Skip to main content

Posts

Showing posts from 2010

The Author Speaks..

Subscribe to the Audio story on YouTube Channel Thenulagam https://www.youtube.com/@thenulagam    Feb 14th 2010 உங்களுக்கு ரமணிசந்திரன் நாவல்கள் பிடிக்குமானால் நிச்சயமாக இந்த கதையும் பிடிக்கும். Just in time, for the Valentines Day!  ரமணிசந்திரன்  அம்மாவின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் பட்டியல் சுஜாதா, சிவசங்கரி, லக்ஷ்மி, பாலகுமாரன், கல்கி, அகிலன், ராஜேஷ்குமார், அனுராதாரமணன் என வளர்ந்து கொண்டே போகும். அது முடிவற்றது. ஆனால் ஒரு காலகட்டத்தில் எனது ஆர்வம் ரமணிசந்திரன் நாவல்களில் நங்கூரமிட்டுவிட்டது.   எல்லாம் சரி... இப்படிப்பட்ட தீவிர வாசகி திடீரென்று எப்படி ஒரு அமெச்சூர் எழுத்தாளரானாளாம்? அது ஒரு எதிர்பாராத திருப்பம்.  என்னிடம் ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் நூல் வடிவில் உள்ளன. படித்து முடித்த கதைகள் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் அவற்றை படிப்பதை கண்ட என் கணவர் என் அமைதியற்ற தன்மையைப் பார்த்து சிரித்தார். "அதான் ரமணிசந்திரன் கதைகள் எல்லாம் ஒரு வகையான  கட்டமைப்புலே இருக்கும்னு சொல்றியே..  ...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 1

From the Author Thenu:  It came to my attention that some youtube channels had narrated this novel. My request to them is to correct the Author name. It is by me - Thenu. However it had been communicated to many as Ramani Chandran Madam's novel. It is a compliment in disguise. However, it pains to see my work passed on as not my work. All I request is to acknowledge my work and give due credits. Also ask before you use my content. Some have used my drawings as well without my consent.  If whoever sees this message can pls  persuade the youtube channels to update their description box & thumbnails with  proper credits to the Author , I appreciate your help!   For Audio narration of the book: Subscribe to https://youtube.com/@thenulagam channel https://www.youtube.com/playlist?list=PLj3Qqyts5WEGEYwxIIEHLdAv76E6d_15v இருள் மறைத்த நிழல் (தேனு) - 1 அதிகாலை சூரியனின் இளஞ்சூடு அந்த காலை குளிருக்கு இதமாக இருந்தது. மனதை அழுத்தும் பாரம் ஒரு புறம் இருந்தாலும் இயற்...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 2

இருள் மறைத்த நிழல் (தேனு) - 2 அறை வாயிலில் நிழலாடியதை கண்டு தலை திருப்பிய அந்த வளமான குரலுக்கு சொந்தக்காரன், கடுகடுத்த முகத்தோடு நிதானமாக எழுந்து அவளருகே வந்தான். வந்த அந்த இளைஞன் அதே கோபத்தோடே கேட்டான், "யார் நீ? கதவை தட்டி அனுமதி கேட்கும் 'basic manners' கூட தெரியாதா?"                   அவளுக்கு அவமானமாக இருந்தது. இந்த அறையாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கதவின் மேல் கையை வைத்து விட்டாள் தான். ஆனால் பாதி சாத்தியிருந்த கதவு அப்படி எளிதாய் திறந்து கொள்ள, உள்ளே இவன் யாருடனோ பேசிக்கொண்டிருப்பான் என்று அவளுக்கு எப்படி தெரியும்? அதற்கு இவ்வளவு கடுமையா? வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம்? அவள் என்ன வேண்டுமென்றா ஒட்டு கேட்டாள்? அல்லது, அப்படி தான் இவர்கள் ரகசியம் பேசினார்களா? ஊருக்கே கேட்கும்படி உரக்க பேசிவிட்டு தன மேல் பாய்ந்தால் எப்படி? அப்படியே சிதம்பர ரகசியம் பேச வேண்டுமென்றால் கதவை தாளிட்டுக்கொண்டு பேச வேண்டியதுதானே? அவளுள்ளும் கோபம் குமுறிக்கொண்டு வர அவனுக்கு சரியாய் பதில் தர வாயெடுக்கையில், அவன் மேலும் கடுகென பொரிந்தான்.        ...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 3

