இருள் மறைத்த நிழல் (தேனு) - 15
சமையல் அறையைக் கடக்கும்போது தான், தாத்தா அறையில் மிளகுதூள் தீர்ந்துவிட்டதே என்று அவளுக்கு நினைவு வந்தது. அன்று அவருக்குத் தொண்டைக் கமறலாய் இருந்ததால், காலைச் சிற்றுண்டியே சிக்கன் சூப் தான். பெரும்பாலும் தாத்தா அவர் அறையிலேயே உண்பதால், உப்பு, மிளகு தூள் போன்றவை அங்கேயும் ஒரு shaker-ல் எடுக்க வசதியாக இருக்கும். நேற்றிரவு , pepper shaker-ஐ எடுத்து வந்து refill செய்ய மறந்துவிட்டாள். தாத்தாவிற்கு சூப் என்றால் எப்போதும் கூடுதலாய் கொஞ்சம் மிளகுதூள் சேர்த்தால் தான் திருப்தி.
இப்போது, மறுபடியும் மிளகுதூளோடு அங்கே செல்ல வேண்டும். நளந்தனின் வேடிக்கை பேச்சும், பளீர் சிரிப்பும், அவளை அங்கே செல்லத் தூண்டியது என்றாலும், சும்மா சும்மா ஏதோ சாக்கிட்டு அவன் இருக்கையில் அவள் அங்கே செல்வதாக நினைத்துக் கொள்வானோ என்றும் தயக்கமாக இருந்தது. ஏனோ அவன் எண்ணத்தில் தான் தாழ்வது அவளுக்கு கிஞ்சித்தும் பொறுக்கவில்லை. ஏதோ இப்போதுதான் சுமுகமாக சிரிக்கிறான். அதை கெடுத்துக் கொள்வானேன்!
தாத்தாவாக கேட்டால் எடுத்துச் செல்லலாமே என்றது ஒரு மனம். முத்துவிடம் கொடுத்தனுப்பேன் என்றது ஒரு மனம். ம்ஹும்.. அது மரியாதை அல்ல. இத்தனை நாள் நீதானே தாத்தாவிற்கு எல்லாம் பார்த்துப் பார்த்து செய்தாய்? இதிலென்ன தவறு? நீயே போ..என்றது ஒரு மனம். கடைசியில் தானே செல்வது, அதிலும் உடனே செல்வது, அதிலும் கதவைத் தட்டிவிட்டே செல்வது என்று ஒரு முடிவோடு மிளகு டப்பாவைத் தூக்கிக் கொண்டு அவளே சென்றாள்.
கதவைத் தட்ட முனைகையில், உள்ளே தன் பெயர் அடிபடுவது கண்டு தயங்கினாள். உள்ளே செல்வதா வேண்டாமா என்று அவள் தன்னுள் திணறுகையில், "மிதுனா நல்ல பெண்ணப்பா" என்ற தாத்தாவின் குரல் அட்சர சுத்தமாய் சாத்திய கதவையும் தாண்டிக் கேட்டது. ஒட்டுக் கேட்பது தவறு..அங்கிருந்து அகன்றுவிடத தான் நினைத்தாள் மிதுனா. ஆனால் தொடர்ந்து வந்த நளந்தனின் குரல் அவளைத் தடுத்தது.
"நான் கூட அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும், தாத்தா"
இவன் எதற்காக தனக்கு நன்றி சொல்ல வேண்டும்? அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளை நகரவிடவில்லை. நகர சொன்ன மனசாட்சியையும் தலையில் தட்டி ஒரு புறம் உட்கார வைத்தது!
தன் கணீர் குரலில் தொடர்ந்தான் நளந்தன்.
"அவள் கவனிப்புப் பற்றி நீங்கள் அவ்வளவு சொன்னதால் தானே தாத்தா நானும் அங்கே உங்களைப் பற்றியத் தவிப்பின்றி இருக்க முடிந்தது. இரண்டு நாள் கூட ஆனாலும் அங்கேயே இருந்து வேலையையும் முடிக்க முடிந்தது."
அவளுக்கு உச்சி குளிர்ந்து. அது தான் அவ்வளவு இளக்கமாகப் பேசினானா?! இன்றும் அவள் உள்ளே நுழைந்ததும் கோபம் வந்தது தான்..ஆனால் நொடியில் தணிந்தும் விட்டான் தான்.. இம்மென்றால் கோபம் வருகிறதே! கொஞ்சம் முன்கோபி போல..
நொடியில், மகா முசுடு கொஞ்சம்..கொஞ்சமே கொஞ்சம் முன்கோபி ஆன வினோதம் உள்ளே குறுகுறுத்தது. ஆனால் அவள் மகிழ்ச்சிக்கு அவ்வளவு தான் ஆயுள் போலும்.
