இருள் மறைத்த நிழல் (தேனு) - 13
வேலை விஷயம் வேண்டுமென்றால் நளந்தனின் வரவுக்காகக் காத்திருக்கலாம் ஆனால், அவள் தாத்தாவைப் பற்றியது..அவரது பயண விவரமெல்லாம் சுந்தரம் தாத்தாவைக் கேட்கலாமே என்று பார்த்தால், அதற்கும் ஏதேனும் ஒரு தடை..ஒரு தடங்கல்..
அன்று சந்தானம் உறங்கி எழுந்ததும் கூப்பிடுவார் என்று சுந்தரம் சொன்னபடியே மறுநாள் டாக்டர் சுகந்தனின் வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பும் வந்தது. அவள் தாத்தாவும் பேசினார். எல்லாம் அவளுக்குத் தெரிந்த விவரம் தான். முழு மருத்துவப் பரிசோதனை செய்தபின் பயணம் மேற்கொள்வது என்று முடிவாம். அநேகமாக அடுத்த வாரம் கிளம்பி விடுவோம் என்றார். குரல் சோர்ந்தமாதிரி தெரிந்தாலும், இரண்டு நாளைக்கு ஒரு முறையேனும் அவரே அழைத்து பேசியதால் மிதுனாவும் கொஞ்சம் அமைதியுற்றாள்.
அடுத்த வாரமும் வந்தது..ஆனால் காசிப் பயணம் தொடங்கியபாடில்ல்லை! சுகந்தனின் தந்தை சுகவனத்திற்கு உடம்பு சுகமில்லையாம். ஒரு பத்து நாட்களுக்கு பயணத்தைத் தள்ளிப் போடலாமென்று முடிவாம். நினைவு தெரிந்த நாள் முதலாய் அவள் தாத்தாவைப் பிரிந்து இருந்ததே இல்லை எனலாம். இந்தப் பயணம் தள்ளிப் போகப் போக பாட்டனின் அருகாமைக்கு மிகவும் தவித்தாள் மிதுனா.
"பேசாமல் திரும்பி வந்து விடுங்கள் தாத்தா..காசிக்கு அடுத்த வருடம் போய்க் கொள்ளலாம்" என்று வாய் வரை வந்ததை பெரும்பாடுபட்டு விழுங்கினாள்.
தாத்தா சங்கடப்படக்கூடும்.. நினைத்ததை மறைத்து, "அந்த பத்து நாள் இங்கே வந்து என்னோடும் சுந்தரம் தாத்தாவோடும் இருங்களேன் தாத்தா" என்று மாற்றி கூறிப் பார்த்தாள்.
அவள் ஏக்கம் அவரைத் தாக்கியதோ என்னவோ, ஒரு நிமிட அமைதிக்குப்பின் தழுதழுத்தக் குரலில், "அது முடியாதே மீனாம்மா .. எனக்கும் உடல் அசதியாக இருக்குதடா" என்றார்.
பதறிப்போன மிதுனா, "என்னாச்சு தாத்தா?! நான் வேணா அங்கே வரட்டுமா..இந்த உடம்போடு எதற்கு தாத்தா அவ்வளவு நீண்ட பயணமெல்லாம்? வேண்டாம் தாத்தா.." முடிக்குமுன் விசும்ப ஆரம்பித்துவிட்டாள்.
அவள் கலங்கியதை கண்ணுற்ற சுந்தரம் இடையில் புகுந்து அவளையும் தாத்தாவையும் சமாதானப் படுத்தி, சாமி விஷயம்.. வருவதாக சொல்லிவிட்டு நிறுத்தக் கூடாது என்றும்..அது தாத்தாவின் மனதில் தீராத சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் கிளிப் பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லி அவளை ஒருவாறு அமைதிப்படுத்தினார்.
அடுத்த வாரமோ அங்கே சந்தானம் தாத்தாவுக்கும், இங்கே சுந்தரம் தாத்தாவுக்கும் ஒருசேர ஜூரம்..ஃப்ளு போல ஏதோ வைரஸ். சுகந்தன் போன் பண்ணி சந்தானத்தை முறையாக பார்த்துக் கொள்வதாக உறுதிகொடுத்தார். சுந்தரம் தாத்தாவின் நிலைதான் கொஞ்சம் மோசம். ஃப்ளுவோடு ஆஸ்துமா வேறு. ஆனால் அவளது தொடர்ந்த அன்பான பராமரிப்பில் விரைவிலேயே உடல் தேறினார். நளந்தனின் தொடர் போன்கால்களும் ஒரு முக்கியக் காரணம்.
அவருக்கு மூச்சிரைப்பு அதிகமாகிவிட்டது தெரிந்ததும் அவனது STD கால்களும் அதிகரித்தன. தினமும் இருமுறை அவரை அழைத்து நலம் விசாரித்தான். முதல் இரு நாள் மட்டும் அவள் தொலைபேசியை எடுத்து பேசினாள். பின் அவன் அழைப்பு வழக்கமானவுடன், ரிசீவரை அவளே எடுத்தாலும், நேரே தாத்தாவிடம் கொடுத்துவிட்டு அவள் தோட்டம்பக்கம் சென்றுவிடுவாள். தாத்தாவிற்கும் பேரனுக்கும் ஆயிரம் இருக்கும். இடையில் தான் எதற்கு?
என்ன பேசுவானோ! அவள் மீண்டும் உள்ளே செல்லும்போது, தாத்தாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பளிச்சென்று இருக்கும்! இவ்வளவு பாசமா பேரன் மேல்?! அல்லது அந்த நளந்தனின் குரலுக்கு தான் அவ்வளவு சக்தியா?! இரண்டும்தான் என்றது மனம். அவனோடு ஒரு வார்த்தையும் பேசாதபோதும், அவன் அழைப்பு வரும் நேரம் அவள் மனதிலும் ஒரு பரபரப்பு பரவுவதை மிதுனா கவனித்திருக்கிறாளே!