இருள் மறைத்த நிழல் (தேனு) - 3    முத்துவுக்கு என்ன குழப்பமோ தெரியவில்லை, தன் சின்ன முதலாளி சென்ற திசையையே சில வினாடிகள் பார்த்தவன், "சரி தான்.. பெரியவர் எழ இன்னும் நேரமிருக்கு.. எப்படியும் பெரிய அய்யா சொன்னபடி தானே.. சின்ன அய்யாவும் அதானே சொன்னார்.." என்று தனக்குத்தானே பேசிக்கொண்டது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ முடிவுக்கு வந்த முத்து, "வாங்கம்மா" என்று அவளை மீண்டும் வீட்டினுள் மாடி நோக்கி அழைத்து சென்றான். ஆனால்.. அவனுடைய 'சின்ன அய்யா' கீழே ஒரு அறை என்று தானே சொன்னான்?! மனம் தன் பாட்டில் குழம்பினாலும், கேள்வி ஏதும் கேட்காமல், மாடியில் அவன் காட்டிய அறைக்குள் சென்றாள். கையில் இருந்த பெட்டியை தரையிலும், தோளில் கிடந்த தன் கைப்பையை அருகிருந்த ஒரு மேஜையிலும் வைத்துவிட்டு, "ரொம்ப thanks, முத்து" என்றாள்.                 முகமலர்ந்த முத்து, "இருக்கட்டும்மா, எதுவும் தேவை என்றால் ஒரு குரல் கொடுங்க, ஓடி வந்துடுவேன்" என்று பவ்யமாய் கூறி கீழே இறங்கி சென்றுவிட்டான். கதவை சற்று தள்ளியவுடன் அதுவே மூடிக்கொண்டது. auto-lock போல! AC பொருத்தப்பட்ட அ...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 4

இருள் மறைத்த நிழல் (தேனு) - 4                பல பல எண்ணங்கள்..கை தன் பாட்டில் சோப்பு போட அலுப்பு தீர குளித்து முடித்தாள் மிதுனா. கையோடு பாத்ரூமிற்கு கொண்டுசென்றிருந்த சுடிதாரை அணிய முற்படுகையில் தான் இந்த வீட்டில் சுடிதார் அனுமதிக்கப்பட்ட உடை தானா? என்று ஒரு சிறு சஞ்சலம் ஏற்பட்டது. இந்த காலத்தில் சுடிதார் தேசிய உடையே ஆகிவிட்டது தான். ஆனால் அவள் தாத்தாவிற்கு என்னவோ அதில் அவ்வளவு பிடித்தம் இல்லை. பேத்திக்காக, கொஞ்சம் விட்டுக்கொடுத்தவர், சேலையின் மகத்துவம் பற்றி அவ்வப்போது சொல்லி,  மறைமுகமாய் சுடிதாரை - சுடிதார் என்று இல்லை - சேலை அல்லாத எல்லா உடைகளையும் சாடுவார். அதனால் பெரும்பாலும் வெளியே செல்கையில் அவள் சேலை தான் உடுத்துவது.               இந்த சுந்தரம் தாத்தாவும், தன் பாட்டனை போன்றே சேலையே உன்னதம் என்று நினைப்பவராக இருந்து விட்டால்? வரும் போது சேலையில் தான் வந்திருந்தாள். வந்தவுடன் வேலைபற்றி வேறு பேச வேண்டுமே..சேலையில் கொஞ்சம் பெரிய பெண்ணாய் பொறுப்பாய் தெரிவோமே என்று ஒரு எண்ணம். இப்போது ஏதோ நி...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 5

