Skip to main content

Posts

Showing posts from 2010

The Author Speaks..

Subscribe to the Audio story on YouTube Channel Thenulagam https://www.youtube.com/@thenulagam    Feb 14th 2010 உங்களுக்கு ரமணிசந்திரன் நாவல்கள் பிடிக்குமானால் நிச்சயமாக இந்த கதையும் பிடிக்கும். Just in time, for the Valentines Day!  ரமணிசந்திரன்  அம்மாவின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் பட்டியல் சுஜாதா, சிவசங்கரி, லக்ஷ்மி, பாலகுமாரன், கல்கி, அகிலன், ராஜேஷ்குமார், அனுராதாரமணன் என வளர்ந்து கொண்டே போகும். அது முடிவற்றது. ஆனால் ஒரு காலகட்டத்தில் எனது ஆர்வம் ரமணிசந்திரன் நாவல்களில் நங்கூரமிட்டுவிட்டது.   எல்லாம் சரி... இப்படிப்பட்ட தீவிர வாசகி திடீரென்று எப்படி ஒரு அமெச்சூர் எழுத்தாளரானாளாம்? அது ஒரு எதிர்பாராத திருப்பம்.  என்னிடம் ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் நூல் வடிவில் உள்ளன. படித்து முடித்த கதைகள் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் அவற்றை படிப்பதை கண்ட என் கணவர் என் அமைதியற்ற தன்மையைப் பார்த்து சிரித்தார். "அதான் ரமணிசந்திரன் கதைகள் எல்லாம் ஒரு வகையான  கட்டமைப்புலே இருக்கும்னு சொல்றியே..  ...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 1

From the Author Thenu:  It came to my attention that some youtube channels had narrated this novel. My request to them is to correct the Author name. It is by me - Thenu. However it had been communicated to many as Ramani Chandran Madam's novel. It is a compliment in disguise. However, it pains to see my work passed on as not my work. All I request is to acknowledge my work and give due credits. Also ask before you use my content. Some have used my drawings as well without my consent.  If whoever sees this message can pls  persuade the youtube channels to update their description box & thumbnails with  proper credits to the Author , I appreciate your help!   For Audio narration of the book: Subscribe to https://youtube.com/@thenulagam channel https://www.youtube.com/playlist?list=PLj3Qqyts5WEGEYwxIIEHLdAv76E6d_15v இருள் மறைத்த நிழல் (தேனு) - 1 அதிகாலை சூரியனின் இளஞ்சூடு அந்த காலை குளிருக்கு இதமாக இருந்தது. மனதை அழுத்தும் பாரம் ஒரு புறம் இருந்தாலும் இயற்...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 17

இருள் மறைத்த நிழல் (தேனு) - 17     காரில் லாவகமாக அமர்ந்தவன் அவள் பக்கத்து கதவை தன் வலிய கரங்களால் உள்ளிருந்தபடியே எட்டித்  திறந்துவிட்டான். அவனோடு முன்புறம் அமர்ந்து செல்ல எப்படியோ இருந்தது. உள்ளே அமர்ந்துகொண்டு கதவை சாத்தியவள் அது முழுமையாக சாத்தாது கண்டு மீண்டும் கதவைத் திறந்து சாத்தினாள். முன் பின் செத்திருந்தால் அல்லவா சுடுகாடு தெரியும்! இதுவோ அவளது முதல் கார் பயணம். கதவை அறைந்து சாத்த வேண்டும் என்பதைப் பாவம் அவள் அறியவில்லை. நளந்தன் அறைந்து சாத்த சொல்லியும், அவள் அறைந்த வேகம் பத்தவில்லை! ரொம்ப வேகமாக அறைந்து கதவு ஏதாவது ஆகிவிடுமோ என்றும் இருந்தது. அவள் முகம் கன்ற, ஒரு சின்ன புன்னகையோடு நளந்தனே தன் இருக்கையிலிருந்து லேசாக அவள் புறம் சாய்ந்து கதவை சாத்தக் கைகளை நீட்டினான். கிட்டத்தட்ட அவளை உரசி கொண்டு நீண்ட கைகளால் அவள் சிலிர்த்து அனிச்சையாய் விலகி இருக்கையோடு அழுந்திக் கொள்ள, நீண்ட கைகளை நீட்டிய வேகத்திலேயே இழுத்துக் கொண்டு வியப்பாய் அவளைப் பார்த்தான். பின் இதழ்க்கடையில் ஒரு மென் முறுவலோடு ஏதொன்றும் சொல்லாமல், தன் சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு சற்று முன்னோக்கிக் குனிந்த...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 22

