Skip to main content

Posts

Kindle - இருள் மறைத்த நிழல் (தேனு) - Irul Maraitha Nizhal (by Thenu)

"இந்த கதையை திருடி திருடி போடறாங்க அக்கா. Author நீங்க னு சொல்லி சண்டை போட்டு போட்டு சலிச்சி போச்சு. உங்க blog ல மறுபடியும் போடுங்க, அக்கா. அப்போ தான் உங்களோடதுனு establish ஆகும்."-னு என் சனா (Sana Sana) தங்கச்சி ரொம்ப நாளா சொல்லும். Finally doing it. எனது முதல் கதையான இருள் மறைத்த நிழல் தொடரை rerun செய்யப் போகிறேன். சமீப காலமா என் கதைகளை thenunovels.blogspot.com ல தான் பதிவிடுவது வழக்கம். இந்த கதையை மட்டும் thenuwrites.blogspot.com ல வெளியாடலாம்னு இருக்கேன். ஏன்னா அங்கே தான் இந்த கதையை முதன் முதலில் பதிவிட்டேன். 2010 தொட்டு பல வருடம் பல வாசகர்கள் அங்கே கமெண்ட்ஸ் போட்டிருக்காங்க. இந்த கதையை நான் தான் எழுதினேன் என்று copyrights claim செய்ய அதுவும் ஒரு ஆதாரம். அதனாலே இந்த கதையை மட்டும் அந்த original blogல இருந்து புதிய தளத்திற்கு மாற்றவில்லை. கதை rerun அங்கேயே நடக்கும். Links ஐ whatsapp குரூப் மற்றும் thenunovels blog ல பதிவிடறேன். கதை blog ல வெளியாகும் சமயம், Amazon policy padi, Kindle Unlimited ல இருந்து ரிமூவ் செய்து விடுவேன். அதனால் Free deals இருக்காது. அதுவரை வாராவார...

Nadhi Thediya Kadal Part 1 - Available - Kindle

  Kindle USA   Kindle India

The Author Speaks..

Subscribe to the Audio story on YouTube Channel Thenulagam https://www.youtube.com/@thenulagam    Feb 14th 2010 உங்களுக்கு ரமணிசந்திரன் நாவல்கள் பிடிக்குமானால் நிச்சயமாக இந்த கதையும் பிடிக்கும். Just in time, for the Valentines Day!  ரமணிசந்திரன்  அம்மாவின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் பட்டியல் சுஜாதா, சிவசங்கரி, லக்ஷ்மி, பாலகுமாரன், கல்கி, அகிலன், ராஜேஷ்குமார், அனுராதாரமணன் என வளர்ந்து கொண்டே போகும். அது முடிவற்றது. ஆனால் ஒரு காலகட்டத்தில் எனது ஆர்வம் ரமணிசந்திரன் நாவல்களில் நங்கூரமிட்டுவிட்டது.   எல்லாம் சரி... இப்படிப்பட்ட தீவிர வாசகி திடீரென்று எப்படி ஒரு அமெச்சூர் எழுத்தாளரானாளாம்? அது ஒரு எதிர்பாராத திருப்பம்.  என்னிடம் ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் நூல் வடிவில் உள்ளன. படித்து முடித்த கதைகள் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் அவற்றை படிப்பதை கண்ட என் கணவர் என் அமைதியற்ற தன்மையைப் பார்த்து சிரித்தார். "அதான் ரமணிசந்திரன் கதைகள் எல்லாம் ஒரு வகையான  கட்டமைப்புலே இருக்கும்னு சொல்றியே..  ...