ஒட்டுக் கேட்ட எவர் தான் நல்லதைக் கேட்டிருக்கிறார்கள்?! மனசாட்சிக்கு மதிப்புக் கொடுத்து முன்பே அங்கிருந்து நகர்ந்திருக்கலாமோ என்று அன்று பூராவும் அவள் நோகும்படி ஆயிற்று நளந்தனின் தொடாந்தப் பேச்சு.
"அவள் தாத்தா..உங்கள் சிநேகிதர் சந்தானம்..அவரிடம் பேசினீர்களா தாத்தா"
"ம்.. பேசினேன்.. அவளுக்கு இருக்கும் ஒரே சொந்தம் அவன் தான்..அவனையும் பிரிந்து இருக்க வேண்டியதாகிவிட்டது..எனக்கு ஒரு பேச்சுத் துணையாக 'Companion' போல இரம்மா என்றேன்..சோம்பி இருக்க மனமின்றி, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறாளடா, விஜி.." குரல் கம்மிற்று அவருக்கு.
"எல்லா வேலையும் என்றால்..ஏதாவது நல்ல சம்பளமாக போட்டுத் தர வேண்டியது தானே தாத்தா..தனக்கென நல்லதாய் ஆடை அணிகளாவது வாங்கிக் கொள்வாளே. உங்களுக்கும் அவளைப் பிடித்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல ஒரு 'companion' போல இங்கேயே இருந்து.. கணிசமான தொகை அவள் பெயரில் மாதாமாதம் போட்டுவிடலாம்.. அவள் எதிர்காலத்திற்கும் வகை செய்தாற்போல ஆகும்.." மேற்கொண்டு கேட்க அங்கே மிதுனா இல்லை!
பாவம், இருந்திருந்தால்.. தாத்தா அவனை அப்படிப் பேசியதற்காகக் கடிந்து கொண்டதையும், சந்தானமும் அவரும் எந்த அளவிற்கு நெருங்கிய சிநேகிதர்கள் என்று கூறியதையும், அவள் இந்த வீட்டுப் பெண் என்று தான் கருதுவதாகச் சொன்னதையும் கேட்டிருக்கலாம்!
சமையல் அறைக்கு விதிர்விதிர்த்து வந்தவள், முத்துவை அழைத்து, அவனிடமே மிளகுத் தூளைத் தாத்தாவின் அறைக்குக் கொடுத்தனுப்பினாள். இதை முன்பே செய்திருக்கலாம்! தன்னறைக்கு விரைந்து வந்து அப்படியேக் கட்டிலில் விழுந்தாள் மிதுனா.
'நல்ல சம்பளம்!' பொட்டில் அறைந்தாற்போல இருந்தது அவளுக்கு. சுந்தரம் தாத்தா என்ன உரிமை கொடுத்தாலும், அவள் அன்னியம் தானே..அவன் சொன்னதில் என்ன தவறு? ஆனாலும் இது ஏன் தன்னை இவ்வளவு பாதிக்க வேண்டும் என்று அவளுக்குப் புரியவில்லை.
சற்றுமுன் அவனது ஒரு சிரிப்பில் உலகை வென்ற திருப்தி கொண்டது இப்போது பெரும் மடத்தனமாக தோன்றியது.தாத்தா திரும்ப திரும்ப அவளை தன் சொந்த பேத்தி போல என்றதை அவள் அப்படியே எடுத்துக் கொண்டாளா?! தன் நிலை மறந்து அப்படி அவன் சிரிப்பில்..அவனில் லயிக்கவும் வேண்டுமா?!
ஏதோ ஒன்று..முளையிலே கிள்ளி எறிய வேண்டிய ஒன்று.. ஒரு மடத்தனம்..தன்னுள் குடிகொண்டு இலை மறை காயாக பல்லிளித்தது!
இன்னதென்று முழுதும் புரியாவிட்டாலும், இப்படி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றில்லாமல், இனி மனதைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற நினைப்போடு தூங்கிப் போனாள் மிதுனா.
