Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 7

இருள் மறைத்த நிழல் (தேனு) - 7 

மாலைவரை பொழுதை நெட்டித் தள்ளியவள், வெயில் சற்று தாழ்ந்தபின் வீட்டை சுற்றி இருந்தத்  தோட்டத்தில் சிறிது நேரம் உலவினாள். பெரிய தோட்டம். காலையில் இந்த வீட்டினுள் நுழைகையில் தெரிந்த அழகு மாலை வெயிலில் பன்மடங்காய் ஒளிர்ந்தது. பல வண்ண ரோஜாக்கள் திருப்தியாய் தலையாட்டின. சீராய் வெட்டப்பட்ட புல்வெளி பச்சை வெல்வெட்டாய் பளபளத்தது. இளங்காற்றில் சிறுகொடிகள் உடலசைத்து தாலாட்டின. குயில்களின் இசை மனதுக்கு இதம் சேர்த்தது. இருமுறை முழு தோட்டத்தையும் மெதுவாய் சுற்றி வந்தவள் தாத்தா எழுந்துவிட்டாரா என்று பார்ப்பதற்கு உள்ளே சென்றாள்.

    அவர் அறையை எட்டும்போதே அவரது இருமல் சத்தம் அவளுக்கான பதிலைப்  பறைசாற்றியது. ஓடிச்சென்று அருகிருந்த flask-ஐ திறந்து ஒரு கோப்பையில் வெந்நீரை ஊற்றி அவரிடம் கொடுத்தாள்.

   "நன்றியம்மா " என்று நெஞ்சை நீவிக் கொண்டே அதை வாங்கிக்  குடித்தார் சுந்தரம். "ஏதேனும் மாலை டிபன் சாப்பிட்டாயா அம்மா" என்று உபசரிக்கவும் செய்தார். அவரது அக்கறை இதமாக இருந்தது.

" இருக்கட்டும் தாத்தா..முதலில் நீங்கள் ஏதாவது சாப்பிடுங்கள். நானே எடுத்து வருகிறேன்" என்றவாறே எழுந்தாள்.
"இல்லையம்மா..இனி இரவு உணவு மட்டும் தான் எனக்கு. பெரும்பாலும் என் அறைக்கே தருவித்துவிடுவேன். ஆனால் இன்றைக்கு டின்னர்  உன்னோடு டைனிங் டேபிளில்..சரியா?" என்று சொல்லி அன்பாய் சிரித்தார்.

  கண்கள் பனிக்கத் தலையாட்டியவள் அதுவரை தினமும்  தனியே என்ன செய்வார் என்று தோன்ற யோசனையாய்  அவரை ஏறிட்டாள் மிதுனா.

"என்னம்மா, போரடிக்கிறதா?" என்று சுந்தரம் கேட்டார்.

விசித்திரம் தான்! அவரது தனிமைக்கு இவள் பரிதாபப்பட..அவரோ இவளது தனிமை கண்டு பரிதாபப்படுகிறார்! ஆனால் அதற்கும் ஒரு நல்ல மனம் வேண்டும். மனமுருக, "நீங்கள்..உங்களுக்கு தினமும் போரடிக்குமே என்று..போரடிக்கும்தானே தாத்தா?" என்று உண்மையான அக்கறையோடு கேட்டாள் மிதுனா.

    தள்ளாத வயதில் தனிமைத்  துன்பத்தை அனுதினமும் அனுபவிப்பவர் அவர். பேரனோடு தினமும் அரைமணி நேரமாவது சேர்ந்து செலவிட துடிப்பவர். பேசகூட ஆளின்றி , ஒருவரிடமும் தன் மனக்குறை பற்றி வாய் விட்டு சொல்லக்கூட வழியின்றி தவிப்பவர்.. இன்றோ வந்த ஒரு நாளிலே இந்த சின்ன பெண் தன்னைக்  கண்டுகொண்டது அவர் உள்ளத்தைத்  தொட்டது.

  நா தழுதழுக்க , "உடம்பில் தென்பு இருந்தபோது தனியனாய் பேரனை பெற்ற பிள்ளைப் போல பாராட்டி சீராட்டி வளர்க்க முடிந்ததம்மா. இப்போது உடலும் உள்ளமும் தளர்ந்துவிட்டது. பேச்சுத்  துணைக்காவது ஆள் தேடுகிறது..பணம் இருந்து என்ன செய்வது..பேரனின் வாரிசை காண உள்ளம் துடிக்கிறது.. என் ஆசைகளை காது கொடுத்து கேட்ககூட நாதியற்ற தனிமை என்னை கொல்கிறதம்மா " என்று மனம் விட்டு குமுறினார். அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

        இந்த தாத்தாவோடு தினமும் சில நிமிடங்கள்கூட உட்கார்ந்து பேச முடியாமல் அப்படி என்ன வெட்டி முறிக்கிறான் இந்த நளந்தன் என்று சிறு கோபம் கூட அவளுக்கு வந்தது.

