இருள் மறைத்த நிழல் (தேனு) - 34
சஞ்சலங்களும் சலனங்களுமாக அடுத்த சில நாட்கள் கரைய, அவளது ஒதுக்கத்தை நளந்தன் பெரிதுபடுத்தவில்லை. ஆனாலும் அவளை கூர்ந்து கவனிப்பது போல இருந்தது. சுகுனம்மாவும் சுகிர்தனும் ஊர் திரும்ப ஆயத்தமாயினர்.
எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு செல்கையில் சுகுனம்மா மிதுனாவின் கரத்தைப் பற்றி, "உன்னையும் என்னோடு எங்கள் வீட்டிற்கு கூட்டி செல்ல ஆசை தான். ஹூம்.. என்ன செய்வது..என் மகளின் பிரசவத்திற்காக நானும் சுகிர்தனோடு அடுத்த வாரம் லண்டன் செல்லவேண்டுமே" என்றார்.
"பேரனா பேத்தியா அம்மா? " என்று அக்கறையாக கேட்டாள் மிதுனா.
"சொல்லியிருந்தால் உங்கள் பெண்ணுக்கு ஏதேனும் ஒரு பரிசு பொருளாவது வாங்கி இருப்பேனே?! நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள்? " என்றும் ஆவலோடு கேட்டாள் மிதுனா.
சுகுனம்மா முறுவலித்து, " இருக்கட்டும்மா.. அதனால் என்ன.. நான் எப்படியும் ஆறேழு மாதங்கள் அங்கு தானிருப்பேன். சுகிர்தன் வர தான் ஒரு வருடம் ஆகிவிடும். அவன் மேல் படிப்பிற்கு அங்கு செல்கிறான். என் பெண் வீடும் இவன் கல்லூரியும் பக்கத்து பக்கத்து ஊர் தான். ஒரு வருடம் இவனை பிரிந்து.." என்று அவர் ஒரு வருத்ததோடு பேச
இடையிட்ட மிதுனா, "என்ன அம்மா.. அது தான் பக்கத்து ஊர் என்கிறீர்களே, நீங்கள் எல்லாரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியுமே.. பிறகும் விசாவை நீங்கள் நீட்டிக்கொள்ள முடிந்தால், முழு படிப்பு காலம் வரை அங்கிருக்கலாமே.. உங்கள் பேர குழந்தைக்கும் அதற்குள் ஒரு வருடம் முடிந்துவிடும். உங்கள் கவனிப்பிலேயே வளர்க்கலாம். உங்கள் பெண்ணுக்கும் சந்தோஷமாக இருக்கும். " என்று தேற்றினாள்.
அவள் கள்ளமின்றி உரைத்ததை பார்த்த சுகுனம்மா சிறு குழப்பத்தோடு சுகிர்தனைப் பார்க்க, அவனோ உதட்டை பிதுக்கினான். ஏன்.. என்ன தப்பாக சொல்லிவிட்டாள்.. சுகுனம்மாவின் குழப்ப பார்வை இப்போது மிதுனாவுடையது ஆனது.
குழப்பத்தோடு நளந்தனை ஏறிட்டாள். அங்கே அவன் கண்களில் சின்ன மின்னல். குழப்பம் தீர்ப்பான் என்று பார்த்தால் இன்னும் அல்லவா குழப்புகிறான்! அதற்குள் சுகிர்தனே குழப்பத்தை தெளிவித்தான்.
ஒரு போலி வருத்தம் காட்டி, "நான் ஒரு வருடம் தாய் நாட்டை விட்டு போகிறேனே என்று உங்களைப் போலவே எல்லாரும் வருத்தப்பட வேண்டும் என நினைத்தால் எப்படிம்மா?" என்றான்.
"நல்ல விஷயமாக தானே போகிறீர்கள். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? " என்று மீண்டும் புரியாமல் மிதுனா விழித்தாள்.
"ம்ஹூம்.. நான் எதுவும் பேசாமலேயே விட்டிருக்கலாம்" என்று சுகிர்தன் கேலி பேச,
"உன்னை மிஸ் பண்ணுவேன் என்று தான் சொல்லிவிடேம்மா.. பாவம் அசடு வழிகிறான்" என்று எடுத்துக் கொடுத்தார் சுகுனம்மா.