கதா பாத்திரங்களுடன் பயணித்து கொண்டு அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் செய்கைகளையும் கவனிக்கும் விதம் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது
ReplyDelete//. ஏனோ அவன் எண்ணத்தில் தான் தாழ்வது அவளுக்கு கிஞ்சித்தும் பொறுக்கவில்லை. ஏதோ இப்போதுதான் சுமுகமாக சிரிக்கிறான். அதை கெடுத்துக் கொள்வானேன்!//
ஆமாம் மிது .,நம்ம பிரஸ்டீஜ் நாம எப்போவும் விட்டு தர கூடாது என்று என்னையையும் அறியாமல் சொல்லி விட்டு நாக்கை கடித்து கொண்டேன் ஹி ஹீ
//தாத்தாவாக கேட்டால் எடுத்துச் செல்லலாமே என்றது ஒரு மனம். முத்துவிடம் கொடுத்தனுப்பேன் என்றது ஒரு மனம். ம்ஹும்.. அது மரியாதை அல்ல. இத்தனை நாள் நீதானே தாத்தாவிற்கு எல்லாம் பார்த்துப் பார்த்து செய்தாய்? இதிலென்ன தவறு? நீயே போ..என்றது ஒரு மனம். கடைசியில் தானே செல்வது, அதிலும் உடனே செல்வது, அதிலும் கதவைத் தட்டிவிட்டே செல்வது என்று ஒரு முடிவோடு மிளகு டப்பாவைத் தூக்கிக் கொண்டு அவளே சென்றாள்.//
ReplyDeleteமிதுவின் மனம் படும் பாட்டை நாமும் உணர முடிகிறது .,மனம் செய்யும் மாயங்கள் தான் என்னே ........
கதவைத் தட்ட முனைகையில், உள்ளே தன் பெயர் அடிபடுவது கண்டு தயங்கினாள். உள்ளே செல்வதா வேண்டாமா என்று அவள் தன்னுள் திணறுகையில், "மிதுனா நல்ல பெண்ணப்பா" என்ற தாத்தாவின் குரல் அட்சர சுத்தமாய் சாத்திய கதவையும் தாண்டிக் கேட்டது. ஒட்டுக் கேட்பது தவறு..அங்கிருந்து அகன்றுவிடத தான் நினைத்தாள் மிதுனா. ஆனால் தொடர்ந்து வந்த நளந்தனின் குரல் அவளைத் தடுத்தது.//
ReplyDeleteமிதுவின் தயக்கம் ,திணறல் ,அங்கிருந்து அகன்று விட நினைத்தல்,நளந்தனின் குரல் அவளை தடுத்தல் என்று படிக்கும் நமக்கு ஏன் இவ்வளோ பரபரப்பு !
//"நான் கூட அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும், தாத்தா"
ReplyDeleteஇவன் எதற்காக தனக்கு நன்றி சொல்ல வேண்டும்? அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளை நகரவிடவில்லை. நகர சொன்ன மனசாட்சியையும் தலையில் தட்டி ஒரு புறம் உட்கார வைத்தது!//
ஆவல் மிதுவுக்கும் மட்டும் அல்ல நமக்கும் தான் !
//அவளுக்கு உச்சி குளிர்ந்து. அது தான் அவ்வளவு இளக்கமாகப் பேசினானா?! இன்றும் அவள் உள்ளே நுழைந்ததும் கோபம் வந்தது தான்..ஆனால் நொடியில் தணிந்தும் விட்டான் தான்.. இம்மென்றால் கோபம் வருகிறதே! கொஞ்சம் முன்கோபி போல..
ReplyDeleteநொடியில், மகா முசுடு கொஞ்சம்..கொஞ்சமே கொஞ்சம் முன்கோபி ஆன வினோதம் உள்ளே குறுகுறுத்தது. ஆனால் அவள் மகிழ்ச்சிக்கு அவ்வளவு தான் ஆயுள் போலும்.//
கதாசிரியை இங்கே மிதுவின் உணர்வுகளை படம் பிடித்து காட்டி இருக்கிறார் எனலாம்
உச்சி குளிர்ந்தது,உள்ளம் குறுகுறுத்தது போன்ற வார்த்தைகளை கையாண்ட விதமும் நன்றாக இருக்கிறது
//"எல்லா வேலையும் என்றால்..ஏதாவது நல்ல சம்பளமாக போட்டுத் தர வேண்டியது தானே தாத்தா..தனக்கென நல்லதாய் ஆடை அணிகளாவது வாங்கிக் கொள்வாளே. உங்களுக்கும் அவளைப் பிடித்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல ஒரு 'companion' போல இங்கேயே இருந்து.. கணிசமான தொகை அவள் பெயரில் மாதாமாதம் போட்டுவிடலாம்.. அவள் எதிர்காலத்திற்கும் வகை செய்தாற்போல ஆகும்.." மேற்கொண்டு கேட்க அங்கே மிதுனா இல்லை!//
ReplyDeleteச்சே! இவனுக்கு ஏன் மிதுவின் குணமும் மனமும் புரிய மாட்டேன் என்கிறது .,தேனு மானு என்று கொஞ்சவா சொல்கிறோம்
குறை சொல்லாமல் இருந்தால் போதும் என்று தானே சொல்கிறோம் என்று ஏனோ எழுத தோன்றியது
கதாசிரியை பேரும் தேனுவா ! எழுதலாமா வேண்டாமா என்று யோசனையும் வருகிறது !!!!!!!!!!!!
