இருள் மறைத்த நிழல் (தேனு) - 54
சற்று நேரத்திற்கெல்லாம் அவள் அறைக்கு மறுபடியும் வந்த நளந்தன் அவள் அசையாது அதே நாற்காலியில் அமர்ந்திருப்பதை பார்த்ததும், திறக்கபடாத அவளது பெட்டியை காட்டி, "இது ஏன் இன்னும் அப்படியே இருக்கிறது. உள்ளிருப்பதை எடுத்து பழையபடி பீரோவில் அடுக்க வேண்டியது தானே?" என்றான்.
மிதுனா சலித்து கொண்டாள். "ச்சு.. இன்னும் ஓரிரு நாள் தானே. அதற்குள் எதற்கு உள்ளே வைத்ததை கலைக்க வேண்டும்?" என்றாள்.
அவன் புருவம் உயர்த்த, "தாத்தா ஓரிரு நாளில் வந்ததும், சொல்லி விட்டு போகத்தானே போகிறேன். எதற்கு வீண் வேலை?" என்றாள் அலட்சியமாக.
ஒரு கணம் அவளை ஆழ நோக்கியவன், "தாத்தா வர ஒரு மாதமாகும். அது வரை இப்படி பிளாட்பார்மில் தங்குபவள் போல பெட்டியும் கையுமாக அல்லல்படுவது தான் உன் விருப்பம் என்றால்.. நான் சொல்ல என்ன இருக்கிறது?" என்றான் அவளுக்கு குறையாத அலட்சியத்துடன்.
மிதுனாவிற்கு அவன் சொன்னது காதில் சரியாக விழவில்லையோ என்றே சந்தேகம் வந்துவிட்டது. ஒரு மாதம் என்றா சொன்னான்?! அத்தனை நாட்கள் இங்கே அவள் தனியாகவா? அவள் தன் காதுகளை தேய்த்து கொள்ள, "உன் காதில் ஏதும் பழுதில்லை" என்றான் நளந்தன் இதழ்க்கடையில் ஒரு முறுவலோடு.
"பின்னே.. தாத்தா ஓரிரு நாளில் வருவதாக அல்லவா சொன்னார்.. அப்படியே மிஞ்சி போனால் ஓரிரு வாரங்கள் ஆகலாம்.. நீங்கள் ஒரு மாதம் என்றா சொல்கிறீர்கள்?" என்றாள் மிதுனா நம்ப முடியாமல்.
"சொன்னார் தான். ஆனால் நீ செய்த குளறுபடியால் இப்போது நாள் கணக்கு, மாதம் என்றாகிவிட்டது" என்று அசட்டையாக சொன்னான்.
"நானா?! நான் என்ன செய்தேன்?" என்று கோபமாக உறுத்தாள் மிதுனா. வீண் பழி சுமத்த வந்துவிட்டானாக்கும்!
"ஆமாம் ,. நீயே தான். திடுமென உன்னை காணவில்லை என்றானதும் நான் என்ன செய்யட்டும்? நாளையே தாத்தா வந்து கேட்டால் என்ன சொல்வது? உன்னை எத்தனை நாளில் தேடி கண்டுபிடிக்க முடியுமோ தெரியவில்லை. அதுவரை தாத்தாவை கலவரபடுத்த வேண்டாமே என்று நான் தான் இன்னும் ஒரு மாதம் ஊர் சுத்தி பார்த்து விட்டு வாருங்கள், இங்கே மிதுனாவின் உயில் விஷயமாக அவளும் நானும் அலைந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லி பயணத்தை தள்ளி போட்டேன். நீயும் நானும் சமரசம் ஆகிவிட்டோம் என்று நினைத்து அவரும் சந்தோஷமாக தலையாட்டிவிட்டார். நீ இப்போது வேறு ஏதாவது பேசினாய் என்றால் அவர் பாவம் தவித்து போய்விடுவார். என்ன அவசரம்? வயதான மனுஷன்..ஒரு மாதம் தான் சந்தோசமாக இருக்கட்டுமே. அவர் உடல், மனம் தேறி இங்கு வந்ததும் நேரிலேயே சொல்லிவிட்டு போய் விடு. " என்றான் சர்வ சாதாரணமாக.