அன்று காலைகூட சுந்தரம் தாத்தா பரபரப்புற்றிருந்தார் தான். அவன் குரலை கேட்கும்முன் இருக்கும் வழக்கமான பரபரப்பு அல்ல. அதீத பரபரப்பு. என்ன சேதி என்று மிதுனாவுக்குத் தெரியவில்லை. என்னவென்று தெரிந்த போதோ என்ன செய்வதென்று தெரியவில்லை!
கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது
ReplyDeleteநிறைய விஷயங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது
//இந்தப் பயணம் தள்ளிப் போகப் போக பாட்டனின் அருகாமைக்கு மிகவும் தவித்தாள் மிதுனா.
"பேசாமல் திரும்பி வந்து விடுங்கள் தாத்தா..காசிக்கு அடுத்த வருடம் போய்க் கொள்ளலாம்" என்று வாய் வரை வந்ததை பெரும்பாடுபட்டு விழுங்கினாள்.
தாத்தா சங்கடப்படக்கூடும்.. நினைத்ததை மறைத்து, "அந்த பத்து நாள் இங்கே வந்து என்னோடும் சுந்தரம் தாத்தாவோடும் இருங்களேன் தாத்தா" என்று மாற்றி கூறிப் பார்த்தாள்.
அவள் ஏக்கம் அவரைத் தாக்கியதோ என்னவோ, ஒரு நிமிட அமைதிக்குப்பின் தழுதழுத்தக் குரலில், "அது முடியாதே மீனாம்மா .. எனக்கும் உடல் அசதியாக இருக்குதடா" என்றார்.
பதறிப்போன மிதுனா, "என்னாச்சு தாத்தா?! நான் வேணா அங்கே வரட்டுமா..இந்த உடம்போடு எதற்கு தாத்தா அவ்வளவு நீண்ட பயணமெல்லாம்? வேண்டாம் தாத்தா.." முடிக்குமுன் விசும்ப ஆரம்பித்துவிட்டாள்.
அவள் கலங்கியதை கண்ணுற்ற சுந்தரம் இடையில் புகுந்து அவளையும் தாத்தாவையும் சமாதானப் படுத்தி, சாமி விஷயம்.. வருவதாக சொல்லிவிட்டு நிறுத்தக் கூடாது என்றும்..அது தாத்தாவின் மனதில் தீராத சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் கிளிப் பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லி அவளை ஒருவாறு அமைதிப்படுத்தினார்.//
வாசிக்கும் போதே மிதுனாவின் மனதோடு ஒன்றி போய் தவிப்பு ,ஏமாற்றம் ,பதற்றம் ,கண்ணீர்;விசும்பல் ;சுவாமி விஷயம் என்று சொன்னதால் சற்று ஆறுதல் ,சற்று மன சமாதானம் ,சற்றே அமைதி .................
அதெப்படி தேனு மனதை புரிந்து வார்த்தைகளில் வெளிபடுத்தும் வித்தை உங்களுக்கு இவ்வளோ எளிதாக சாத்தியமாயிற்று !
எங்களுக்கும் சொல்லி கொடுங்கப்பா .........
நானாக நானில்லை தோழி .............
என்ன பேசுவானோ! அவள் மீண்டும் உள்ளே செல்லும்போது, தாத்தாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பளிச்சென்று இருக்கும்! இவ்வளவு பாசமா பேரன் மேல்?! அல்லது அந்த நளந்தனின் குரலுக்கு தான் அவ்வளவு சக்தியா?! இரண்டும்தான் என்றது மனம். அவனோடு ஒரு வார்த்தையும் பேசாதபோதும், அவன் அழைப்பு வரும் நேரம் அவள் மனதிலும் ஒரு பரபரப்பு பரவுவதை மிதுனா கவனித்திருக்கிறாளே!//
ReplyDeleteரசிக்க வைக்கும் வரிகள் ! இந்த பரபரப்பு ,இனம்புரியா தவிதவிப்பு .............போங்கப்பா .,எழுத என்னவோ தடுக்குது ........
// அன்று காலைகூட சுந்தரம் தாத்தா பரபரப்புற்றிருந்தார் தான். அவன் குரலை கேட்கும்முன் இருக்கும் வழக்கமான பரபரப்பு அல்ல. அதீத பரபரப்பு. என்ன சேதி என்று மிதுனாவுக்குத் தெரியவில்லை. என்னவென்று தெரிந்த போதோ என்ன செய்வதென்று தெரியவில்லை! //
அடடே சஸ்பென்ஸ் எல்லாம் இருக்கிறதா ;எல்லாம் மிதுனா சமாளித்து கொள்வாள் ;அவள் தான் சமயோதிகமா பேசுவதில் மன்னி ஆகிற்றே !
என்னவென்று தெரிந்த போதோ என்ன செய்வதென்று தெரியவில்லை! nice lines
ReplyDeleteநாற்பத்து ஐந்தாவது அகவையில் ஒரு ஆண்ணான என்னையே வரிக்கு வரி கலங்க வைக்கும் வரிகள்.ரீடிங் டீவ்ண்ட்ய்த் டைம் இன் டூ டேஸ். இரவு தூங்காமல் மீண்டும் மீண்டும். படித்த பக்கத்தையே மீண்டும் மீண்டும் படிக்கிறேன். இன்ஜெக்ட் செய்கிறேன். உடன் வாழ்கிறேன். மீண்டும் எழுதவும் ப்ளீஸ்
ReplyDeleteYou made my day!! Thank you.
Delete