இருள் மறைத்த நிழல் (தேனு) - 47
தகவல் தெரிந்து தத்தம் உடல்நிலையை பொருட்படுத்தாது ஓடி வந்த சுகவனமும், சுந்தரமுமோ உயிர் நண்பனின் திடீர் பின்னடைவில் நிலை குலைந்துதான் போயினர். சுகவனம் நளந்தன் சொன்னதையே தான் திருப்பி படித்தார். மன்னிப்பு வேண்டினார்.
இரு நண்பர்களும், மிதுனா அவர்கள் பொறுப்பு என்று மீண்டும் ஒரு முறை மரணபடுக்கையில் கிடக்கும் சந்தானத்திற்கு உறதி கொடுக்க துடித்தனர். நண்பனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமே என்று தவித்தனர். முக்கியமாக சுந்தரம் தவித்தார்.
நண்பன் சந்தானத்தின் கவலை எல்லாம் அவனது ஆருயிர் பேத்தி மிதுனாவும் அவளது வளமான எதிர்காலமும் தானே! அவள் கண்ணில் நீர் வரக்கூடாது என்பதற்கு தானே நோயைக் கூட மூடி மறைத்து இப்படி அனாதையாகவும் சாக துணிந்தான்.. இப்போது அவளுக்கு நல்ல எதிர்காலம் அமைந்துவிட்டது என்பதையும் அவள் பாதுகாப்பாக இருப்பாள் என்பதையும் அவன் மனம் உணரும் வகையில் சொல்ல வேண்டுமே.. இதே தவிப்பு தான் சுந்தரத்திற்கு.
அனைவரது பிரார்த்தனைக்கும் பதில் போல சந்தானம் இறுதியாக ஒரு முறை நினைவு மீண்டார். "ப.. பாப்பா.. பாப்பா.." என்று குழறிய குரலில் மிதுனாவின் மனம் குளிர கூப்பிட்டு வேரறுந்தாது போல் கிடந்த அவளையும் துளிர்க்க செய்தார்.
தூக்கிவாரி போட்டுக் கொண்டு நிமிர்ந்த மிதுனா, "தாத்தா! தாத்தா.. நான் வந்துவிட்டேன் தாத்தா.. என்னை அனாதையாக்கி விட்டு போய்விடாதீர்கள் தாத்தா.. நானும் உங்களோடு வந்து விடுவேன் தாத்தா.." என்று உள்ளம் பதைக்க கேவினாள்.
வலுக்கட்டாயமாக அவளை பிடித்து கட்டிலின் அந்த பக்கம் மெதுவே நகர்த்திய நளந்தன். "ஷ்.. மிதுனா..என்ன இது.. இப்படித்தான் உன் தாத்தாவை கலங்கடிப்பாயா?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி தாழ்வான குரலில் அழுத்தமாக கூறி அவளை கட்டுக்குள் கொண்டு வந்தான். குரலில் அழுத்தமும் நிதானமும் காட்டினாலும் அவன் கண்களும் கலங்கிதான் போயிருந்தன.
தன் ஆருயிர் நண்பனின் காதருகே குனிந்து, "சாந்து.. டேய்..சாந்து..இங்கே பாரடா..என்னை பாரடா.. இவளை நாங்கள் நன்றாக பார்த்துக் கொள்வோம். நீ கலங்காதேடா.." என்று குரல் உடைய சொன்ன சுந்தரம் சட்டென்று நளந்தனை கை காட்டி, "இவன் என் பேரன் தெரிகிறதாடா.. இவன் தான் உன் மாப்பிள்ளை. நம் மிதுனாவை கட்டிக் கொள்ள போகிறவன்" என்று ஏற்கெனவே கலங்கிகிடந்த மிதுனாவையும், இறுகி கிடந்த நளந்தனையும் ஒட்டு மொத்தமாய் அதிர விட்டு, மங்கி கிடந்த சந்தானத்தின் முகத்தில் மட்டும் ஒரு மெல்லிய ஒளியை தோற்றுவித்தார்.
புரிந்து கொண்டதன் அடையாளமாக ஒளிர தொடங்கிய முகம் அணைய போகும் விளக்கு போல பிரகாசமடைந்தது.
கண்ணில் நீர் வழிய அவர் நீட்டிய கையில் விருப்பமில்லை என்றாலும் வேறு வழியின்றி தன் கையை வைத்தான் நளந்தன். திகைப்பும் தவிப்புமாக கிடந்த தன் இன்னுயிர் பேத்தியின் கையை பற்றி அவன் கையின் மேல் வைத்த சந்தானம், தன் நடுங்கும் கரங்களால் அவர்கள் கைகளை உணர்ச்சி பொங்க சிறைபடுத்தி தீன குரலில், "இவள் உன்..உங்கள் பொறுப்பு.." என்று திணறினார். கட்டாயத்திற்காக கை நீட்டியவன் என்றாலும் நளந்தன் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியது. திகைத்து நின்ற மிதுனாவின் மென்கரமோ சில்லிட்டு கிடந்தது. எல்லாம் ஒரு கணம் தான். இருவருமே சுயவுணர்வு பெற்று விருப்பின்றி இணைந்த கரங்களை இணைத்த வேகத்தில் பிரித்தெடுத்துக் கொண்டனர்.
நல்லவேளை குளம் கட்டி நின்ற கண்ணீரை வழிய விட கண்களை அழுந்த மூடிய சந்தானமோ, உணர்ச்சிவயப்பட்டிருந்த மற்றவரோ அதை கவனிக்கவில்லை.
