இருள் மறைத்த நிழல் (தேனு) - 39
நளந்தனை தவிர்க்க வேண்டும் என்பதொன்றே குறியாக அடுத்த அறையை திறந்து உள்புகுந்தாள் மிதுனா. வந்த வேகத்தில் அறையுள் ஒருவன் இருந்ததை அவள் கவனிக்கவேயில்லை. அரையிருள் வேறு. உள்ளே வந்த பின்னும் நளந்தன் பொய் சொன்னான் என்பது தான் மனம் முழுதும் கசந்து வழிந்தது. தாத்தா அங்கே அநாதை போல் இருக்க இவனும் ஒரு காரணம் என்று குமைந்தபடி நெஞ்சை அழுத்திக் கொண்டு அழுதவள், தன்னிலை சுதாரித்து மின் விளக்கை எரிய விட்டால்..
அங்கே வெறிகொண்ட நாய் போல பத்ரி! இவன் எப்படி இங்கே? பூட்டிய அறையினுள்? இவன் கடைத் தெருவிற்கு செல்வதாக சுபலா சொன்னாளே.. அது பொய்யா? அல்லது அவள் கண்ணிலும் மண்ணை தூவி இங்கே பதுங்கி இருந்தானா?
குரலெடுத்து அலறப் போன மிதுனாவை தாவி வந்து வாய் பொத்தினான் பத்ரி. மிதுனா திமிர திமிர அவன் மேலும் மேலும் அவளை அருகில் இழுத்தான். அவள் கைகளை முதுகுக்கு பின் மடக்கி அவளை கட்டியணைக்க மூர்க்கமாக முயற்சித்தான்.
சில பல நிமிட போராட்டத்திற்கு பிறகு அவன் கையைக் கடித்து விடுபட்ட மிதுனா கட்டிலின் மறுபுறம் ஓடினாள். ஒரே எட்டில் கட்டிலைத் தாவி அவளைப் பிடித்தான் பத்ரி. மீண்டும் அவன் பிடியில் சிக்கிய மிதுனாவிற்கு அதிர்ச்சியில் கத்த கூட குரல் எழும்பவில்லை. கெட்ட கனாவில் வார்த்தைகள் தெளிவற்று குழறுவது போல ஏதோ ஓசை எழுப்பினாள். இனி தப்பவே முடியாதோ என்று பயந்து சுழன்ற அவள் பார்வையில் அந்த இணைப்பு கதவு தென்பட்டது.
அதன் மறுபுறம் அவள் நந்தன் இருப்பானே! எங்கிருந்தோ வந்த உந்துதலால் பலங்கொண்டமட்டும் பத்ரியின் பிடியில் இருந்து திமிறி அவன் காலில் ஓங்கி மிதித்து அவனை உதறி அக்கதவை நோக்கி ஓடினாள்.
பத்ரி காலை உதறி சுதாரிக்குமுன் கதவை அடைந்த மிதுனா அதே வேகத்தோடு தாளை நீக்கி நளந்தனின் அறைக்கு ஓடி அங்கே கட்டிலருகே நின்றுகொண்டிருந்த அவள் நளந்தனின் வெற்று மார்பில், "நந்தன்!" என்று கதறியபடியே தன் தளிர் மேனி நடுங்க புதைந்து கொண்டாள்.
இரவு உடைக்குள் தன்னை திணித்துக் கொண்டிருந்த நளந்தன் அலைய குலைய, நந்தன் என்று பதறியடித்து அலறிக்கொண்டு வந்த அவள் கோலம் கண்டு பதறித்தான் போனான்.
அனிச்சை செயல் போல அவன் கைகள் அவளை இறுக அணைத்து கொள்ள , "ஹே.. என்னாச்சு?" என்றவன் அவள் பதில் பேச முடியாது திக்க, " மிதுனா.. இங்கே பார்.. என்னை பார்.." என்று அவள் கன்னத்தை தட்டி உலுக்கினான்.
விக்கி விக்கி அழுதாள் மிதுனா. பத்ரியின் மிருகத்தனம், தாத்தாவின் நோய் எல்லாம் சேர்ந்து கொள்ள அதுவரை அடக்கி வைத்த அழுகை எல்லாம் விம்மலாக வெடித்தது.
அதே சமயம், தடதடவென்று நளந்தனின் அறைக் கதவை யாரோ பொறுமையின்றி பலமாக தட்டினர். வெளியே பல பேச்சு குரல்.. ஜன்னலில் சிலர் எட்டிப் பார்த்தனர். பழங்கால கதவு.. தட்டிய வேகத்தில் தாள் விட்டுக் கொடுத்து கதவு திறந்தது.
திறந்த கதவுக்கு அப்பால்.. தாத்தா மற்றும் சில உறவினர் எல்லாருக்கும் நடுநாயகமாக சுபலா!
