅந்த வகையில் படிக்கும் என்னை போன்றோர் அந்த கதாபாத்திரமாக (மிதுனாவாக ) உணர முடிந்ததில் உங்களுக்கும் வெற்றி தான் தேனு!
பாருங்க !மிதுனாவோடு தூங்கி மிதுனாவோடு எழுந்து ,மிதுனா மாதிரியே மன அமைதியும் அமைதி இன்மையையும் ஒரு சேர
அனுபவிக்கிறோம்.,
பதிவுக்கு நன்றி தேனு
மீண்டும் திங்கள் சந்திப்போம்;அது வரை கதையின் போக்கை பற்றி சிந்திப்போம் !
Really its true Thenu....we also feel like mithuna...
Deletewow.. ungaloda sernthu payanikara mathiri iruku Priya.. naan maranthu pona varigal ellam quote panni ennai marupadiyum mithunavin sorkathukku oluthuttu poreenga. (naane mithunavin sorgam-nu solrenu parkareengala... naanum mithuna-va thoongi, mithuna-va elunthu.. ezhuthina varigal avai, priya... athanala unarnthu unarnthathai sonnen. :) ) see you soon..
ReplyDeleteவிரைவில் வாங்க தேனு .........
ReplyDeleteநீ இல்லாம கமெண்ட்ஸ் போடறதுக்கு என்னவோ போல இருக்குது :(
வீட்டிலே வேலை அதிகமோ அல்லது அலுவலகத்தில் வேலை அதிகமோ
அல்லது உடல் நல குறைவோ ,அல்லது நாங்க தெரியாமல் ஏதாவது உங்க மனம் புண்படும்படி
சொல்லி விட்டோமோ ......
நீங்க சொன்னா தானே தெரியும் .............
எப்போ வருவீங்க என்று ஆவலோடு எதிர்பார்க்கும்
ப்ரியாக்கா
priyakka,
ReplyDeletesorry sorry sorry... konjam busy avlo0 thaan.. kobama unga melaya? che che... u r a sweety... neenga akka va?:) I am wondering how to send u my mail id... cant post it publicly...
unga blog-la cvomment moderation iruka? or u can mail ur id via comments here. anyways I have to approve to publish ur comments so it will not be posted publicly unless I approve. unga comment that bears ur mail id-a naan padichu unga mail-id-a manasula thirudikittu, commentsa 'reject' pannidaren. okva akka? :)
ReplyDeleteதேங்க்ஸ் தேனு .,
ReplyDeleteஹி ஹீ அது ஜானுவில இருந்து குந்தவை ,புவனா ,காயத்ரி ,அனாமிகா எல்லோரும் அக்கான்னு கூப்பிட்டு என் நிலைமை இப்படி
பிரியா அக்காவா ஆகி விட்டது .,அதுவும் நம்ம இனத்துக்கு மட்டும் அடுத்தவளை அக்கான்னு கூப்பிடரதுலே ஒரு அலாதி ஆனந்தம்...........
அப்புறம் அக்கான்னா மேடம் என்று அர்த்தமாம்!(கோவை திருப்பூர் மாவட்ட பேச்சு வழக்கு )
??neenga akka va?:) ??
பின்னே ! என்னை என்ன ஆத்தான்னு நினைச்சீங்களோ :(
//unga comment that bears ur mail id-a naan padichu unga mail-id-a manasula thirudikittu, commentsa 'reject' pannidaren. okva akka? //
ReplyDeleteமனசில நினைத்தது :
போப்பா ;இப்படி ஏதாவது சொல்லிடறீங்க .,நானும் இதை நினைத்து அப்போ அப்போ லூசு மாதிரி சிரிச்சு கிட்டு இருக்கேன்னு என்ர
ஆத்துக்காரர் கூட கிண்டல் பண்றார் :)
வெளியில் சொல்வது:
நான் தனியா உங்களுக்கு ஈமெயில் id அனுப்பி விட்டேனே .,
இப்போ எப்படி ரீஜெக்ட் பண்ணுவீங்களாம் .,ஹ ஹா
Nice
ReplyDelete