சந்தானம் கடும் பிரயாசைப்பட்டு மூச்செடுத்து, "பாப்பா.. பாப்பா.." என்றார். தாத்தாவின் கரத்தை பற்றி கொண்டு அவள் அழ, அவர் மூச்சுக்கு ஏங்குவது பெரிதுபட்டது. சுகவனத்தின் யோசனையின் பேரில் அனைவரும் சந்தானத்தின் வாயில் பால் புகட்டினர். இறுதி வழியனுப்புதல். மிதுனாவின் முறையில் இரண்டாவது மடங்கு பால் அவள் தாத்தாவின் கடைவாய் வழியே காது நோக்கி வழிந்தோடியது!
கண்கள் தாமாக மூடிக் கொள்ள மீளா துயில் கொண்டார் மிதுனாவின் ஆருயிர் தாத்தா! அவர் முகத்தில் சொல்லொணா நிம்மதி குடிகொண்டிருந்தது.
அதன்பிறகு நடந்தது எதுவும் மிதுனாவின் மனதில் பதியவில்லை. இறுதி சடங்கிற்காக சந்தானத்தின் சொந்த ஊர் ஆரகளூர் சென்றது, பெரியவர்கள் கூடி முடிவு செய்து நளந்தனையே கொள்ளி போட வைத்தது என்று எதையும் முழுமையாக உணர்ந்தாளில்லை.
நளந்தன் மட்டும் கொள்ளி வைத்த மறுநாளே தொழில் பார்க்க ஊர் சென்றுவிட்டான். ஆட்சேபித்த பெரியவர்களிடம் பத்தாம் நாள் காரியத்திற்கு வருவதாக சொல்லி விட்டு தான். சம்பிரதாயத்திற்காக மிதுனாவை பார்த்தும் ஒரு தலையசைப்பு.
பத்தாம் நாள் காரியம் வரை மிதுனா மந்திரித்து விட்டது போல தான் இருந்தாள். வாய்விட்டு அழம்மா என்று பலர் பல முறை வற்புறுத்தியும் பித்து பிடித்தார் போல தான் வெட்டவெளியை வெறித்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் முன்பு போல உண்ண உறங்க என்று எதற்கும் ஒரு தார்குச்சி தேவை என்றில்லாமல் தானியங்கி யந்திரம் போல தேவையானதை செய்து கொண்டாள். ஆம்.. யந்திரம் போல தான்!
காரியம் முடிந்து ஓரிரு நாள் கழித்து அனைவரும் ஊர் திரும்ப ஆயத்தமாயினர். தானும் கிளம்ப யத்தனித்த நளந்தனை யோசனையாக பார்த்த சுந்தரம், "விஜி கண்ணா.. இவளை கூட்டி கொண்டு நீ நம் வீட்டிற்கு போ. நான் சுகவனத்தோடு அவன் கிராமம் சென்று இருந்துவிட்டு ஓரிரு நாளில் வருகிறேன். மனசு சரியில்லையடா ராஜா.." என்றார் ஒரு திட்டத்தோடு.
நளந்தன் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகத்தில் மண்டிய குழப்பமும் சிறு எரிச்சலும் காட்டின. இத்தனை கூத்திற்கு பின் மிதுனா அவன் வீட்டிற்கு தான் வர போகிறாள் என்பதை யூகிக்க மகா மூளை தேவை இல்லை தான்.. ஆனால் அவனோடு தனியாக அனுப்புவார் இந்த தாத்தா என்பது அவன் சற்றும் எதிர்பார்த்திராத, விரும்பாத ஒன்றாயிற்றே!
அவளும் அவனும் தனியாக ஒரு வீட்டில்.. ஓரிரு நாள் என்றாலும், இது எப்படி சரியாகும்?!
ஆனால் சுந்தரத்தின் திட்டம் வேறாக இருந்ததே! வெறுப்பு மண்டி கிடந்த நளந்தனின் கண்ணிலும் மிதுனாவின் பால் ஒரு பரிவு அவ்வப்போது எட்டி பார்ப்பதை அவர் கண்டு கொண்டிருந்தாரே. அவர் கணிப்பு சரியென்றால் அவள் அவன் கவனிப்பில் இருப்பதும் சரிதான்!

//கண்கள் தாமாக மூடிக் கொள்ள மீளா துயில் கொண்டார் மிதுனாவின் ஆருயிர் தாத்தா//
ReplyDeleteஒரே கஷ்டமா போச்சுப்பா.. :(
எழுதும் போது,
ReplyDeleteஎனக்கு கூட
கண்ணுல தண்ணி
வந்துடிச்சி, அனு.
really good one .. even my eyes turned watery when i read this part great work.. keep doing ..
ReplyDeleteஹும்ம் .,கடைசில் முதுனாவின் தாத்தாவும் அவளிடமிருந்து சென்று விட்டாரா
ReplyDeleteஅட்சோ மிதுனாவை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் எனது கண்ணீரை துடைத்து கொண்டேன்
இவ்வளோ துயரமான நிகழ்வுகளை படித்து வேதனை பட்டது இல்லையா ...........................
தேனு இது உண்மை நிகழ்வா ..........................................
ப்ளீஸ் சொல்லுப்பா ......:(
Poor midhu.Feeling low after d update
ReplyDeleteSuper thozhi...semma..but midhula marubadiyum anga poradhu adhum thaniyanna ?????yosikanum
ReplyDelete