இருள் மறைத்த நிழல் (தேனு) - 5          கீழ்த்தளம் ஆள் அரவமின்றி இருந்தது. நல்லவேளை தாத்தா தன் குட்டி தூக்கத்தை முடித்துவிட்டிருந்தார். அறை வாயிலில் அவள் தயங்கி நிற்பதை பார்த்தவர் முகம் மலர, "வாம்மா, குளித்தாயிற்றா? அறை வசதியாக இருக்கிறதா?" என்று அக்கறையாக விசாரித்தார்.                "ஆயிற்று தாத்தா. அறையும் வசதியாக..மிக வசதியாக இருக்கிறது" என்று தானும் முகமலர்ந்து உரைத்தாள் மிதுனா. "ரொம்ப சந்தோஷம், அம்மா. விஜி முன்பு உபயோகப்படுத்தியது. அடுத்த அறையை விரிவுபடுத்தி அதற்கு மாறியபின் இந்த அறை உபயோகத்தில் இல்லை. விஜியுடையது என்பதால் சகல வசதிகளும் இருக்கும். அதனால் தான் அந்த அறையையே உனக்கு ஒதுக்கி தர சொல்லிருந்தேன்" என்றார்.                வாய்க்கு வாய் 'விஜி', 'விஜி' என்கிறாரே.. யாராய் இருக்கும்? இவருக்கு ஒரே ஒரு பேரன் மட்டும் தான் என்று தாத்தா கூட சொன்னாரே..ஒரு வேலை ஆண் வாரிசு வகையில் இவன் ஒருவன் மட்டும் என்றிருப்பாரோ.. பார்த்தால் பேத்தியும் இருக்கிறாள் போல! திருமணமாகி இருக்குமோ? தன் தாத...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 6

இருள் மறைத்த நிழல் (தேனு) - 6      நளந்தன் சென்றபின் சிறிது நேரம் தாத்தா அவளோடு பேசிக் கொண்டிருந்தார். பேச்சு அவள் தாத்தாவைப் பற்றியதாகவே இருந்தது. "உனக்கு இங்கே என்ன வேண்டும் என்றாலும் தயங்காமல் என்னிடம் கேளம்மா" என்ற அவரது அன்பான குரல் தன் தாத்தாவில் மூழ்கி கிடந்த அவள் நினைவுகளை மீட்டு வந்தது. இருக்க இடம், பெரியவரின் பாதுகாப்பு..இன்னும் என்ன வேண்டும்?..இருக்கிறதே..பிறர் கையை எதிர்பார்க்காது வாழ வகை செய்யும் வேலை..அதுவும் வேண்டுமே..      அவளது எண்ணத்தைப்  படித்தவர் போல சுந்தரமே அந்த பேச்சையும் எடுத்தார். "உனக்கொரு வேலைத்  தேடித்  தருமாறு சந்தானம் கேட்டானம்மா. என் பேத்தி போல உரிமையோடே இங்கிருக்கலாம் நீ. ஆனால் அவனுக்கு உன் கையில் ஒரு வேலை இருக்க வேண்டும் என்று..சரி..அதுவும் சரிதான். ஆயிரம் இருந்தாலும் சுயசம்பாத்தியம் ஒரு பாதுகாப்புதான். உன் படிப்பையும் பாழடிக்கக்கூடாது  தான்." என்று சொல்லி மூச்சு வாங்கியவர் வினாடி தாமதத்திற்குப்பின் விட்ட இடத்தில் தொடர்ந்தார்.     "ஒரு சில வாரங்கள் பொறுத்துக் கொள்ளம்மா. விஜியின் வெளியூர் பயணமெல்...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 7