எல்லார் முகத்திலும் கடும் அதிர்ச்சி. ஒரு வேலையாள் மட்டும் வாய் திறந்தான்.
"இதுக்கு தான் ஊரில இருந்து வந்ததும் வராததுமா இந்தம்மா எங்கே எங்கேன்னு கேட்டீங்களா?" வெள்ளந்தியாக சொன்னது தான்..
ஒரு பைஜாமா மட்டுமே அணிந்து நிற்கும் நளந்தனின் வெறறு மார்பில், கலைந்த தலையும் கசங்கிய சேலையுமாக அவள் அப்படி புதைந்து கிடந்தால்.. இல்லாத கற்பனை எல்லாம் தோன்றும் தானே.. பைஜாமாவுக்கு மாறியிருந்த நளந்தன் அவள் அலறியடித்து வந்த வேகத்தில் அணிய எடுத்த மேல் சட்டையை வீசி எறிந்துவிட்டு அவளை எதிர்கொண்டான். மார்பில் தஞ்சம் புகுந்த அவள் என்ன ஏது என்று விவரம் சொல்வதற்குள் இவர்கள் அனர்த்தம் செய்து கொண்டு..
தன்னிலை உணர்ந்த இருவரும் தீ சுட்டார் போல விலகி நிற்க, "சும்மா இருடா முருகா!" என்று தாத்தா ஒரு அதட்டல் போட்டார்.
"டவுன் பழக்கம்!" என்றார் ஒருவர்.
"கவுண்டரே, விசியனுககு காலாகாலத்துல ஒரு கால் கட்டு போடுங்க" என்றார் ஒருவர்
"இப்ப என்ன கெட்டு போச்சு இவுக ரெண்டு பேருக்குமே நாளக்கி பரிசம் போடுங்க"
"ஆமா.. சிறுசுங்க.."
"பொண்ணு நம்ப சாதியா?"
ஆளாளுக்கு நாட்டாமை பண்ண..
"வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்?!" என்று பொறுமையிழந்து கத்தினான் நளந்தன்.
விக்கித்து நின்றாள் மிதுனா.
தாத்தா மட்டும் தன் உடல்நிலை அனுமதித்த அளவில் குரலை உயர்த்தி, " இவர்கள் இருவருக்கும் திருமணம் என்பது முன்னரே முடிவான விஷயம் தான். என்ன ஒன்று சின்னஞ்சிறுசுகள்.. அவசரப்பட்டுவிட்டார்கள். நல்ல முகூர்த்தத்தில், நடக்க வேண்டியதை நடத்த வேண்டியது என் பொறுப்பு. இது பற்றி யாரும், எதுவும் பேச, ஒன்றும் இல்லை.
தேர் பண்டிகைக்கு விடிகாலையில் கோவிலில் இருக்க வேண்டும். போய் தூங்குகிற வழியைப் பாருங்கள். மீனாம்மா.. நீயும் விஜியிடம் சொல்லிவிட்டு என் அறைக்கு வா. இன்று அங்கேயே தங்கி கொள்" என்று குரலை உயர்த்தி உத்தரவிட்டார்.
நடுவில் "தாத்தா" என்று இருமுறை நளந்தன் கோபமாக இடையிட்டதை அவர் லட்சியமே செய்யவில்லை. மட மடவென்று தன் அறைக்கு சென்றுவிட்டார். பெரியவரின் சொல்லுக்கு அப்பீல் ஏது?!
சிறு சலசலப்பிற்கு பின் கூட்டம் கலைந்தது. நளந்தன் ஆத்திரம் மிக வெகுண்டான்.
அதிர்ச்சியில் உறைந்து நின்றது மிதுனா, சுபலா மட்டுமே! ஆம்! சுபலாவிற்கும் இது அதிர்ச்சிதான்!

இந்த பதிவு கலவையான உணர்வுகளை தருகிறது
ReplyDeleteபத்ரியை கண்டதால் அதிர்ச்சி ;அவனின் செயலால் வெறுப்பு ;அதில் இருந்து தப்பித்து கொள்ள
போராட்டம் ;பின்னர் அவனிடம் இருந்து விடுபட்டு நளனிடம் தஞ்சம் ;விளக்க முடியாமல் துக்கத்தால் ஏற்பட்ட அழுகை
பின்பு இந்த சுபலாவின் சூழ்ச்சியால் ஏற்பட்ட நிகழ்வுகள் .............
ஒரு புறம் மிதுனாவிர்கு ஏற்பட்ட துன்பம் எந்த பெண்ணுக்கும் ஏற்படவே கூடாது என்று இருந்தாலும்
எல்லாம் நன்மைக்கே என்று இன்னொரு புறம் நினைக்க தோன்றுகிறது
very nice story thenu
ReplyDeleteStory's twist - manasukkule kashtama irrundalum rombaa superb presentation.
ReplyDelete