இதற்கு எப்படி பதில் சொல்வது என்று அவள் திணறுகையில், "ஹலோ! இன்று கிளம்புகிறீர்கள் என்று விஜ்ஜி சொன்னார். ஹாப்பி ஜர்னி" என்று சொல்லியபடி உள்ளே நுழைந்தாள் சுபலா. சுபலாவின் வருகை கூட தனக்கு இப்படி நிம்மதி அளிக்கக்கூடும் என்று அவள் நினைத்ததே இல்லை! தன்னையறியாமலே ஒரு இக்கட்டில் இருந்து மிதுனாவை விலக்கிவிட்டாளே!அது நிம்மதி தானே?
ஆனால் அது மட்டும் தான் நிம்மதி!
அதற்குள் பெட்டியை வண்டியில் ஏற்ற முத்து வந்துவிட சுபலாவிடம் மமுகவுரை, முடிவுரை எல்லாம் முடித்து, அனைவரிடமும் மீண்டும் ஒரு சுற்று பிரியாவிடை பெற்ற இருவரும் வண்டியில் ஏறினர். வழியனுப்ப நளந்தனும் ஏறிக் கொண்டான். அவன் காதில் சுபலா ஏதோ கிசுகிசுத்தாள். நளந்தன் என்ன சொன்னானோ, சுபலா தாத்தா, மிதுனாவோடு வந்து நின்று கொண்டு அவர்கள் மூவருக்கும் கையாட்டினாள்.
நளந்தனோடு சுபலாவும் ஒட்டிக் கொண்டே போயிருந்தால் கூட பரவாயில்லை என்றிருந்தது மிதுனாவுக்கு. அசதியுற்ற தாத்தா, "நீங்கள் பேசிக் கொண்டிருங்களம்மா.. நான் கொஞ்சம் தூங்குகிறேன்" என்று சொல்லி கழன்றுகொண்டார்.
வேறு வழியின்றி மாட்டிக்கொண்டது மிதுனா தான்.
சாவகாசமாக மிதுனாவின் அறைக்குள் அன்று போல் நுழைந்த சுபலா நேரே விஷயத்திற்கு வந்தாள்.
"என்னை நேரே கிளப்பிற்கு வந்துவிட சொல்லிவிட்டார் விஜ்ஜி. ஏர்போர்ட்டில் இருந்து அவரும் நேரே அங்கு வந்துவிடுகிறாராம். அதைதான் ரகசியமாக அங்கே விடை பெரும் போது சொன்னார்" என்று அவள் கேளாத விளக்கத்தை சிரமேற்கொண்டு கொடுத்தாள்.
"எத்தனை நாள் தான் இப்படி சுற்றி வளைத்து பேசுவாய்? இன்று சொல்லிவிட வேண்டும் என்றாரா.. நானும் சரி என்றேன்.. இருந்தாலும் மனதுக்குள் ஒரு பயம்.. நீ காதலித்திருக்கிறாயா?" என்று ஆழம் பார்ப்பது போல கேட்டாள்.
மிதுனா பதிலுறுக்க மாட்டாள் என்பது புரிய, உதட்டை சுளித்து, "ச்சு.. உன்னை போய் கேட்டேனே.. எப்படியோ, இன்று நான் விஜ்ஜியிடம் என் காதலை சொல்லிவிடப் போகிறேன். நான் அவரை காதலிக்கிறேன் என்று என் வாயால் சொல்ல வேண்டுமாம் அவருக்கு. அதன் பின்தான் அவர் ஐ லவ் யூ சொல்வாராம். வேடிக்கையாக இல்லை?! இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை." என்று தன் ஓரங்க நாடகத்தை செவ்வனே நடத்தி முடித்து விட்டு, "அன்று 'breath taking' என்று சொன்னாரே அந்த உடையில் தான் ப்ரபோஸ் செய்யப் போகிறேன்.. துணைக்கு நீயும் வருகிறாயா?" என்று ஒரு கல்லை தூக்கிப் போட்டாள்..
பல்லை கடித்துக் கொண்டு அவளை சகித்து சமாளித்து வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!
மனமெல்லாம் ரணமாக வலித்தது.

"பாவம், விஜ்ஜி! இன்று ஒரு சேதி சொல்லப போகிறேன் என்றேனா.. அதுதான் அப்படி ஆலாய்ப் பறக்கிறார்" என்றாள்.