இருள் மறைத்த நிழல் (தேனு) - 7   மாலைவரை பொழுதை நெட்டித் தள்ளியவள், வெயில் சற்று தாழ்ந்தபின் வீட்டை சுற்றி இருந்தத்  தோட்டத்தில் சிறிது நேரம் உலவினாள். பெரிய தோட்டம். காலையில் இந்த வீட்டினுள் நுழைகையில் தெரிந்த அழகு மாலை வெயிலில் பன்மடங்காய் ஒளிர்ந்தது. பல வண்ண ரோஜாக்கள் திருப்தியாய் தலையாட்டின. சீராய் வெட்டப்பட்ட புல்வெளி பச்சை வெல்வெட்டாய் பளபளத்தது. இளங்காற்றில் சிறுகொடிகள் உடலசைத்து தாலாட்டின. குயில்களின் இசை மனதுக்கு இதம் சேர்த்தது. இருமுறை முழு தோட்டத்தையும் மெதுவாய் சுற்றி வந்தவள் தாத்தா எழுந்துவிட்டாரா என்று பார்ப்பதற்கு உள்ளே சென்றாள்.     அவர் அறையை எட்டும்போதே அவரது இருமல் சத்தம் அவளுக்கான பதிலைப்  பறைசாற்றியது. ஓடிச்சென்று அருகிருந்த flask-ஐ திறந்து ஒரு கோப்பையில் வெந்நீரை ஊற்றி அவரிடம் கொடுத்தாள்.    "நன்றியம்மா " என்று நெஞ்சை நீவிக் கொண்டே அதை வாங்கிக்  குடித்தார் சுந்தரம். "ஏதேனும் மாலை டிபன் சாப்பிட்டாயா அம்மா" என்று உபசரிக்கவும் செய்தார். அவரது அக்கறை இதமாக இருந்தது. " இருக்கட்டும் தாத்தா..முதலில் நீங்கள் ஏதாவது சாப்பிடுங்கள். நானே...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 8

இருள் மறைத்த நிழல் (தேனு) - 8 "ஏன் திருமணத்தை மறுக்கிறார், தாத்தா? காதல் என்று.." மேற்கொண்டு எப்படி கேட்பது என்று தெரியாமல் மிதுனா திணறினாள். 'யாகாவாராயினும் , நாகாக்க' சொன்ன திருவள்ளுவர் தாமதமாக தான் நினைவிற்கு வந்தார்! வந்த அன்றே சொந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கிறோமே..ஆனால் தாத்தாவோ மடை திறந்த நதியாய் தன் ஆற்றாமையை அப்படியே அவளிடம் கொட்டினார். "காதலுக்கு நான் ஒன்றும் எதிரியல்ல அம்மா. காலம் முழுமைக்கும் சேர்ந்து வாழப் போகிறவர்கள் தத்தம் துணையை தாமே தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமான விஷயமே. அதற்காக விஜி யாரைக்  கூட்டி வந்தாலும் 'வாம்மா' என்று கேள்வியின்றி ஏற்றுக்கொள்வேன் என்றும் அர்த்தமல்ல. ஒரு வீட்டிற்கு வரும் பெண் தன் கணவனை மட்டும் அனுசரித்துப்போனால் போதாது. அவனோடு, அவன் சுற்றத்தையும் தனதாய் பாவித்து அன்பு பாராட்ட வேண்டும். அப்படி ஒருத்தியை தான் நான் இந்த வீட்டிற்கு ஒளியேற்ற எதிர்பார்க்கிறேன். ஆனால், விஜியின் நட்பு வட்டம்..காக்கா கூட்டம். அவன் இதுவரை காதல் என்று எ..யாரையும் அழைத்து வந்ததில்லை.. அவனுக்கு ஒரு அசட்டுப் பிடிவாதம் அம்மா..எந்த விஷயமும் அவனே தான் முட...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 9