//பாவம், இருந்திருந்தால்.. தாத்தா அவனை அப்படிப் பேசியதற்காகக் கடிந்து கொண்டதையும், சந்தானமும் அவரும் எந்த அளவிற்கு நெருங்கிய சிநேகிதர்கள் என்று கூறியதையும், அவள் இந்த வீட்டுப் பெண் என்று தான் கருதுவதாகச் சொன்னதையும் கேட்டிருக்கலாம்!//
ReplyDeleteஅடடா ! மிது இதை கேட்டு இருந்தால் எவ்வளோ நன்றாக இருக்கும்
//சமையல் அறைக்கு விதிர்விதிர்த்து வந்தவள், முத்துவை அழைத்து, அவனிடமே மிளகுத் தூளைத் தாத்தாவின் அறைக்குக் கொடுத்தனுப்பினாள். இதை முன்பே செய்திருக்கலாம்! தன்னறைக்கு விரைந்து வந்து அப்படியேக் கட்டிலில் விழுந்தாள் மிதுனா.
'நல்ல சம்பளம்!' பொட்டில் அறைந்தாற்போல இருந்தது அவளுக்கு. சுந்தரம் தாத்தா என்ன உரிமை கொடுத்தாலும், அவள் அன்னியம் தானே..அவன் சொன்னதில் என்ன தவறு? ஆனாலும் இது ஏன் தன்னை இவ்வளவு பாதிக்க வேண்டும் என்று அவளுக்குப் புரியவில்லை.//
விதிர்விதிர்த்து .,பொட்டில் அறைந்தார் போல போன்ற வார்த்தைகள் நம்மையும் ஏன் பாதிக்க வேண்டும்
//சற்றுமுன் அவனது ஒரு சிரிப்பில் உலகை வென்ற திருப்தி கொண்டது இப்போது பெரும் மடத்தனமாக தோன்றியது.தாத்தா திரும்ப திரும்ப அவளை தன் சொந்த பேத்தி போல என்றதை அவள் அப்படியே எடுத்துக் கொண்டாளா?! தன் நிலை மறந்து அப்படி அவன் சிரிப்பில்..அவனில் லயிக்கவும் வேண்டுமா?!
ReplyDeleteஏதோ ஒன்று..முளையிலே கிள்ளி எறிய வேண்டிய ஒன்று.. ஒரு மடத்தனம்..தன்னுள் குடிகொண்டு இலை மறை காயாக பல்லிளித்தது!
இன்னதென்று முழுதும் புரியாவிட்டாலும், இப்படி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றில்லாமல், இனி மனதைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற நினைப்போடு தூங்கிப் போனாள் மிதுனா. //
பாவம்பா மிது ! பாருங்களேன் அவளின் உணர்வை .,
அவனை கண்டதால் ,அவனின் பேச்சால் உருவான சந்தோசம் இவ்வளோ விரைவில் தோன்றிய வேகத்தில் மறைந்தால் ஏற்படும் வலிக்கு தூக்கம் தான் ஒத்தடமோ .............
LOL priyakka! ungakooda pesikite iruntha neram porathey theriyathu poliruke... I have to meet u sometime. unga mail id kidaichathu. I shall mail u mine soon. thamathathirku mannikavum..pls pls..pls.. :)
ReplyDelete//ச்சே! இவனுக்கு ஏன் மிதுவின் குணமும் மனமும் புரிய மாட்டேன் என்கிறது .,தேனு மானு என்று கொஞ்சவா சொல்கிறோம்
ReplyDeleteகுறை சொல்லாமல் இருந்தால் போதும் என்று தானே சொல்கிறோம் என்று ஏனோ எழுத தோன்றியது
கதாசிரியை பேரும் தேனுவா ! எழுதலாமா வேண்டாமா என்று யோசனையும் வருகிறது !!!!!!!!!!!! //
ezhuthunga ezhuthunga.. konjinal kasakkuma enna? ;)
serious-a solren, priyakka.. neenga klathai ezhuthalaam.. unga comments-ae ivlo nalla irukku..
ReplyDeletekathai innum nalla irukkum..
all matra thangai-s of priyakka.. (anamika, appavi thangam, ஜானு, குந்தவை ,புவனா ,காயத்ரி..) namba akkaku avanga thiramai patri eduthu sollunga-pa... :)
ReplyDeleteYour writing is excellent no one would believe you are writing this for the first time. You should write more I am looking forward to read more of your writings. I am also an ardent reader of Ramani chandran's novels and even the other authors. On our behalf you have to thank your husband for bringing out such a wonderful hidden talent from you. I came for a holiday to stay with my son and daughter-in-law a friend of mine gave your blog and enjoyed every bit of it. Good Luck and Good wishes to you for future.
ReplyDelete