இருள் மறைத்த நிழல் (தேனு) - 19
ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் பேச ஆரம்பித்துவிட்டாளே தவிர உள்ளுக்குள் மிதுனாவுக்கு உதறல் தான். அதிகபட்சம் ஒரு மாதமே தெரிந்த ஒருத்தி, அவன் தாத்தாவின் மேல் அவனுக்கிருந்த அன்பை சந்தேகிப்பது என்றால்.. எவன் பொறுத்துக்கொள்வான்? அதிலும் நளந்தன் போல் இம்மென்றால் எகிறுபவன்?
இருப்பினும், தாத்தாவின் மனக்குமுறலை இவனுக்கு எப்படியாவது உணர்த்திவிட மாட்டோமா என்ற ஆதங்கம் அவளை உந்தித் தள்ளியது.
"தாத்தாவின் மேல் உயிரையே வைத்திருப்பவர் என்றால்..நீங்கள்.. அவர் சொல்படி..வந்து..சொல்பேச்சு கேட்பது..கேட்பீர்களா?.." விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் மிதுனா திண்டாடினாள்.
நளந்தன் புத்திசாலி ஆயிற்றே! அவள் சொல்ல வருவதை சரியாகக் கணித்து நேரே விஷயத்திற்கு வந்தான்.
"நான் கேட்பதில்லை என்று சொல்ல வருகிறாய். அதை நேரடியாகவே சொல்லலாமே! ஏன் சுத்தி வளைக்கிறாய், ம்?"
"சரி.அப்படிதான் வைத்துக் கொள்ளுங்களேன். அவர் சொல்வது போலக் கேட்டால் தான் என்ன? உங்கள் நன்மைக்குத் தானே சொல்லப் போகிறார்?"
"அப்படி என்ன சொல்பேச்சு கேட்காமல் நான் குட்டிசுவராகிவிட்டேனாம்?" கேலி போலவே பேச்சைத் திருப்பினான் நளந்தன்.
அவன் குரலில் இருந்த இலகுத்தன்மை அவளுக்குத் தென்பூட்டியது. அவள் எண்ணி பயந்தது போல 'நீ யார் இதைக் கேட்க?' என்று அவன் எகிறவில்லையே! தட்டிக் கழிக்காமல் காது கொடுத்து வேறு கேட்கிறானே! சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா?! கவனமாக வார்த்தைகளைக் கோர்த்துப் பேசினாள் மிதுனா.
"குட்டி சுவர் என்று சொன்னேனா?! வந்து..நீங்கள் இந்த கிளப், பப் என செல்வது பிடிக்கவில்லை என்றார் அவ்வளவுதான்.."
முறுவல் மாறாது அவளைப் பார்த்தவன், "கிளப், பப் எல்லாம் ஜஸ்ட் ஒரு ரிலாக்சேஷனுக்கு தான்.. தாத்தா அந்த காலம்..அவருக்குப் புரியாது. அங்கு போய் குடித்து கும்மாளம் போடுவதாக நினைத்து வீணேக் கவலைப்படுகிறார். மனதை அப்படி அலைய விட்டால் பின் தொழிலில் எப்படி முன்னேற முடியும்? என் தொழில் திறமையைப் பார்த்தாவது என் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும்" என்று நிதானமாக அவளுக்குமே அது செய்தி போல சொன்னான்.
"இருக்கலாம்..ஆனால்..குடி சிகரெட்டு...உடலுக்கும் கெடுதிதானே .." இழுத்தாள் மிதுனா.
"தாத்தா சொன்னாரா? அதற்குள் எல்லாம் ஒரு மூச்சு சொல்லி அழுதுவிட்டாரா? அவர் சுருட்டு குடிப்பார்..இப்போதல்ல..முன்பெல்லாம். கேட்டு பார்" என்று சொல்லி மெளனமாக சிரித்தான்.