இருள் மறைத்த நிழல் (தேனு) - 9    இத்தனை ஆழ் நட்பு என்று தாத்தா சொல்லவேயில்லையே. ஆனால் திரும்பி திரும்பி சுந்தரம் தான் உனக்கு எல்லாம். அவன் சொல்படி நடந்து கொள்ளடா என்று பலமுறை சொன்னார்தான். அதெல்லாம் விருந்தினர் மனம் கோணாது சொல்பேச்சு கேட்டு சாமர்த்தியமாக இருக்க சொல்கிறார் தாத்தா என்றே அவள் பொருள் கொண்டிருந்தாள்.   கடந்த சில மாதங்களாக, தசைப் பிடிப்புத் தொந்தரவு அதிகமாகிவிடவே வலியால் படும் அவஸ்தைகளால் அவர் அதிகம் பேசுவதும் இல்லைதான். எல்லாம் ரத்தின சுருக்கங்கள்தான்.   விட்டத்தை வெறித்த பார்வை..அல்லது வலியால் நெற்றி சுருக்கிய பார்வை - இதுதான் அவள் தாத்தாவின் சமீபத்திய தோற்றம் ஆகிப்போனது.   தசைப் பிடிப்பை வைத்துக்கொண்டு காசியாத்திரையா என்று அவள் கலங்கியபோது, "நான் தனியாக செல்லவில்லை பாப்பா..என் நெருங்கிய சிநேகிதன் சுகவனத்தோடு தான் செல்கிறேன். பார், அவன் பையன் கூட ஒரு டாக்டர் தான். வேண்டிய மருந்து, மாத்திரை, மருத்துவ ஆலோசனை எல்லாம் எடுத்துக்கொண்டு துணையோடு தானே..சுகவனத்திற்கு நான் துணை..எனக்கு அவன் துணை.. எனது நீண்ட நாள் ஆசையும் கூட..இதுபோல எல்லாம் அமைந்து வருவத...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 10

இருள் மறைத்த நிழல் (தேனு) - 10 பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இரவு உணவு வேலையும் வந்தது. ஆனால் நளந்தன் வரவில்லை. முகம் வாடிய பெரியவர், "அவன் ஏதாவது பார்ட்டி, கீர்ட்டி என்று போயிருப்பானம்மா. அவனுக்காகக்  காத்திருந்தால்  உடம்பை கெடுத்துக் கொள்கிறேன் என்று அதற்கும் குதியாய்  குதிப்பான். யாருக்காக உடம்பைப் பார்த்துக்கொள்ளவேண்டும்? ச்சு..என்னவோ இன்றைக்கு நீ இருக்கிறாய்..  நாம் சாப்பிடலாம் வா " என்று மனம் நோக சொன்னவர், அவளை டைனிங் டேபிளுக்கு அழைத்து போய் 'இதை சாப்பிடு, இன்னும் சாப்பிடு, இதைக் குடி, அதை குடி' என்று பார்த்து பார்த்து அவளை உண்ண வைத்தார். புது இடத்தில், சங்கோஜத்தில் அவள் ஒழுங்காக சாப்பிடுவாளோ  மாட்டாளோ என்ற கனிவு..பால்ய சிநேகிதர் பேத்தியிடம் இத்தனை ஈடுபாடா? பாசத்திற்கு ஏங்குகிறார் மனிதர்! நெகிழ்ந்து போனாள் மிதுனா.   இரவு தன்னறைக்குச்  சென்று கதவடைக்க போனபோது தான், 'இந்த கதவு சரியாக சாத்தாதே' என்று நினைவிற்கு  வந்தது. இந்த ராத்திரியில் தாத்தாவிடமோ, வேலை ஆட்களிடமோ தொந்தரவு செய்வதும் சரியாகாது..சரி..முடிந்தவரை கதவை சாத்திவிட்டு...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 11