அவள் அவனை முறைத்து பார்க்க, சற்றும் சளைக்காமல் அந்த பார்வையை தாங்கி, "உன் தாத்தாவின் உயில், அப்புறம் உனக்கு சேர வேண்டிய சில பூர்வீக சொத்து, நில குத்தகை என பலதும் 'செட்டில்' செய்ய வேண்டி இருக்கிறது. நீ உன் பாட்டுக்கு அந்த 'பக்த மீரா ' மகளிர் விடுதியில் போய் உட்கார்ந்து கொண்டால், அது விஷயமாக நான் உன்னை அங்கு வந்து அடிக்கடி சந்திப்பது நன்றாகவா இருக்கும்? இருக்கும் இந்த ஒரு மாதத்தை உன் வேலையை முடிக்க நல்லவிதமாகவே பயன்படுத்திக் கொள்ளலாமே?" என்று வலியுறுத்தினான்.
ஒரேயடியாக போகாதே என்று சொல்லாமல், காரண காரியங்களை அடுக்கி, அதற்கும் மேலாக, ஒரு மாதத்திற்கு பின் நீ போகலாம், என்றும் அவன் வலியுறுத்தி பேசிய விதம் அவள் வேகத்தை தணித்தது. அவன் சொல்வதை காது கொடுத்து கேட்கவும் வைத்தது. ஒருவேளை அது தான் அவன் எண்ணமுமா? விட்டு பிடிப்பது போல? அப்படி ஒரு சந்தேகம் தோன்றினாலும், அவன் விட்டாலும் பிடித்தாலும் அவள் போவது போவது தான்.. என்றைக்கு போவது என்பது தானே கேள்வி.. என்று மனதை திடபடுத்திக் கொண்டாள்.
அவன் சொல்வது போல அந்த விடுதிக்கு இவன் அடிக்கடி வந்து போனால், அது அவள் பெயருக்கு தான் கேடு.. என்று அவனை ஒத்து போகும் போதே, அந்த விடுதியின் பெயர் இவனுக்கு எப்படி தெரியும் என்று திகைத்தாள் மிதுனா.
அதை கண்டறிவது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றான் நளந்தன்.
"மதியம் வீட்டில் உன்னை காணவில்லை என்றானதும், நீ செல்லும் கோவில், பூங்கா, லைப்ரரி என்று சுற்றினேன். வருகை பதிவிடும் லைப்ரரி லெட்ஜரை நான் பதட்டத்துடன் ஒருமுறைக்கு இருமுறை திருப்பி திருப்பி பார்ப்பதை கண்ட லைப்ரரியன் உன்னை தேடுவதை யூகித்து, நீ அருகிருந்த மகளிர் காவல் நிலையம் சென்றதாக சொன்னார். பின் அங்கு போய், அவர்களிடம் ஒருவழியாக பேசி சமாளித்து விவரம் கேட்டால், உனக்கு 'பக்த மீரா' விடுதி விலாசம் தந்ததாக சொன்னார்கள். வீட்டில் உன் பெட்டி இருந்ததால், எப்படியும் அதை எடுத்து போக நீ வீட்டிற்கு வருவாய் என்று யூகித்து நீ வந்ததும் எனக்கு போன் செய்யுமாறு காவலாளியிடம் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்தேன். அவனிடம் ஏதும் கால் வராததால், விடுதி வரை சென்று பார்த்துவிடலாம் என்று அங்கு போனால், நீ அப்போது தான் அங்கிருந்து கிளம்பினாய் என்றனர். பின் நேரே வீட்டிற்கு விரைந்து வந்தேன். வந்தால் அம்மிணி வீட்டை பூட்டிக் கொண்டு நிற்கிறீர்கள்" என்றான் நிதானமாக.