அவளது தோல்வியுற்ற பார்வையில் என்ன கண்டானோ, அவனே தொடர்ந்து, "என் லிமிட் என்ன என்று எனக்கு தெரியும். சில பழக்கங்கள் தவறு என்று தெரிந்தாலும் விட முடிவதில்லை. அதாவது முழுமையாக விட முடிவதில்லை. ஆனால் கட்டுக்குள் வைத்திருக்கும் மனத்திண்மை, பக்குவம் எனக்குண்டு. என்னிடம் பேசுவதை விட உன் தாத்தாவிடம் சொல்லி அவரைத் தேற்று." என்று பொறுமையாகவே பதிலும் சொன்னான்.
அவனது பொறுமை அவளுக்கு பெரும் வியப்பை அளித்தது. பேசிக் கொணடே தோட்டத்தின் பின்கதவு வரை வந்து விட்டனர். திரும்பிச் செல்ல யத்தனித்த மிதுனா ஓரமாக விழுந்துகிடந்த முள்வேலியில் தவறுதலாய் காலை வைத்து விழப்போனாள்.
சட்டென அவளது கையை மேலாக பற்றி அவளை விழாது நிறுத்தியவன் சற்றுமுன் இருந்த பொறுமைக்கு மாறாக, கோபமாக "சிங்காரம்! " என்று உரக்கத் தோட்டக்காரனை அழைத்தான். சின்ன எஜமான் குரல் கேட்டு ஓடி வந்த சிங்காரம் நளந்தனின் உறுத்த பார்வையிலேயே கீழே கிடந்த முள்வேலியை ஓரங்கட்டி வைத்தான்.
"சரியாக் கட்ட கயறு தேடினேன் சின்ன ஐயா. அப்பால தண்ணி பாச்சற வேலையில இத மறந்துட்டேனுங்க.." என்று தலையை சொரிந்தான்.
"செய்கிற வேலையில் கவனமில்லாமல்.. இனி ஒரு தரம் இப்படி செய்யாதே" என்று கடுமையான குரலில் எச்சரித்தான் நளந்தன்.
திரும்பி நடந்த போது மிதுனாவால் இயல்பாக பேச முடியவில்லை. ஒரு சின்ன தவறு ..முள்வேலியை சரியாக இழுத்து வைத்துக் கட்ட மறந்துவிட்டான்.. அதற்குபோய் இவ்வளவு கடுமை காட்ட வேண்டுமா? அவள் முகம் சோர்ந்தது.
"மறுபடியும் என்ன?"
சிங்காரம் கண் மறைந்து விட்டானா என்று உறுதிபடுத்திக் கொண்டு, "சின்ன தவறு தானே. அதற்கு ஏன் அப்படி கோபப்பட்டீர்கள்? உங்களை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை" என்று சலிப்பாகக் கூறினாள்.
"அவரவருக்கென ஒரு கடமை உண்டு. தோட்டப் பராமரிப்பு சிங்காரத்தின் கடமை. அதை எதிர்பார்ப்பதில் என்ன தவறு?" என்றான் நளந்தன்.
"எல்லாரிடமும் ஒரு கடமையை எதிர்பார்ப்பீர்களா? வீட்டிற்கு புதிதாக வருபவர்களிடம் கூடவா?" என்றாள் மிதுனா.
"நம் முதல் சந்திப்பை கூறுகிறாயா? ஆமாம்! புதிதாக வந்தாலும், கதவைத் தட்டி விட்டு வருவது முறை தானே?"
அந்தப் பேச்சை ஏன் எடுத்தோம் என்றிருந்தது அவளுக்கு. தவறு அவள் மேல் தான்..சரி ஆனால், கதவைத் தவறுதலாகத் தாளிடாமல் விட்டது..அதற்கும் தானே அந்த குதி குதித்தான்..
அவள் எண்ணத்தைப் படித்தவன் போல , "கதவைத் தாளிடாமல் விட்டது..சரி சரி..கதவு தாழ் சரியாகப் பொருந்தாததைக் கவனியாது விட்டது உன் தவறு தானே?" என்றவன் குறும்பாகக் கண் சிமிட்டி ,"சாதகமான பாதகம் என்றாலும்.." என்று இடைச்செருகினான்.