" இந்த கிழவனுக்கு ஒரு பேச்சுத்துணையாக நீயாவது இருப்பாயாம்மா" என்று அவர் கேட்கையில் நெஞ்சுருகிப்  போனது. இங்கிருக்கும் மூன்று நான்கு மாதங்களில் எல்லாவிதத்திலும் இந்த தாத்தாவிற்குத்  துணையாக இருக்கவேண்டும் என்று மனதுக்குள் உறுதி கொண்டாள் மிதுனா. பாவம்.. இவள் சென்றபின் மறுபடியும் இந்த பெரியவருக்கு நாலு சுவர் மட்டுமே துணை!

         Atleast, இந்த நளந்தனின் மனைவி என்று ஒருத்தி வந்து இவருக்கு கொள்ளு பேரன் பேத்தி என்று பெற்றுப்போடும் வரை. ஒன்று தோன்ற,
"உங்கள் பேரனுக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைத்தால் இந்நேரம் ஒரு கொள்ளு பேரனோ பேத்தியோ உங்கள் மடியில் கொஞ்சிக்கொண்டிருக்குமே , தாத்தா?" என்று கேள்வியும் அல்லாது, ஆலோசனையும் அல்லாது பொதுவாக மொழிந்தாள்.

   நீண்ட பெருமூச்செறிந்தவர் தன் கண் கண்ணாடியைக் கழற்றி மேலங்கியில் துடைத்தவாறே, "பிடி கொடுத்து பேச மாட்டேன் என்கிறான் அம்மா..எப்போது கேட்டாலும், வேறு ஏதாவது பேசுங்கள் தாத்தா என்று சலித்துக் கொள்கிறான். வசதியான பையன்.. அவனை சுற்றி இருப்பது காக்காய் கூட்டமாயிற்றே..பணத்திற்காக அவனைச் சுற்றி வரும் பெண்கள்  ..எங்கே ஏதாவது தகுதியற்றவளிடம் மனதை  விட்டு விடுவானோ என்று பதைக்கிறதம்மா. அவனுக்கும் 27 ஆகப் போகிறதே.." என்று ஒளிவுமறைவின்றி தன் மனக்குறையை கூறினார்.

   27-ஆ?! தன்னை விட ஆறு வயது பெரியவனா?! அவள் ஏதோ 24 இருக்கும் என்றல்லவா நினைத்தாள்! பரவாயில்லை..உடல்கட்டை நன்றாகத்தான் வைத்திருக்கிறான்! அவனது பணத்திற்காக மட்டும் பெண்கள் அவனை சுற்றவில்லை என்பது அவள் எண்ணம். ஆனால்.. 27 வயதில் எது உண்மையான நேசம், யார் தனக்கு பொருத்தம் என்பதுகூடவா தெரியாது போகும்?

    தாத்தாவின் கவலை அனாவசியமாகப்பட்டது அவளுக்கு. அதனால் தான் 'வேறு பேச' சொல்லி அவர் வாயை அடைத்துவிடுகிறான் போலும். ஓ..இன்று காலைகூட அவரிடம் அப்படித்தான ஏதோ சலிப்பாய் சொல்லிகொண்டிருந்தான். அந்த நேரத்தில் கதவில் கையை வைக்கப்  போய் பாதி சாத்தியிருந்த கதவு முழுவதும் திறந்துகொள்ள.. கண்ணாலேயே அவளை சுட்டெரித்தானே!!

Comments

  1. //விசித்திரம் தான்! அவரது தனிமைக்கு இவள் பரிதாபப்பட..அவரோ இவளது தனிமை கண்டு பரிதாபப்படுகிறார்! ஆனால் அதற்கும் ஒரு நல்ல மனம் வேண்டும். மனமுருக, "நீங்கள்..உங்களுக்கு தினமும் போரடிக்குமே என்று..போரடிக்கும்தானே தாத்தா?" என்று உண்மையான அக்கறையோடு கேட்டாள் மிதுனா //

    ஒரு இளவயது பெண்ணின் நுண்ணிய மனதையும், நுட்பமான எண்ணங்களையும் மிதுனாவின் அக்கறையோடு கூடிய ஆறுதல் வார்த்தைகள் மூலம் சொல்லும் விதம் பிடித்து இருக்கிறது ..........

    //தள்ளாத வயதில் தனிமைத் துன்பத்தை அனுதினமும் அனுபவிப்பவர் அவர். பேரனோடு தினமும் அரைமணி நேரமாவது சேர்ந்து செலவிட துடிப்பவர். பேசகூட ஆளின்றி , ஒருவரிடமும் தன் மனக்குறை பற்றி வாய் விட்டு சொல்லக்கூட வழியின்றி தவிப்பவர்.. இன்றோ வந்த ஒரு நாளிலே இந்த சின்ன பெண் தன்னைக் கண்டுகொண்டது அவர் உள்ளத்தைத் தொட்டது.