மிதுனாவிற்கு இப்போது ஒரு 'மோனோ' ஆக்டிங் பார்ப்பது போல இருந்தது! எதிராளிக்கு தன் பேச்சு ரசமாக உள்ளதா இல்லையா என்று கூட உணரமாட்டாது என்ன இவள்! இவளிடம் எப்படி நளந்தன் மனதை விட்டான்?
"எல்லாம் காதல் படுத்தும் பாடு... அது தான்.. அப்ப்படி ஒரு ஆவல் அவசரம் ஆத்திரம் எல்லாம் அவருக்கு.."
"எத்தனை நாள் தான் இப்படி சுற்றி வளைத்து பேசுவாய்? இன்று சொல்லிவிட வேண்டும் என்றாரா.. நானும் சரி என்றேன்.. இருந்தாலும் மனதுக்குள் ஒரு பயம்.. நீ காதலித்திருக்கிறாயா?" என்று ஆழம் பார்ப்பது போல கேட்டாள்.
மிதுனா பதிலுறுக்க மாட்டாள் என்பது புரிய, உதட்டை சுளித்து, "ச்சு.. உன்னை போய் கேட்டேனே.. எப்படியோ, இன்று நான் விஜ்ஜியிடம் என் காதலை சொல்லிவிடப் போகிறேன். நான் அவரை காதலிக்கிறேன் என்று என் வாயால் சொல்ல வேண்டுமாம் அவருக்கு. அதன் பின்தான் அவர் ஐ லவ் யூ சொல்வாராம். வேடிக்கையாக இல்லை?! இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை." என்று தன் ஓரங்க நாடகத்தை செவ்வனே நடத்தி முடித்து விட்டு, "அன்று 'breath taking' என்று சொன்னாரே அந்த உடையில் தான் ப்ரபோஸ் செய்யப் போகிறேன்.. துணைக்கு நீயும் வருகிறாயா?" என்று ஒரு கல்லை தூக்கிப் போட்டாள்..
பல்லை கடித்துக் கொண்டு அவளை சகித்து சமாளித்து வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!
மனமெல்லாம் ரணமாக வலித்தது.
சுபலாவிடம் நளந்தனுக்கு காதல் என்பது சுபலாவின் சொந்த கற்பனை என்று மனதின் ஒரு மூலையில் இருந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விடுமோ என்று பயமாக இருந்தது.
இரவு வெகு நேரம் கழித்து தான் நளந்தன் வந்தான். அவள் அறையின் விளக்கு எரிவதை கண்டு அன்று போல தயங்கி நிற்க அவனைப் பார்த்துவிட்ட மிதுனாவும் எழுந்து நின்றாள். அவள் முகம் இன்னமும் குழம்பி கிடக்க, அவளருகே வந்தவன், ஒரு மென் சிரிப்பினூடே, "இன்றும் ஏதாவது கேள்வி இங்கே குடைகிறதா?" என்று அவள் தலையைத் தொட்டு கேட்டான்.
மிதுனா பதில் பேசாது திரும்பினாள். சுபலாவை பார்த்துவிட்டு வருகிறானா?
"ஏன்? என்னாச்சு?"
அவன் கேள்வி அவளை உசுப்ப, "அதே கேள்வி தான். காதலா என்று தெரிந்துவிட்டதா? என்பது தான். கேட்டால் தெரிந்தவர் தெரியாதவர் என்று புதிர் போடுவீர்கள்" என்றாள் ஆற்றாமையோடு. அப்போது கூட சுபலா சொல்வது எல்லாம் பொய் என்றே அவளது உள்மனம் சொல்லியது.

அவளை கனிவாக பார்த்த நளந்தன், "தெரிந்துவிட்டது" என்று ஒற்றை வார்த்தையில் பதில் போல பதிலல்லாத ஒன்றை சொன்னான்.
தெரிந்துவிட்டது என்று மொட்டையாக சொன்னால்..என்ன நினைப்பதாம்?
"எ..என்ன தெரிந்துவிட்டது?" குரல் எழும்பாது கேட்டாள் மிதுனா.
"ம்ம்..கவர்ச்சி, காமம் எல்லாம் கலந்த அக்மார்க் காதல் என்று தெரிந்துவிட்டது!"