இருள் மறைத்த நிழல் (தேனு) - 22 எதிர்பாராதவிதமாக ஆந்திராவில் ஓரிரு நாட்கள் அதிகம் தங்க நேர்ந்தாலும், முடிந்தவரை சீக்கிரமாகவே ஊர் திரும்பினான் நளந்தன். ஈரக் கூந்தலுடன் பூஜைக்கு செவ்வரளிப்பூக்களைச் செடிக்கு வலிக்காமல் மெல்லப் பறித்துக் கொண்டிருந்த மிதுனா, அவனுக்கென்றே தைத்தார் போன்று இருந்த வெள்ளை பனியனும், அரைக்கால் சட்டையுமாக 'ஜாகிங்' முடித்து அவளை நோக்கி வந்த நளந்தனைப் பார்த்ததும் அகமும் முகமும் ஒரு சேர மலர்ந்தாள். தேடி அலைந்த ஒன்று கைவரப் பெற்ற நிம்மதி நெஞ்சுக்குள். பதிலுக்கு மோகனமாய் புன்னகைத்தான் நளந்தன். ஏதோ டியூடரிங்  செய்கையில் நிம்மதி பெற்று மனம் ஒருமுகப்பட்டதாக நினைத்தாளே.. அவனைக் கண்டதும், அவன் முறுவலை ஏற்றதும்,  ஏற்பட்ட உணர்வு.. அதுதான் அமைதி, நிம்மதி எல்லாம் என்றது! என்ன விசை வைத்திருக்கிறான் அந்த புன்னகையில்?! வெகு அக்கறையாக நல விசாரணை செய்தான். அவனாவது தாத்தாவின் பயண விவரம் தருவானோ என்று நப்பாசைத் தோன்றியது. கூடவே நேற்றிரவு தான் ஊரில் இருந்து திரும்பி இருப்பான். அதற்குள் இவள் தாத்தாவின் பயண விவரம் பற்றி அவனுக்கு என்ன, எப்படி தெரிய வாய...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 29

   இருள் மறைத்த நிழல் (தேனு) - 29 அன்று முதல் ஒரு கவனத்தோடு நடந்துகொண்டாள் மிதுனா. சுகிர்தனிடம் பேசும் சந்தர்ப்பங்களை குறைத்துக் கொண்டாள். நளந்தனுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ..அதற்காக என்றில்லை..அவளுக்கேப் பிடிக்கவில்லை. சுகிர்தன் நல்லவன் தான். பண்பானவனும் கூட. ஆனால் அவனிடம் மனம் ஒட்டாத போது, அவன் மனதில் வீண் ஆசைகளை கிளப்பிவிடுவது ..அதிலும் தெரிந்தே கிளப்பிவிடுவது மகா பாவமில்லையா?! சுகிர்தனை தவிர்ப்பது அப்படியொன்றும் முடியாத காரியமாகவும் இல்லை. அவன் வீட்டில் இருந்தால் தானே அந்த கஷ்டம்?! என்னவோ நளந்தன் அவனைக் கூட்டிக் கொண்டு அப்படி வெளியே சுற்றினான்! உணவு கூட காலை சிற்றுண்டி தவிர பிற வேளைகளில் வெளியிலேயே முடித்துக் கொண்டனர். காலை உணவை மிதுனா தாமதமாக எழுந்துவிட்டது போல..அல்லது பசியில்லை என்று தவிர்த்துவிடுவாள். இளைஞர்கள் இருவரும் அதிகாலையில் கிளம்பிவிடுவதால், சுகுனம்மாவும் சில தினங்களுக்கு பிறகு மிதுனா எழும் வேளையிலேயே எழுந்து அவளோடு உணவுண்டார். மாலை அவர்கள் சீக்கிரம் வந்துவிட்டாலோ இவள் கோவிலுக்கு கிளம்பிவிடுவாள். சுகுனம்மாவுக்கு கோயில் ...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 34

