Skip to main content

இருள் மறைத்த நிழல் (தேனு) - 8

இருள் மறைத்த நிழல் (தேனு) - 8

"ஏன் திருமணத்தை மறுக்கிறார், தாத்தா? காதல் என்று.." மேற்கொண்டு எப்படி கேட்பது என்று தெரியாமல் மிதுனா திணறினாள். 'யாகாவாராயினும் , நாகாக்க' சொன்ன திருவள்ளுவர் தாமதமாக தான் நினைவிற்கு வந்தார்! வந்த அன்றே சொந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கிறோமே..ஆனால் தாத்தாவோ மடை திறந்த நதியாய் தன் ஆற்றாமையை அப்படியே அவளிடம் கொட்டினார்.
"காதலுக்கு நான் ஒன்றும் எதிரியல்ல அம்மா. காலம் முழுமைக்கும் சேர்ந்து வாழப் போகிறவர்கள் தத்தம் துணையை தாமே தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமான விஷயமே. அதற்காக விஜி யாரைக்  கூட்டி வந்தாலும் 'வாம்மா' என்று கேள்வியின்றி ஏற்றுக்கொள்வேன் என்றும் அர்த்தமல்ல. ஒரு வீட்டிற்கு வரும் பெண் தன் கணவனை மட்டும் அனுசரித்துப்போனால் போதாது. அவனோடு, அவன் சுற்றத்தையும் தனதாய் பாவித்து அன்பு பாராட்ட வேண்டும். அப்படி ஒருத்தியை தான் நான் இந்த வீட்டிற்கு ஒளியேற்ற எதிர்பார்க்கிறேன். ஆனால், விஜியின் நட்பு வட்டம்..காக்கா கூட்டம். அவன் இதுவரை காதல் என்று எ..யாரையும் அழைத்து வந்ததில்லை.. அவனுக்கு ஒரு அசட்டுப் பிடிவாதம் அம்மா..எந்த விஷயமும் அவனே தான் முடிவெடுப்பான். அவன் விஷயத்தில் யாரும் குறுக்கிட்டால் அவனுக்குப் பிடிக்காது. திருமணத்திலும் நாட்டம் கிடையாது..அது.. என் மகன் செய்த வினை.. அது உனக்கு அப்புறம் சொல்கிறேன்...அப்படியே ஓருவேளை மனம் மாறி அவன் கல்யாணம் என்று ஒன்று செய்து கொள்ள முடிவெடுத்தால், அவன் மனைவியை அவனே தான் தேர்ந்தேடுப்பானாம். அதுவரை அவனை நான் அவசரப்படுத்தக்கூடாதாம். எனக்கென்னவோ அவன்..அவனுக்குள் சமீபமாக ஒரு சலனம் ஏற்பட்டிருக்கிறது என்று ஒரு சந்தேகம்..ஹ்ம்ம்..பார்க்கலாம்..நாம் ஒன்று நினைக்க, தெய்வமும் அதையே நினைத்தால் நல்லது."
  
 ஓ.. இந்த கடுவன் பூனைக்குக்  கூட காதல் வருமா?!

 "ஏதோ ஒரு பெண்ணின் வலையில் விழுந்துவிட்டான் என்று சந்தேகம் அம்மா.. என்னடா..சொந்த பேரன் பற்றி இன்று வந்த உன்னிடம் புரணி பேசுகிறேன் என்று பார்க்கிறாயாம்மா? நீ..உன்னை மூன்றாம் மனுஷியாக நினைக்க முடியவில்லை தாயே.. சந்தானம் என் உயிர் நண்பன். நீ அவனுக்கு மட்டும் அல்ல, எனக்கும் சொந்த பேத்தி போலதான். உன் அம்மா என்னை, பெற்ற தந்தை போல பார்த்துக்கொள்வாள் அம்மா . உன்னிடமும் அவள் சாயல். அதே கனிவு, பரிவு, பாசம் எல்லாம்.. ஒரு குடும்பம் போல வாழ்ந்தோம்..பிரிந்த குடும்பம் இன்றாவது ஒன்று சேர்ந்ததே..சந்தானம் தான் கூட இருந்து பார்க்க.." தொண்டை அடைக்க கண்களைத்  துடைத்துக் கொண்டார் பெரியவர்.

    "இன்னும் மூன்று நான்கு மாதங்களில் அவரும் தான் வந்துவிடுவாரே, தாத்தா.. வருத்தப்படாதீர்கள் " என்ற அவளது தேறுதல் அவரைத்  தேற்றுவதற்கு பதிலாய் மேலும் உணர்ச்சிவசப்பட வைத்தது. "ஆமாம், ஆமாம். வந்துவிடுவான் தான். வரத்தான் வேண்டும்" என்று தனக்குள் முனகிக்கொண்டார்.

பேரனில் லயித்த மனம் மெதுவாய் பால்ய சிநேகிதனிடம் ஒன்றியது கண்ட மிதுனா தானும் தன் பாட்டனின் நினைவில் மூழ்கிப் போனாள்.

Comments

  1. //"ஏன் திருமணத்தை மறுக்கிறார், தாத்தா? காதல் என்று.." மேற்கொண்டு எப்படி கேட்பது என்று தெரியாமல் மிதுனா திணறினாள். 'யாகாவாராயினும் , நாகாக்க' சொன்ன திருவள்ளுவர் தாமதமாக தான் நினைவிற்கு வந்தார்!//

    சற்று சிரிப்பை வரவழைத்த வரிகள் ;தொடங்கியதை முடிக்க தெரியாமல் மிதுனா திணறியதை ரசிக்க முடிகிறது


    //ஓ.. இந்த கடுவன் பூனைக்குக் கூட காதல் வருமா?!//

    செல்ல பெயரான கடுவன் பூனை என்று மிதுனா குறிப்பிட்ட விதம் கூட அழகு தான்


    //பேரனில் லயித்த மனம் மெதுவாய் பால்ய சிநேகிதனிடம் ஒன்றியது கண்ட மிதுனா தானும் தன் பாட்டனின் நினைவில் மூழ்கிப் போனாள்.//
    நாங்களும் தான் .,இந்த கதையின் நினைவுகளில் மூழ்கி போனோம் ..........

    ReplyDelete
  2. rasanai thilagame... nandri.. :)

    ReplyDelete
  3. AnonymousJuly 21, 2013

    Wenever i am upset i wil read dis story..its my 10th time.it diverts my mind to gud feel

    ReplyDelete
  4. Wow, the story is awesome, I initially started with a hesitation but thoroughly enjoyed it, fast paced romantic. Keep it up and all the best for your writing career! Keep us posted on your new stories as well!

    ReplyDelete

Post a Comment