சமயோசிதமாக தான் செயல்பட்டிருக்கிறான். மெச்சி கொள்ள துடித்த மனதை அடக்கிய மிதுனா, ஒன்று தோன்ற, "ஐயையோ.. இன்னும் ஒரு மணி நேரத்தில் விடுதிக்கு வருகிறேன் என்று வார்த்தை கொடுத்துவிட்டு இப்படி ஒரு போன் கால் கூட செய்யாதிருந்தால் என்ன நினைப்பார்கள்.. நான் அந்த வார்டனை கூப்பிட்டு ஒரு மா....பிறகு வருகிறேன் என்று சொல்லி விடுகிறேன்" என்று பதட்டத்துடன் எழுந்தாள்.
ஒரு மாதம் கழித்து வருகிறேன் என்று சொல்லி அவன் கூற்றுக்கு பணிந்ததாக காட்டிக் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. அதனால் மழுப்பி 'பிறகு ' என்று சொன்னாள். அந்த வார்த்தை சறுக்கலை நளந்தனும் கவனித்தான்.
அந்த கோபமோ அல்லது இன்னமும் போவதில் குறியாக இருக்கிறாளே என்ற எரிச்சலோ.. ஏதோ ஒன்று மிக, "உன் வாக்கு ஒன்றும் தவறிவிட வில்லை. ரொம்ப கவலைபடாதே.நீ இப்போதைக்கு வருவதற்கில்லை என்று நேரிலேயே சொல்லிவிட்டேன். " என்றவன் அறையை விட்டு திரும்பி நடந்தான்.
இவன் யார் அதை சொல்ல என்று எரிச்சல் அவளுக்கு. "பெரிய பரோபகாரி! சொல்லிவிட்டாராம்" என்று அவள் தனக்குள் முணுமுணுக்க,
"பெரிய அரிச்சந்திரி! வார்த்தை கொடுத்து விட்டாளாம்" என்று அவன் வாய்க்குள் முணுமுணுத்து சென்றான்.

//"பெரிய பரோபகாரி! சொல்லிவிட்டாராம்" என்று அவள் தனக்குள் முணுமுணுக்க,
ReplyDelete"பெரிய அரிச்சந்திரி! வார்த்தை கொடுத்து விட்டாளாம்" என்று அவன் வாய்க்குள் முணுமுணுத்து சென்றான்.//
ஹாஹா.. Liked it :)
Anu, neenga ippidi rasichu padikaratha pakka romna nalla irukku. :)
ReplyDeletereally dat last two lines quoted by anu was really nice....
ReplyDeleteThanks, Suganya. :))))
ReplyDelete@Suganya
ReplyDeleteஹிஹி.. நானும் நீங்களும் ஒரே category தான் போல..
@anu,suganya,
ReplyDeleteennaiyum serththukkonga-pa.. enakum pidichathu. :-)
@தேனா,
ReplyDeleteஇருந்தாலும் உங்களுக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்திங்க.. ஹிஹி...
thenu, varthigal lam epdi therndhu eduthinga? nice words pa. great effort.
ReplyDeletevery nice words.
ReplyDeletenandri divya..divya nadri divya.. (divya name ketalae dhanush style-la dialogue varuthu pa.. :))
ReplyDeleteHello akka, nanum sari ovovoru chapter kum comment pani time waste panama last ah panalamnu kasta patu ilatha porumaya vara vechu poruthu poraen ana nenga enada na ponga akka...na unga mela romba kovama irukaen (bcoz ipdi pathila Vera valiyae ilama comment pana vechu novel padikaratha late akitingala��) but really really superb akka...and also Priya akka unga comments padikirathum oru habit ah mariduchu enaku....ok late achu na midhu va paka poraen apdiyae handsome man um sight adika poraen bye
ReplyDelete