இருள் மறைத்த நிழல் (தேனு) - 34 சஞ்சலங்களும் சலனங்களுமாக அடுத்த சில நாட்கள் கரைய, அவளது ஒதுக்கத்தை நளந்தன் பெரிதுபடுத்தவில்லை. ஆனாலும் அவளை கூர்ந்து கவனிப்பது போல இருந்தது. சுகுனம்மாவும் சுகிர்தனும் ஊர் திரும்ப ஆயத்தமாயினர். எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு செல்கையில் சுகுனம்மா மிதுனாவின் கரத்தைப் பற்றி, "உன்னையும் என்னோடு எங்கள் வீட்டிற்கு கூட்டி செல்ல ஆசை தான். ஹூம்.. என்ன செய்வது..என் மகளின் பிரசவத்திற்காக நானும் சுகிர்தனோடு அடுத்த வாரம் லண்டன் செல்லவேண்டுமே" என்றார். "பேரனா பேத்தியா அம்மா? " என்று அக்கறையாக  கேட்டாள் மிதுனா. "சொல்லியிருந்தால் உங்கள் பெண்ணுக்கு ஏதேனும் ஒரு பரிசு பொருளாவது வாங்கி இருப்பேனே?! நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள்? " என்றும் ஆவலோடு கேட்டாள் மிதுனா. சுகுனம்மா முறுவலித்து, " இருக்கட்டும்மா.. அதனால் என்ன.. நான் எப்படியும் ஆறேழு மாதங்கள் அங்கு தானிருப்பேன். சுகிர்தன் வர தான் ஒரு வருடம் ஆகிவிடும். அவன் மேல் படிப்பிற்கு அங்கு செல்கிறான். என் பெண் வீடும் இவன் கல்லூரியும் பக்கத்து பக்கத்து ஊர் தான். ஒரு வருடம் இவனை பிரிந...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 75

இருள் மறைத்த நிழல் (தேனு) - 75 "இவ்வளவு அன்பு இருப்பவள், அப்படியும் என்னை விலகி விட தானே முடிவு செய்தாய்?" என்று நளந்தன் குறை போல் சொல்ல, "பின்னே, விலக முடியாதபடி கட்டி போட்டுவிட்டு என்றெல்லாம் வெறுப்பாக சொன்னீர்களே.. விலகாமல் என்ன செய்வதாம்?" என்றாள் மிதுனா. "'Reading between lines' என்று கேள்விப்பட்டதில்லையா? அப்படியே  'literal'-ஆக அர்த்தம் செய்து கொள்வதா? உன் காதலால் என்னை விலக முடியாதபடி கட்டி போட்டு விட்டு, போகிறேன் போகிறேன் என்று சொல்கிறாயே என கோபித்து கொண்டேன்"  உல்லாசமாக சிரித்தான் நளந்தன். நளந்தன் மேல் தனக்கிருக்கும் ஆதிக்கம் பெருமிதம் தந்தாலும் அவனை வருத்தி விட்டோமே என்று மனம் வருந்த, "நீங்கள் தான் உங்களை போட்டு அப்படி வருத்தி கொண்டீர்களே. தாத்தாவிற்கு கொடுத்த வாக்கிற்காக, மெல்லவும் முடியாமல்  விழுங்கவும் முடியாமல் தவிக்கிறீர்களோ என்று.. உங்களுக்காக தான், நந்தன்.. நான் விலகி விட நினைத்தேன். உங்களை பிரிவது உயிரை பிரிப்பது போல தான் இருந்தது." என்று மனதை மறைக்காமல் சொன்னாள். அவள் விரல்களோடு விரல் பொறுத்தி விளையாடி கொன...