மிதுனாவின் காது மடல் சிவந்தது. பேச்சை திசை மாற்ற எண்ணி, தோல்வியை ஒப்புக்கொள்ளவும் மனமில்லாது, வேறு கோணத்தில் தாக்கினாள்.
"எல்லாருக்கும் ஒரு கடமை இருப்பதாக சொன்னீர்களே..உங்களுக்கும்..உங்களிடமும் அதே போல் தாத்தாவும் எதிர்பார்க்கலாம் தானே?"
மேலே சொல் என்பது போல தலை அசைத்தான் நளந்தன்.
பிற பெண்களோடு சகஜமாக சுற்றுவதும்.. கை அணைப்பதும்.. தோள் அணைப்பதும்.. இதழ் அணைப்பதும்... இதுதானேத் தாத்தாவை ரொம்பவும் சங்கடப்படுத்துகிறது..அதை எப்படி 'செய்யாதே' என்று அவனிடம் பக்குவமாக சொல்வது?
இரவு ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் பப்-ல் இருந்து அவன் திரும்பும் நாட்களில் எல்லாம்.. "பெயர் கெட்டுவிட்டால் நாளை அவனுக்கு எப்படியம்மா நல்ல பெண் பார்ப்பது" என்று மருகுகிறாரே!
இந்த இரு மாதங்களில் உண்டான ஒரு இளக்கமான நட்பில் இதுவரை பேசிவிட்டாள் ..அவனும் இணக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான் தான்..ஆனால் நட்பை மீறி அவனிடம் அவளுக்கு என்ன உரிமை? அதுவும் அவன் தாத்தாவிற்கு இல்லாத உரிமை? அவர் சொல்லியே அவன் கேட்கவில்லையே!
அவன் அவள் பேசக் காத்திருப்பதை கண்ட மிதுனா இனியும் தாமதிக்க இயலாது என்று உணர்ந்து, வேறு வழியின்றி சொல்ல நினைத்ததை முடிந்தவரை நயமாக சொன்னாள்.
"வந்து.. நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று தாத்தாவிற்கும் ஆசை இருக்கும் தானே..அவருக்கு ஒரு பேரனோ பேத்தியோ காலாகாலத்தில் பெற்றுத் தருவதும் உங்கள் கடமை தானே?" சொல்லி முடிக்குமுன் காது மடல் இன்னமும் சிவந்தது மிதுனாவுக்கு.
ஒரு கால்கட்டு என்றானபின் இப்படி சுற்றமாட்டானே..
என்ன சொல்லப் போகிறானோ என்று அஞ்சினாள் மிதுனா. தாத்தாவையே 'வேறு பேச சொல்லி' வாய் அடைப்பவன்..
அவள் அஞ்சியதற்கு மாறாக அவளை ரசனையாய் பார்த்து வாய் விட்டு சிரித்தான். அதே பளிங்கு பற்கள்! சீரான வரிசையில்! அவனில் லயித்த மனதை கடிவாளமிட்டு திருப்பி, "ஏன்? ஏன் சிரிக்கிறீர்கள்? " என்றாள்.
"எனக்கென்ன அறுபது வயதா ஆகிவிட்டது? என்ன அவசரம்..நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்றா சொன்னேன்? இப்போது வேண்டாம் என்கிறேன். தாத்தா தொனதொனக்கிறார்" என்று சிறு எரிச்சல் கலந்து சொன்னான்.
"ஏன்?"
"என்ன ஏன்?" அவளையேத் திருப்பிக் கேட்டான் அவன்!
"ஏன் தாமதிக்கிறீர்கள்? வந்து..யா..யாரையேனும் கா..காதலிக்கிறீர்களா?" மூச்சு வர மறுத்தது மிதுனாவுக்கு.