    நா தழுதழுக்க , "உடம்பில் தென்பு இருந்தபோது தனியனாய் பேரனை பெற்ற பிள்ளைப் போல பாராட்டி சீராட்டி வளர்க்க முடிந்ததம்மா. இப்போது உடலும் உள்ளமும் தளர்ந்துவிட்டது. பேச்சுத் துணைக்காவது ஆள் தேடுகிறது..பணம் இருந்து என்ன செய்வது..பேரனின் வாரிசை காண உள்ளம் துடிக்கிறது.. என் ஆசைகளை காது கொடுத்து கேட்ககூட நாதியற்ற தனிமை என்னை கொல்கிறதம்மா " என்று மனம் விட்டு குமுறினார். அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது//

    மனது கலங்கி கண்கள் பனிக்க செய்யும் வாக்கியங்கள் ....முதுமையில் தனிமை எவ்வளோ கொடியது என்பதை படிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் உணர்வர் ., போப்பா மனசுக்கு கஷ்டமா இருக்கு .........................................................................

    ReplyDelete
  2. Priya... I really want to befriend you.. ivlo nunniyama kavanikareenga.. rasikareenga.. unga athukarar kuduthu vachavar ippidi poo mathiri manasu ulla ponnu kidaika. ;)

    ReplyDelete
  3. நன்றி தேனு .,நானும் தான் எனக்கும் தான் .,

    அதனால் தான் உங்களிடம் மட்டுமே முதல் முதலாக எனது ப்ளோக்குக்கு வாங்க என்று அழைப்பு விடுத்தேன்

    YOU MADE MY DAY டியர் ;ரொம்ப சந்தோசமா இருக்கிறது .,பெருமை பொங்க என்னவரிடம் சொல்லி பூரித்து போனேன் தான்



    அவர் என்னை யார் பாராட்டினாலும் ,''எல்லோரும் உன் முகத்தை பார்த்து நல்லவான்னு ஏமாந்து போறாங்களே ;நீ எனக்கு பண்ணற அராஜகம் யாருக்கு தெரியுது என்பார் போலி வருத்ததுடன் .,

    இந்த கார்த்திக் ஆல் தான் எனக்கும் அவருக்கும் அதிகமாக விவாதம் வரும் .,அவன் பரீட்சை சமயங்களில் என்ன சொல்லி கொடுத்தாலும் சரியாக படிக்கவே மாட்டான் .,அப்பா செல்லம் அதிகம் .,அவருக்கும் இவனை மட்டும் நான் எதுவும் சொல்ல கூடாது .,அவனை கண்டித்து சத்தம் போட்டாலோ ' பத்ரகாளி மாதிரி' என்று எனக்கு செல்ல பெயர் வேறு! இதுபோக நான் சென்சிடிவ் ஆள்பா :(

    அதனாலே ஆத்துகாரர் கொடுத்து வைத்தவர் என்பது ஓரளவு மட்டுமே ........ ஹி ஹீ !

    ReplyDelete
  4. aha.. priya.. namakulla one thing is common.. kandupidinga parpom.. clue: my other blogs partha u will know..

    ReplyDelete
  5. //A cute bargain
    Poor Me: பசங்களா.. நான் உங்க பேச்சுக்கு வந்தேனா?!
    (Poor Me: You guys!! Did I utter a word? Why do you have to pull my legs?)

    The boys team giggle at me!
    So much to 'silently' witness a bargain going bad!//

    நிறைய பல்ப் வாங்கி இருப்பீங்க போல (ஹி ஹீ நானும் தான் !)

    இன்னும்

    Easy Way Out!
    Silly who me
    Who must thank whom
    Knowledge of patterns
    ரூம் போட்டு யோசிப்பாங்களா எல்லாமே நன்றாக சிரிக்க வைத்தது தேனு
    நீங்களே சொல்லுங்கப்பா ! என்னால் இரண்டு பேரின் குழந்தை பேரும் கார்த்திக் என்பதை தவிர பெரிதாக ஏதும் கண்டு பிடிக்க முடியவில்லை ..

    ReplyDelete
  6. தேனு ! நீ பூ மாதிரி மனசுன்னு கவிதையா சொல்லி யதாலே அது மணம் வீசி கட்டு படுத்த முடியாம பதிவா போட வைத்து விட்டது .,ஹி ஹீ

    "நல்ல வாரம்" என்ற தலைப்பில் நேற்று ஒரு பதிவு .,உங்களை பற்றியும் நல்ல படியா ரெண்டு வார்த்தைகள்!

    நீங்களும் வந்து படித்து செல்ல நட்போடு அழைக்கிறேன்

    ReplyDelete
  7. peyar porutham thaan sonnen priya.. :))))

    ReplyDelete

Post a Comment