அவன் குரலில் இருந்த துள்ளல், ஒரு உதறலை கொடுக்க,
"அந்த பெண்ணிடம் உங்கள் காதலை சொல்லிவிட்டீர்களா? அவள் சம்மதம் சொல்லிவிட்டாளா ?" கேட்டு முடிப்பதற்குள் மூச்சடைத்தது அவளுக்கு.
பார்வை பளிச்சிட,
பார்வை பளிச்சிட,
"நான் இன்னும் சொல்லவில்லை..ஆனால் அவள் சொல்லிவிட்டாள்" என்று அவளைப் பார்த்து மெத்தனமாக சிரித்தான் அவன்.
'இன்று ஒரு சேதி சொல்ல போகிறேன்' என்றாளே சுபலா.. சொல்லிவிட்டாளாமே..
மனமும் முகமும் சோர்ந்து விழ சுரத்தின்றி 'ஓ' என்றாள்.
"அவ்வளவு தானா? வாழ்த்துக்கள் எல்லாம் இல்லையா?"
அவனைப் போல சாதாரணமாக பேச முடியவில்லை அவளால். முயன்று தருவித்த குரலில், "வாழ்த்துக்கள்" என்றாள் டீ கப்பை 'சிங்கில்' போட எழுவது போல முகத்தை மறைத்துக் கொண்டு.
கதவை நோக்கி அவள் செல்ல முனைகையில், "அவ்வளவே தானா?.. வேறு கேள்வி இல்லையா?" என்றான் அவளிடம் எதையோ எதிர்பார்ப்பவன் போல.
இல்லை என்று சின்ன குரலில் மிதுனா அவனைப் பாராமலேயே சொல்ல உற்சாகம் துள்ள கேட்டான்.
"அவள் யார் என்று உனக்கு தெரியவேண்டாமா?"
அதை கேட்டுதான் தெரிந்துகொள்ளவேண்டுமா? ஸ்பெஷல் 'Bye' சொல்ல ஓடிய சுபலா கண்முன் வந்தாள்.
"சுபலா தானே?" என்று கேட்டு, "இல்லை" என்று சொல்லிவிட மாட்டானா என்றும் ஒரு நப்பாசை இருந்தது. அவன் அப்படியேதும் சொல்லாது விடுத்தால் பெரும் ஏமாற்றம்.
காமம், கவர்ச்சி கலந்த காதலாமே! வெறும் காதலுக்கே கண்ணில்லை என்பார்கள், இங்கு காமம், கவர்ச்சி எல்லாம் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்?! சுபலாவின் வேலை சுலபம் ஆயிற்றே! தாத்தா அஞ்சியது போல சுபலாவின் வலையில் அவள் நந்தன் விழுந்தே விட்டானே!

அவள் நிராசையோடு அவனை ஏறிட்டு பார்க்க அவன் பார்வை மேலும் பளிச்சிட்டது.
அவள் அருகில் வந்து ஏதோ சொல்ல வந்தவன் ஒரு மௌன சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு, "இந்த விஷயம் யாரிடமும் இப்போது சொல்ல வேண்டாம். நம் ஊர் திருவிழா அடுத்த வாரம் வருகிறது. அங்கே சமயம் பார்த்து நானே சொல்கிறேன், என்ன? " என்றான்
அவன் குரல் கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பது போல கேட்டது.
தலையை ஆட்டினால் கூட இமைகளால் அணைகட்டி வைத்த கண்ணீர் கொட்டிவிடுமோ என்று பயமாக இருந்தது அவளுக்கு.

பாவம் இந்த மிது ;அவள் மனம் படும் பாட்டை நாமும் உணர முடிகிறது
ReplyDeleteஇந்த நளன் ஏன் தான் இப்படி மிதுவை அலைகளிக்கிரானோ
பத்தாதற்கு இந்த சுபலா வந்து வேறு மதுவை படுத்தி விட்டு போகிறாள்
எப்போது தான் மதுவிற்கு விடுவு காலம் வருமோ! ஹும்ம்ம்ம்...............
பதிவுக்கு நன்றி
Excellent novel. Even at 3 am can't stop reading. Very well written
ReplyDeleteExcellent novel. Even at 3 am not kept pending for the next day. Well written.
ReplyDeleterealy u r great. touching story
ReplyDelete