அன்று நகை கடைக்குக் கை கோர்த்து சென்ற அழகி மனகண்ணில் பழிப்புக் காட்டினாள். அவளைத்தான் காதலிக்கிறானோ? நல்ல அழகி தான், சன்னகுரலில் சொன்னது நியாய புத்தி. கூடவே அழகிருந்தால் போதுமா என்றும் ஒரு முனுமுனுப்பு... இன்னொரு பெண்ணை அழகி என்று ஏற்றுக் கொள்வது தனக்கு கூட இவ்வளவு சிரமமாக இருக்கும் என்று மிதுனா எண்ணியதே இல்லை. அழகோ திறமையோ எங்கிருந்தாலும் மனதார வாய்விட்டு பாராட்டுபவள் அவள். ஆனால் இன்று..மனம் சண்டித்தனம் செய்தது.
அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்தவன் தன் பின் கழுத்தை வலது கையால் தேய்த்தபடி என்னவோ தீவரமாக ஒரு நிமிடம் யோசித்தான். பின்னர் தோளைக் குலுக்கி, "இருக்கலாம்..தெரியவில்லை" என்றான் ஒரு புன்சிரிப்போடு .
இருக்கலாமா? தெரியவில்லையா? இது என்ன பதில்?! ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்வான் என்று பார்த்தால்.. நெஞ்சம் படபடவென்றது..இதென்ன நரக வேதனை!
wow, wow, the way u are taking the story to next level really nice...
ReplyDeleteHey Dominic! Thought onnly my kitchen enticed you. LOL. So you are a girl, I suppose. :-)
ReplyDelete//ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் பேச ஆரம்பித்துவிட்டாளே தவிர உள்ளுக்குள் மிதுனாவுக்கு உதறல் தான். அதிகபட்சம் ஒரு மாதமே தெரிந்த ஒருத்தி, அவன் தாத்தாவின் மேல் அவனுக்கிருந்த அன்பை சந்தேகிப்பது என்றால்.. எவன் பொறுத்துக்கொள்வான்? அதிலும் நளந்தன் போல் இம்மென்றால் எகிறுபவன்?
ReplyDeleteஇருப்பினும், தாத்தாவின் மனக்குமுறலை இவனுக்கு எப்படியாவது உணர்த்திவிட மாட்டோமா என்ற ஆதங்கம் அவளை உந்தித் தள்ளியது.//
நமக்கும் தான் உதறல் ;இந்த நளன் மிதுவை ஏதாவது திட்டி விட்டால் என்று ................
//"தாத்தாவின் மேல் உயிரையே வைத்திருப்பவர் என்றால்..நீங்கள்.. அவர் சொல்படி..வந்து..சொல்பேச்சு கேட்பது..கேட்பீர்களா?.." விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் மிதுனா திண்டாடினாள்.//
ReplyDeleteRC பாணியில் சொன்னால் உளறி கொட்டி கிளறி மூடினாள் ஹ ஹா
//நளந்தன் புத்திசாலி ஆயிற்றே! அவள் சொல்ல வருவதை சரியாகக் கணித்து நேரே விஷயத்திற்கு வந்தான்.
ReplyDelete"நான் கேட்பதில்லை என்று சொல்ல வருகிறாய். அதை நேரடியாகவே சொல்லலாமே! ஏன் சுத்தி வளைக்கிறாய், ம்?"
"சரி.அப்படிதான் வைத்துக் கொள்ளுங்களேன். அவர் சொல்வது போலக் கேட்டால் தான் என்ன? உங்கள் நன்மைக்குத் தானே சொல்லப் போகிறார்?"
"அப்படி என்ன சொல்பேச்சு கேட்காமல் நான் குட்டிசுவராகிவிட்டேனாம்?" கேலி போலவே பேச்சைத் திருப்பினான் நளந்தன்.
அவன் குரலில் இருந்த இலகுத்தன்மை அவளுக்குத் தென்பூட்டியது. அவள் எண்ணி பயந்தது போல 'நீ யார் இதைக் கேட்க?' என்று அவன் எகிறவில்லையே! தட்டிக் கழிக்காமல் காது கொடுத்து வேறு கேட்கிறானே! சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா?! கவனமாக வார்த்தைகளைக் கோர்த்துப் பேசினாள் மிதுனா.
"குட்டி சுவர் என்று சொன்னேனா?! வந்து..நீங்கள் இந்த கிளப், பப் என செல்வது பிடிக்கவில்லை என்றார் அவ்வளவுதான்.."