இருள் மறைத்த நிழல் (தேனு) - 11    தாத்தாவிடம் பேசியதில் பொதுவாக வேலையாட்கள் எல்லாரும் எழுவது ஐந்தரை , ஆறு மணி போல என்றும், தாத்தா மெதுவே ஏழரை போல விழிப்பார் என்றும் மிதுனா தெரிந்து வைத்திருந்தாள். அவள் எப்போதும் ஐந்தரைக்கு எழுந்து விடுபவள். புது இடம் என்பதாலோ என்னவோ முந்திய இரவு வெகு நேரம் உறக்கம் பிடிக்கவில்லை.  அதனால் காலை சற்று தாமதமாகத்தான் அவளுக்கு விழிப்பு தட்டியது. மணி ஏழு! அவசரமாக எழுந்து, பல் துலக்கி, குளித்து முடித்து கீழே செல்ல தயாராக ஒரு அரை மணி நேரம் பிடித்தது.   அறைக் கதவைத்  திறந்தால் அங்கே முத்து கையில் ஒரு காபி, டிபன் டிரேவுடன் நின்றிருந்தான். "அதுக்குள்ளே குளிச்சிட்டீங்களாம்மா? இதை மேஜை மேல வச்சிரட்டுங்களா? " என்ற கேள்வியோடு! அவற்றை தானே வாங்கி வைத்துவிட்டு, " நானே இறங்கி வந்திருப்பேனே முத்து..தாத்தா.."என்று அவள் தொடங்க, "இல்லம்மா, அய்யாக்கு அசதியா இருக்குன்னு இன்னும் தூங்கறாருங்க..உங்களுக்கு மேல எடுத்துட்டு வர சொல்லி நேத்தே சொல்லிட்டாருங்க.."என்றான்.  மேலும் மறுக்க தோன்றவில்லை அவளுக்கு. அந்த நளந்தனையும் தவிர்க்கலாமே!    "வரேனுங்...

இருள் மறைத்த நிழல் (தேனு) - 12

இருள் மறைத்த நிழல் (தேனு) - 12    அடுத்த சில தினங்கள் வீட்டில் நளந்தன் இல்லாததும் ஒரு நல்லதாய் போனது. மிதுனாவால் வீட்டு மக்களோடு  இயல்பாய் ஒன்ற முடிந்தது. அந்த வீட்டின் அன்றாட செயல்பாடு ஒரு வகையாய் புரிபட்டது. அரண்மனை போன்ற அந்த வீட்டில் சொந்தம் என்று பார்த்தால்.. சுந்தரமும், ஒரு நாள் முதல்வன் போல வந்த முதல் நாள் மட்டுமே காட்சி தந்த அந்த நளந்தனும் தான். இவர்கள் தவிர்த்து டிரைவர், தோட்டக்காரன், சமையல்காரன், வெளி வேலைக்கு ஒரு ஆள், மேல் வேலைக்கு ஒரு ஆள், அது போக ஒரு எடுபிடி என ஒரு ஆறு பேர். இவர்களோடு தற்காலிக வரவாக இவள் ஒருத்தி! வேலைக்காரர்களில் கூட ஒரு பெண் இல்லாதது அவளுக்கு வியப்பாய் இருந்தது. அவரவர் வேலையை பிசகின்றி செய்தனர் வேலையாட்கள் அனைவரும். அதிகப்படி பேச்சு ஒன்றும் காணோம். சுந்தரத்திற்கு ஏதோ இதய நோய். கூடவே ஆஸ்துமா. அதிகம் பேசினாலே மூச்சிரைப்புதான். 'பிசினஸ்' எல்லாம் பேரன் தான் பார்த்துக் கொள்கிறான் போலும். இந்த சின்ன வயதில் அவனது பொறுப்பு மிதுனாவுக்கு மலைப்பாய் இருந்தது. கெட்டிக்காரன் தான்..கூடவே கொஞ்சம் சிரித்தால் நன்றாக இருக்கும்.     வேளாவேளைக்கு உணவு ...