முறுவல் மாறாது அவளைப் பார்த்தவன், "கிளப், பப் எல்லாம் ஜஸ்ட் ஒரு ரிலாக்சேஷனுக்கு தான்.. தாத்தா அந்த காலம்..அவருக்குப் புரியாது. அங்கு போய் குடித்து கும்மாளம் போடுவதாக நினைத்து வீணேக் கவலைப்படுகிறார். மனதை அப்படி அலைய விட்டால் பின் தொழிலில் எப்படி முன்னேற முடியும்? என் தொழில் திறமையைப் பார்த்தாவது என் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும்" என்று நிதானமாக அவளுக்குமே அது செய்தி போல சொன்னான்.//
இனிமையான உரையாடல்கள் ;சில ஸ்வீட் மெமொரீஸ் நினைவுக்கு வரவழைத்த வரிகள்...................
நளனுக்கு நிகராக மிது படைக்கபட்ட விதம் நிறைவையும் உற்சாகத்தையும் அடுத்து என்ன பேச போகிறார்களோ என்ற ஆவலையும் தருகிறது ....................
//அவளது தோல்வியுற்ற பார்வையில் என்ன கண்டானோ, அவனே தொடர்ந்து, "என் லிமிட் என்ன என்று எனக்கு தெரியும். சில பழக்கங்கள் தவறு என்று தெரிந்தாலும் விட முடிவதில்லை. அதாவது முழுமையாக விட முடிவதில்லை. ஆனால் கட்டுக்குள் வைத்திருக்கும் மனத்திண்மை, பக்குவம் எனக்குண்டு. என்னிடம் பேசுவதை விட உன் தாத்தாவிடம் சொல்லி அவரைத் தேற்று." என்று பொறுமையாகவே பதிலும் சொன்னான்.//
ReplyDeleteஇந்த மிதுவுக்கு அவனின் பேச்சுகளில் என்ன தான் மயக்கமோ ! பாருங்க உன் தாத்தாவிடம் சொல்லி அவரைத் தேற்று என்கிறான்
அதை கூட கவனிக்க வில்லையே .,ஹ ஹா
//அவனது பொறுமை அவளுக்கு பெரும் வியப்பை அளித்தது. பேசிக் கொணடே தோட்டத்தின் பின்கதவு வரை வந்து விட்டனர். திரும்பிச் செல்ல யத்தனித்த மிதுனா ஓரமாக விழுந்துகிடந்த முள்வேலியில் தவறுதலாய் காலை வைத்து விழப்போனாள்.
ReplyDeleteசட்டென அவளது கையை மேலாக பற்றி அவளை விழாது நிறுத்தியவன் சற்றுமுன் இருந்த பொறுமைக்கு மாறாக, கோபமாக "சிங்காரம்! " என்று உரக்கத் தோட்டக்காரனை அழைத்தான். சின்ன எஜமான் குரல் கேட்டு ஓடி வந்த சிங்காரம் நளந்தனின் உறுத்த பார்வையிலேயே கீழே கிடந்த முள்வேலியை ஓரங்கட்டி வைத்தான்.//
நளன் மிதுவின் மென்மையான கையை பற்றியதும் மிதுவுக்கு எப்படி இருந்ததாம் ! முதல் தொடுகை ஆகிற்றே.....
அதனால் தான் கேட்கிறோம் !
ஆஹா ! ஒரு நாடகம் பல ரசங்களும் சேர்த்து நடந்து கொண்டு இருக்கிறதே
ReplyDeleteமிதுவின் முகம் சோர்தல் ,சலிப்பு ,விவாதம் ,காதுமடல் சிவத்தல் (முகமும் தான்! ),வெட்கம் ,கிளுகிளுப்பு ,அவனில் லயித்த மனம் ,கடிவாலமிடல் ,முணுமுணுப்பு,பொறாமை ,நெஞ்ச படபடப்பு ....................
சரியான இடங்களில் பொருத்தமான வார்த்தைகள் ரொம்பவே ரசிக்க வைக்கிறது !